சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில், ரூ.151 கோடி மதிப்பில் சில்லறை மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய நவீன மந்தைவெளி பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் இணைந்து சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. இந்த நிறுவனம் ரூ.151 கோடி மதிப்பில் மந்தைவெளி பேருந்து முனையம் மற்றும் பணிமனையில் நவீன...
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப் பணியால், தேஜஸ், மன்னை, குருவாயூர் விரைவு ரயில் உள்பட 5 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளளது.
தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, நடைமேம்பாலம் அமைக்க ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
இதனால், எழும்பூர் - புதுச்சேரி இடையே இயக்கப்படும் புதுச்சேரி மெமு பாசஞ்சர் ரயில்...
திரும்பிய பக்கமெல்லாம் குப்பை… திக்கித் திணறும் திருப்பூர் மாநகராட்சி! – ‘கூட்டணி தர்மம்’ காக்கின்றனவா திமுக கூட்டணி கட்சிகள்?
admin - 0
திடக்கழிவு மேலாண்மையில் திருப்பூர் மாநகராட்சி படுதோல்வி அடைந்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், கூட்டணியில் இருப்பதால் இந்த விஷயத்தில் மாநகராட்சிக்கு எதிராக வாய்திறக்க திமுக கூட்டணிக் கட்சிகள் தயங்குவதாக சர்ச்சை வெடித்திருக்கிறது.
திருப்பூர் மாநகரில் தினமும் சேகரமாகும் 700 டன்னுக்கும் அதிகமான குப்பைகளை காலம் காலமாக பாறைக்குழிகளில் நிரப்பி வருகிறது மாநகராட்சி. இந்த நிலையில், திருப்பூர் ஒன்றியம் காளம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பைகளைக் கொட்ட எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் மாற்று இடம் கிடைக்காமல்...
இவரை மாற்றாவிட்டால் 3 தொகுதிகளிலும் திமுக தோற்கும்! – மாவட்டச் செயலாளருக்கு எதிராக வெடிக்கும் மாவட்ட துணைச் செயலாளர்
admin - 0
“மாவட்டச் செயலாளரை மாற்றாவிட்டால் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் திமுக தோல்வியடையும்” மயிலாடுதுறை மாவட்ட திமுக துணைச் செயலாளர் மு.ஞானவேலன் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் பகிரங்கமாக கொளுத்திப் போட்ட இந்த நெருப்பு இன்னும் அணையாமல் கனன்று கொண்டிருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ-க்களான குத்தாலம் கல்யாணம், அவரது மகன் க.அன்பழகன் ஆகியோர் மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்எல்ஏ-வுமான நிவேதா எம்.முருகனுக்கு எதிராக அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்கள். தற்போது...
அகமதாபாத் விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்து காரணமாக அங்கு செல்ல முடியாமல், நடுவானில் விமானம் திரும்பி சென்னை வந்தடைந்தது.
சென்னையில் இருந்து நேற்று பிற்பகல் 1:30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு 182 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இதற்கிடையே, அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதால், ஓடுபாதை முழுவதுமாக மூடப்பட்டு விட்டது.
இதையடுத்து, அகமதாபாத்தை நெருங்கிக் கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானிக்கு...
மேற்கு வங்கத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ரவீந்திர நகர் பகுதியில் நேற்று போலீஸாருக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரவீந்திரநகர் காவல் நிலையம் அருகே நேற்று ஒரு கூட்டம் கூடத் தொடங்கியபோது, அது திடீரென வன்முறையாக மாறியது. அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் மீது அந்த கும்பல் கற்களால் தாக்கியது. இதனையடுத்து கும்பலைக் கலைக்க காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை...
விடுபட்ட மகளிருக்கு விரைவில் உரிமைத்தொகை: முதல்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி தகவல்
admin - 0
விடுபட்ட மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான முதல்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மாநில அளவிலான மணிமேகலை விருதுகளை வழங்கி, 33,312 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 3 லட்சத்து 76,443 பேருக்கு ரூ.3,134.21 கோடி வங்கிக் கடன் வழங்கும் நிகழ்வை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, சுயஉதவிக் குழுக்களின்...
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் (பார்க்கிங்) வாகனங்களை ஒழுங்காக வரிசைப்படுத்தாததால், மீண்டும் இடநெருக்கடி பிரச்சினை தலைதூக்கியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவையில், விம்கோ நகர் - விமானநிலையம், சென்ட்ரல் - பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் உள்ள நிலையங்களுக்கு பயணிக்க, ஆலந்தூர் மெட்ரோ ரயில்நிலையத்தில் மாறிக் கொள்ளும் வசதி இருப்பதால், இந்நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.
‘ஹவுஸ்புல்’ - ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இடதுபக்க பார்க்கிங்...
கோவையில் கடந்த ஏப்ரல் 27-ல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. அன்றைய தினம் கோவைக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டுப் போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு உதயநிதி வரவில்லை. அப்போது இதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை முன்னிறுத்தி திமுக-வினர் நடத்திய தடாலடி வசூல் வேட்டை தெரிந்து தான் அந்த நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்த உதயநிதி வரவில்லை...
விட்டதை பிடிக்க வரும் வீரமணி… விட்டால் போதும் என ஓடும் தேவராஜி? – ஜோலார்பேட்டையில் ஜொலிக்கப் போவது யார்?
admin - 0
2021 தேர்தலில் தோல்வியை தழுவிய அதிமுக அமைச்சர்களில் முக்கிய மானவர் கே.சி.வீரமணி. ஜோலார்பேட்டை தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றிபெற்ற வீரமணி, இரண்டு முறையும் அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். அந்த செல்வாக்கில் கடந்த முறையும் இங்கு போட்டியிட்டார். ஆனால், மு.க.ஸ்டாலினே இங்கு வந்து போட்டியிட்டாலும் வீரமணியை வீழ்த்துவது கடினம் என்று சொல்லப்பட்ட நிலையில், வெறும் 1,091 வாக்குகள் வித்தியாசத்தில் திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளர் க.தேவராஜியிடம் தோற்றுப் போனார் வீரமணி.
தொகுதி...










