Google search engine
தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரஃபேல் நடால். டேவிஸ் கோப்பை தொடரின் காலிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரரிடம் தோல்வியடைந்த நிலையில் கலங்கிய கண்களுடன் நடால் விடைபெற்றார். இந்த டேவிஸ் கோப்பை தொடருடன் தான் ஓய்வு பெறுவதை கடந்த மாதமே நடால் அறிவித்துவிட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நெதர்லாந்து அணியின் போடிக் வான் டி-யை எதிர்த்து களமிறங்கிய நடால், ஆரம்பத்தில் முன்னேறினாலும், முதல் செட்டில்...
பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் பந்துகள் எகிறும் பெர்த் ஆப்டஸ் மைதான ஆடுகளத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் நாளை மறுநாள் (நவ.22) ஆடுகின்றன. இந்த போட்டிக்கான இந்திய லெவன் என்னவென்பது அனைவருக்கும் ஆர்வத்தைக் கிளப்பக் கூடிய ஒன்று. ஏனெனில், இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா இல்லாததால் கே.எல்.ராகுல் மீண்டும் தொடக்க வீரர் இடத்துக்கு முன்னேற்றப்படுகிறார். ராகுல், ஜெய்ஸ்வால் தொடங்க அடுத்த 3-ம் நிலையில் ஆடும்...
2025-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதி அரேபி​யா​வின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த மாதம் 31-ம் தேதி ஐபிஎல் தொடரில் பங்கேற்​கும் அனைத்து அணிகளும் முக்​கியமான வீரர்களை தக்க​வைத்​துக் கொண்டு மற்ற வீரர்களை விடு​வித்தனர். இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்தை அந்த அணி நிர்வாகம் தக்கவைத்​துக் கொள்​ளாமல் விடு​வித்து...
எஃப்​ஐபிஏ ஆசிய கோப்பை கூடைப்​பந்து போட்டி வரும் 2025-ம் ஆண்டு சவுதி அரேபி​யா​வில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. போட்​டியை நடத்​தும் சவுதி அரேபியா நேரடியாக தகுதி பெற்ற நிலை​யில் மற்ற அணிகளை தேர்வு செய்​வதற்கு தகுதி சுற்று போட்​டிகள் நடத்​தப்​பட்டு வருகின்றன. தகுதி சுற்றில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இவை 6 பிரி​களாக பிரிக்​கப்​பட்டு ஒவ்வொரு பிரி​விலும் 4...
இலங்கை கிரிக்​கெட் அணி இம்மாத இறுதி​யில் தென் ஆப்பிரிக்​கா​வில் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​கிறது. இந்த தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டது. இடது கை சுழற்​பந்து வீச்​சாளரான லசித் எம்புல்​தெனியா 2 வருடங்​களுக்​குப் பிறகு அணிக்கு திரும்பி உள்ளார். கடைசியாக லசித் எம்புல்​தெனியா கடந்த 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலி​யா​வுக்கு எதிரான டெஸ்ட் போட்​டி​யில் விளை​யாடி​யிருந்​தார். தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள்...
சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி சீனாவில் உள்ள ஷென்சென் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனுபமா உபாத்யாயா, 15-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை எதிர்த்து விளையாடினார். 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அனுபமா 21-17, 8-21, 22-20 என்ற செட் கணக்கில் பெய்வென் ஜாங்கை வீழ்த்தினார்.
இந்திய மகளிர் கிரிக்​கெட் அணி வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலி​யா​வில் சுற்றுப்​பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் விளை​யாடு​கிறது. இந்த தொடர் ஐசிசி மகளிர் சாம்​பியன்​ஷிப்​பின் ஓர் அங்கமாக உள்ளது. இந்நிலை​யில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய மகளிர் அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டது. இதில் தொடக்க வீராங்​கனையான ஷபாலி வர்மா மோசமான பார்ம் காரணமாக நீக்​கப்​பட்​டுள்​ளார். 20 வயதான ஷபாலி வர்மா கடைசியாக விளை​யாடிய 6 ஆட்டங்​களில்...
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜப்பானுடன் நேற்று மோதியது. இதில் இந்திய இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் 48-வது நிமிடத்தில் நவ்னீத் கவுர் பெனால்டி ஸ்டிரோக்கில் கோல் அடித்தார். தொடர்ந்து 56-வது நிமிடத்தில் லால்ரெம்சியாமி பீல்டு...
ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 4-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார். ஒரு மணி நேரம் 24 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம்...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேனான பாபர் அஸம் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர், 37 ரன்களை கடந்த போது சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த இந்திய அணியின் விராட் கோலியை (4,188) பின்னுக்குத் தள்ளினார். 30 வயதான பாபர் அஸம் டி20-ல் 119 இன்னிங்ஸில் விளையாடி 4,192 ரன்களை சேர்த்துள்ளார். இந்த வகை...