4-வது மாநில ரேங்​கிங் டேபிள் டென்​னிஸ் தொடர் சென்னை ஐசிஎஃப் உள்​விளை​யாட்டு அரங்​கில் நடை​பெற்று வந்​தது. இதன் ஆடவர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் பால​முரு​கன் (ஐடிடிசி) 8-11, 14-12, 11-6, 8-11, 11-3, 10-12, 11-8 என்ற செட் கணக்​கில் கார்த்​திக்​கேயனையும் (எஸ்கேஅகாட​மி), மகளிர் பிரி​வில் யாஷினி (எஸ்கே அகாட​மி) 11-9, 12-14, 11-9, 11-6, 11-2 என்ற செட் கணக்​கில் அம்​ரு​தாபுஷ்பக்கையும் (ஆர்பிஐ)தோற்​கடித்து பட்​டம் வென்​றனர். யு-17...
மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான முதல் டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது ஆஸ்​திரேலிய அணி. கிங்​ஸ்​டனில் உள்ள சபினா பார்க் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 189 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக ராஸ்​டன் சேஸ் 32 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன்...
ஃப்​ரீஸ்​டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடரின் 4-வது கட்ட போட்டி அமெரிக்​கா​வின் லாஸ் வேகாஸ் நகரில் நடை​பெற்​றது. இதன் இறு​திப் போட்​டி​யில் அமெரிக்​கா​வின் லெவன் அரோனியன் 1.5-0.5 என்ற கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த ஹான்ஸ் மோக் நீமனை தோற்​கடித்து முதலிடம் பிடித்​தார். 3-வது இடத்​துக்​கான ஆட்​டத்​தில் உலகின் முதல் நிலை வீர​ரான நார்​வே​யின் மேக்​னஸ் கார்ல்​சன் 1.5-0.5 என்ற கணக்​கில் அமெரிக்​கா​வின் ஹிகாரு நகமு​ராவை தோற்​கடித்​தார். இந்​தி​யா​வின் அர்​ஜுன்...
பாகிஸ்தான் உடனான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது வங்கதேசம். வேகப்பந்து வீச்சாளர்கள் டஸ்கின் அகமது மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் அபாரமாக பந்து வீசி வங்கதேச அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று டாக்காவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற...
2-வது உலக சாம்​பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் கிரிக்​கெட் தொடரிலிருந்து இந்​திய வீரர்​கள் வில​கிய​தால் இந்​தி​யா, பாகிஸ்​தான் அணி​கள் இடையே நடை​பெற​இருந்த போட்டி ரத்​தானது. ஓய்வு பெற்ற கிரிக்​கெட் வீரர்​கள் பங்​கேற்​கும் 2-வது உலக சாம்​பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் தொடர் இங்​கிலாந்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்​கா, ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்​து, பாகிஸ்​தான், மேற்கு இந்​தி​யத் தீவு, தென் ஆப்​பிரிக்கா ஆகிய...
இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து வரும் இந்​திய கிரிக்​கெட் அணி​யில் 2 வீரர்​கள் காயமடைந்​துள்​ள​தால் வேகப்​பந்து வீச்​சாளர் அன்​ஷுல் காம்​போஜ் இணை​ய​வுள்​ளார். இந்​திய கிரிக்​கெட் அணி இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 ஆட்​டங்​கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. இதில் முதலா​வது மற்​றும் 3-வது டெஸ்ட் போட்​டி​யில் இங்​கிலாந்​தும், 2-வது டெஸ்ட் போட்​டி​யில் இந்​தி​யா​வும் வெற்றி பெற்​றன. இதைத் தொடர்ந்து இங்​கிலாந்து அணி 2-1 என்ற கணக்​கில் தொடரில் முன்​னிலை​யில்...
சாம்​பியன்ஸ் லீக் டி20 கிரிக்​கெட் தொடரை மீண்​டும் நடத்த சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் (ஐசிசி) முடிவு செய்​துள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது. 2009-ம் ஆண்டு தொடங்​கப்பட்ட சாம்​பியன்ஸ் லீக் டி20 கிரிக்​கெட் தொடர் 2014-ம் ஆண்டு வரை நடை​பெற்​றது. கிரிக்​கெட் ரசிகர்​களின் போதிய ஆதர​வின்​மை, ஸ்பான்​சர்​ஷிப் ஆகிய பிரச்​சினை​கள் காரண​மாக 2015-ம் ஆண்டு இந்த தொடரை நிறுத்​து​வ​தாக ஐசிசி அறி​வித்​தது. இந்​நிலை​யில் சாம்​பியன்ஸ் லீக் டி20 தொடரை மீண்​டும் நடத்த ஐசிசி அனு​மதி...
போர்ச்​சுகலில் நடை​பெற்ற மையா சிடாடே டோ டெஸ்​போர்டோ 2025 தடகளப் போட்​டி​யின் நீளம் தாண்​டு​தலில் இந்​திய வீரர் முரளி ஸ்ரீ சங்​கர் தங்​கம் வென்​றார். இந்​தப் போட்​டிகள் போர்ச்​சுகலின் மையா நகரில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றன. இந்​தப் போட்​டி​யில் நீளம் தாண்​டு​தலில் பிரி​வில் பங்​கேற்ற முரளி ஸ்ரீசங்​கர், 7.75 மீட்​டர் நீளம் தாண்டி முதலிடத்​தைப் பிடித்​தார். போலந்து வீரர் பியோட்​டர் டார்​கோவ்​ஸ்கி 2-வது இடத்​தை​யும், ஆஸ்​திரேலி​யா​வின் கிறிஸ் மித்​ரேவ்​ஸ்கி...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2024-ம் நிதியாண்டில் ரூ.9,741.7 கோாடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதில், ஐபிஎல் மூலமான வருவாய் முக்கிய ஆதாரமாக உள்ளது புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.அதன்படி ஐபிஎல் மூலமாக பிசிசிஐ-க்கு கிடைத்த வருவாய் பங்குமட்டும் ரூ.5,761 கோடியாக உள்ளது. மேலும், மகளிர் பிரீமியர் லீக் மற்றும் உலகளாவிய உரிமைகள், ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை மூலமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான வருவாய் ஆதாரத்தை பிசிசிஐ உருவாக்கியுள்ளது. ஐபிஎல்...
 ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று ஹராரேவில் நியூஸிலாந்து - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வெஸ்லி மாதவரே 32 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்தார். பிரையன் பென்னட் 21, டோனி முன்யோங்கா 13, கேப்டன்...