Google search engine
ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் மணிப்பூர் - ஒடிசா மோதின. இதில் ஒடிசா 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. ஒடிசா அணி தரப்பில் நிலம் சஞ்ஜீப் (13-வது நிமிடம்), லக்ரா ஷில்லானந்த் (20-வது நிமிடம்), குஜூர் பிரசாத் (52-வது நிமிடம்), சந்தீப் ஷிராம்கோ (52-வது நிமிடம்)...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரித்திகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தம்பதியின் இரண்டாவது குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. தன் மனைவி ரித்திகாவின் பேறு காலம் நெருங்கிய காரணத்தால் ரோஹித் இந்தியாவில் உள்ளார். இந்த நிலையில் அவர்களுக்கு நேற்று (நவ.15) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது...
ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் ஜப்பான் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் 2-வது சுற்றில் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 23-ம் நிலை வீராங்கனையான கடனாவின் மிச்செல் லியை எதிர்த்து விளையாடினார். இதில் சிந்து 21-17, 16-21, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கெபர்காவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பதிலடி கொடுத்த தென் ஆப்பிரிக்க அணி 3...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்கால் - மத்திய பிரதேசம் அணிகள் இடையிலான போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் பெங்கால் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி முதல் இன்னிங்ஸிஸ் 19 ஓவர்களை வீசி 4 மெய்டன்களுடன், 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும் 90 டாட் பால்கள் வீசியிருந்தார். அத்துடன் 57 ஓவர்கள் பீல்டிங் செய்தார். 2-வது இன்னிங்ஸிலும் ஷமி...
76-வது சீனியர் தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள சைக்கிள் ஓடுதளத்தில் நாளை (நவம்பர் 15-ம் தேதி) தொடங்கி வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடருன் 52-வது ஜூனியர், சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளும் இணைத்து நடத்தப்படுகிறது. இதில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 700 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்....
ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நாக் அவுட் சுற்றை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பஞ்சாப், மணிப்பூர் அணியுடன் மோதியது. இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பஞ்சாப் அணி தரப்பில் மணீந்தர் சிங் (18-வது நிமிடம்), ரவ்னீத் சிங்...
ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் ஜப்பான் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானுடன் மோதினார். 38 நிமிடங்கள் நடைபெற் இந்த ஆட்டத்தில் சிந்து 21-12, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவு...
இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணி வீரர்கள் வாகா மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியதாவது: இரு அணியிலும் வேகப்பந்து வீச்சு தாக்குதல் வலுவாக இருப்பதால் டாப்...
பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான பயிற்சியில் இந்திய அணியினர் பழைய பெர்த் ஸ்டேடியமான ‘வாக்கா’வில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சி அமர்வுக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கக் கூடாது என்று கண்டிப்பான அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வாக்கா மைதானம் மறுகட்டுமான ஒப்பந்தத்தை எடுத்துள்ள கட்டுமான நிறுவனம் கட்டுமானப் பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்யும்...