பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வீடு திரும்பி இருக்கும் நிலையில், ராமதாஸுக்கு ஏதாவது ஆனால் சும்மா விடமாட்டேன் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் சென்னையை அடுத்த உத்தண்டியில் நேற்று நடந்தது. இதில், நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த பாமக இளைஞர் அணி தலைவர் பொறுப்புக்கு செஞ்சி சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர்...
“கூட்டம் வெற்றி தராது… கூட்டணிதான் வெற்றி தரும்!” – தேர்தல் களத்தை அலசும் ஜான் பாண்டியன் நேர்காணல்
admin - 0
தேர்தல் வந்துவிட்டால் மற்ற கட்சிகளால் தேடப்படும் நபராகிவிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனை 'இந்து தமிழ் திசை' பேட்டிக்காக தொடர்பு கொண்டோம். "நான் மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டேன்... சரி என்று பட்டதை தடாலடியாகச் சொல்லி விடுவேன். அதனால் நான் பேசியதில் தேவையில்லாததை வெளியிட்டு சர்ச்சையாக்கி விடாதீர்கள்” என்ற நிபந்தனையுடன் பேச ஆரம்பித்தார்.
திமுக ஆட்சியில் சாதிய மோதல்கள் கட்டுக்குள் உள்ளதா... சட்டம் -ஒழுங்கு எப்படி...
‘கூடுதல் தொகுதிகள் தராவிட்டால்…’ – செல்வப்பெருந்தகைக்கு செக் வைக்கும் காங்கிரஸ் எம்.பி-க்கள்
admin - 0
“இம்முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்போம்” என தேர்தலுக்குத் தேர்தல் கொளுத்திப் போடுவதும் கடைசியில், முந்தைய தேர்தலைவிட குறைவாகவே வாங்கிக் கொண்டு அமைதி ஆகிவிடுவதும் தமிழக காங்கிரஸாருக்கு பழகிப்போன சமாச்சாரம். ஆனால், இம்முறை அதிக தொகுதிகள் என்பதோடு ஆட்சியில் பங்கு என்ற முழக்கமும் காங்கிரஸ் வட்டாரத்தில் சத்தமாகக் கேட்க ஆரம்பித்திருக்கிறது. அதற்குக் காரணம், 'அதிகாரத்தில் பங்கு' வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக தலைவர் விஜய்.
ஆட்சியில் பங்கு தருவோம் என விஜய் சொன்னதிலிருந்தே...
‘அனுமதி பெற்றுத்தான் கரூர் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை. கரூர் பாதுகாப்பான ஊர். விஜய் தைரியமாக வரலாம்’ என அண்ணாமலை தெரிவித்தார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தாயார் மறைவையொட்டி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அஞ்சலி செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் எல்லோருக்கும் எந்த இடத்துக்கு செல்லவும் உரிமை உண்டு. என்னைப் பொறுத்தவரை...
தேர்தலை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் அடுத்த 2 மாதங்களில் 4 மண்டல மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணிக்கு கூடுதலாக 5 லட்சம் பொறுப்பாளர்களை நியமிக்கவும் முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
'வெல்வோம் 200... படைப்போம் வரலாறு என்ற முழக்கத்துடன் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது ஆளும் கட்சியான திமுக. அதன் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக நிர்வாகிகளை அழைத்துப் பேசி உட்கட்சி பிரச்சினைகளை சரிசெய்து வருகிறார்....
கட்சியின் கீழ்மட்டத்தில் நடக்கும் உள்ளடிகள் அவ்வளவாக தலைமைக் கழகங்களை எட்டிவிடாது. அதனால் மாவட்டச் செயலாளர்கள், மாண்புமிகுக்களால் பாதிக்கப்பட்டுக் கிடப்பவர்கள் 'என்னத்த சொல்ல... எங்க போய்ச் சொல்ல' என்று மனக்குமுறலைக் கொட்டி பரிகாரம் தேட வழிதெரியாமல் உட்கார்ந்திருப்பார்கள். அப்படி இருப்பவர்களை ஆறுதல்படுத்துவதற்காகவே 'கழக' கட்சி தரப்பில் மாவட்ட வாரியாக, 'உடன்பிறவா' சகோதரர்களை அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார் தலைவர்.
இதுவரை சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளைச் சார்ந்த சகோக்களிடம் ஆராய்ச்சி மணி கட்டாத...
கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே, இபிஎஸ்ஸையும் சேர்த்துச் சாடுகிறார். அவரது இந்த திடீர் பாய்ச்சலுக்கும் காரணம், தவெக உடனான தனது கூட்டணிக் கனவு சிதைந்து விடுமோ என்ற ஆதங்கம் தான் என்கிறார்கள்.
"கரூர் சம்பவத்துக்கு விஜய் தார்மிக பொறுப்பேற்றிருக்க வேண்டும். அது குற்றத்தை ஏற்பது ஆகாது. இதில்...
தஷ்வந்த்தின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுவிக்க உத்தரவு – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
admin - 0
சென்னையில் 6 வயது சிறுமி ஹாசினி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுவித்தும் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் அரசு தரப்பு குற்றச்சாட்டை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்க தவறியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பாபு மற்றும் ஸ்ரீதேவி தம்பதியின் 6 வயது மகள் ஹாசினி. இவர் கடந்த 2017 பி்ப்.5-ம் தேதி திடீரென...
தமிழகத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக அதிமுக துணையுடன், தற்போது புதிய கட்சிகளை பாஜக தேடிக் கொண்டிருக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார்.
கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாது: மத்திய பாஜக அரசு திமுகவை வீழ்த்த பல்வேறு...
தொலைபேசியில் தொடர்புகொண்டு விஜய்க்கு ஆறுதல் கூறிய பழனிசாமி! – 2026 ஜனவரியில் கூட்டணி குறித்து உடன்பாடு?
admin - 0
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் கடந்த செப்.27-ம் தேதி கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்வம் தொடர்பாக விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். உயிரிழந்தோர் அனைவருக்கும் அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி...










