இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்கவுள்ளது.
கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளதால் அவர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவில்லை. இதையடுத்து அடிலெய்டில் நடைபெறவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியுடன் ரோஹித் சர்மா இணைந்து கொள்வார் எனத் தெரிகிறது.
கேப்டன் ரோஹித் சர்மா இல்லாததால், அணியின்...
சிட்னியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 32, ஆரோன் ஹார்டி 28, கிளென் மேக்ஸ்வெல் 21, ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 20 ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை குவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் சீரான இடைவெளியில்...
ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் சென்னை எழும்பூரில்உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வந்தது. 31 அணிகள் கலந்துகொண்ட இந்த தொடரின் இறுதிப் போட்டியில்நேற்று ஒடிசா - ஹரியானா அணிகள் மோதின.இதில் ஒடிசா 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி சார்பில் லக்ரா ஷில்லானந்த் ஹாட்ரிக் கோல் (48, 57 மற்றும் 60-வது நிமிடங்கள்) அடித்து அசத்தினார்....
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது 4-வது லீக் ஆட்டத்தில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் சென்ற சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சங்கீதா குமாரி 32-வது நிமிடத்திலும், சலீமா 37-வது நிமிடத்திலும் பீல்டு கோல் அடித்தனர். 60-வது நிமிடத்தில்...
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கெபர்காவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பதிலடி கொடுத்த தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி...
பிசிசிஐ எதிர்ப்பு எதிரொலி: சாம்பியன்ஸ் டிராபி கோப்பை சுற்றுப்பயணத்தை நிறுத்தி வைத்தது ஐசிசி
admin - 0
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைக்கு பிசிசிஐ கடும் ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தை ஐசிசி நிறுத்தி வைத்தது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 2025-ம் ஆண்டு பிரப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணியை அனுப்ப முடியாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும்...
ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் மணிப்பூர் - ஒடிசா மோதின.
இதில் ஒடிசா 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. ஒடிசா அணி தரப்பில் நிலம் சஞ்ஜீப் (13-வது நிமிடம்), லக்ரா ஷில்லானந்த் (20-வது நிமிடம்), குஜூர் பிரசாத் (52-வது நிமிடம்), சந்தீப் ஷிராம்கோ (52-வது நிமிடம்)...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரித்திகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தம்பதியின் இரண்டாவது குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. தன் மனைவி ரித்திகாவின் பேறு காலம் நெருங்கிய காரணத்தால் ரோஹித் இந்தியாவில் உள்ளார். இந்த நிலையில் அவர்களுக்கு நேற்று (நவ.15) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது...
ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் ஜப்பான் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிருக்கான ஒற்றையர் 2-வது சுற்றில் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 23-ம் நிலை வீராங்கனையான கடனாவின் மிச்செல் லியை எதிர்த்து விளையாடினார். இதில் சிந்து 21-17, 16-21, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கெபர்காவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பதிலடி கொடுத்த தென் ஆப்பிரிக்க அணி 3...








