Google search engine
மாநில தலைவராக அண்ணாமலை இருந்தவரைக்கும் தமிழக பாஜக பரபரப்பான கட்சியாகப் பார்க்கப்பட்டது. திமுக, அதிமுக கொடிகள் கட்டிய கார்களுக்கு நிகராக பாஜக கொடி கட்டிய கார்களும் பட்டி தொட்டிகளில் கூட பவனி வந்தன. ஆனால், தற்போது இவை அனைத்துமே ஸ்லீப் மோடுக்குப் போய்விட்டது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறது. போதாக்குறைக்கு, அதிரடி அரசியல்வாதியான அண்ணாமலையும் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி பொழுதைக் கழிக்குமளவுக்கு ‘சும்மா’ இருக்கிறார். தமிழக பாஜக-​வின் புதிய தலை​வ​ராக...
திருநின்​றவூர் நகராட்​சியை கண்​டித்து அதி​முக சார்​பில் ஜூலை 25-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறவுள்​ளது. இது தொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை: திரு​வள்​ளூர் மாவட்​டம், திருநின்​றவூர் நகராட்சிக்கு உட்​பட்ட இடங்​களில் குப்பை சரிவர அள்​ளப்​ப​டாத காரணத்​தால் சுகா​தா​ரச் சீர்​கேடு உள்​ளிட்ட பல்​வேறு சிரமங்​கள் ஏற்​பட்​டுள்​ளன. கொசுக்​களை அழிப்​ப​தற்​காக நகராட்​சிக்கு உட்​பட்ட இடங்​களில் கொசு மருந்து அடிப்​ப​தில்​லை. மேலும், இப்​பகு​தி​யில் உள்ள சாலைகள் சீரமைக்​கப்​ப​டா​மல் உள்​ளன. தெரு விளக்​கு​கள் சரிவர எரிவ​தில்​லை....
கடலூர் மாவட்​டம் பண்​ருட்டி சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் கடந்த 2016-21 வரை எம்​எல்​ஏ​வாகப் பதவி வகித்​தவர் சத்யா பன்​னீர்​செல்​வம். அதே காலத்​தில் அவரது கணவ​ரான பன்​னீர்​செல்​வம் நகர்​மன்​றத் தலை​வ​ராக இருந்​தார். பன்​னீர்​செல்​வம் நகர்​மன்​றத் தலை​வ​ராக பதவி வகித்த காலத்​தில் வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்த வழக்​கில் கடந்த ஆண்டு பிப்​ர​வரி மாதம் அவரது வீட்​டில் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் சோதனை நடத்​தினர். அதன் பின்​னர் கட்​சிப் பணி​களில் தீவிர​மாக சத்யா பன்​னீர்​செல்​வம்...
வீடு​களுக்கு வரும் திமுக​வினரிடம் மக்​கள் கேள்வி​களை கேட்க வேண்​டும் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை தெரி​வித்​துள்​ளார். தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை நேற்று சென்​னை​யில் இருந்து விமானம் மூலம் கோவை சென்​றார். முன்​ன​தாக, சென்னை விமான நிலை​யத்​தில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் ஒரு​வர் குழந்​தையை பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார். சிசிடிவி காட்​சிகள் கிடைத்து 5 நாட்​கள் ஆகி​யும், இன்​னும் பிடிப்​ப​தற்கு நடவடிக்கை எடுக்​க​வில்​லை....
வழக்கு விசாரணைக்கு ஆஜராகி சாட்சி சொல்லாததால் சிஎம்டிஏ உறுப்பினர் செயலரைக் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், விசாரணைக்கு அவர் நேரில் ஆஜரானதால் கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. சென்னையைச் சேர்ந்த ரத்தினசபாபதி என்பவர், தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக சென்னை 19-வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதில்...
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலை நேற்று, அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இரவுநேரக் கடைகள் இடையூறு இன்றி செயல்பட அனுமதிக்க வேண்டும். வணிகர்கள் மீதான காவல் துறை அத்துமீறல்களை தடுக்க வேண்டும். மேலும் வணிகர்கள் மீதான கொலை, கொள்ளை சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். புகையிலைப் பொருட்கள் விற்பனை...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவால் துரோகி பட்டம் சுமத்தப்பட்ட மல்லை சத்யா, தனது மனக்குமுறலை ‘இந்து தமிழ் திசை’ நேர்காணலில் விரிவாகப் பகிர்ந்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கிறார் மதிமுக பொருளாளர் செந்திலதிபன். கண்ணப்பன், எல்ஜி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்களைப் போல், தனக்கும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து தான் புறக்கணிக்கப்பட்டதாகவும் மல்லை சத்யா சொல்கிறாரே? நாஞ்சில் சம்பத், சபாபதி மோகன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வேளச்சேரி மணிமாறன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் போன்ற...
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. முன்னாள் முதல்வர் கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு மகனாக பிறந்த மு.க.முத்து 1970-களில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். ‘பிள்ளையோ பிள்ளை’, ‘சமையல்காரன்’, ‘அணையாவிளக்கு’, ‘இங்கேயும் மனிதர்கள்’ ‘பூக்காரி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தான் நடித்த படங்களில் சில பாடல்களையும் பாடியிருக்கிறார். திமுக மேடைகளிலும் கட்சியின் கொள்கை விளக்க பாடல்களை...
காஞ்​சிபுரம் - அரக்​கோணம் நெடுஞ்​சாலை​யில் டேங்​கர் லாரி மீது கார் மோதி​ய​தில்ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். ராணிப்​பேட்டை மாவட்​டம் அரக்​கோணம் தர்​ம​ராய ரெட்டி தெரு​வைச் சேர்ந்​தவர் வெங்​கடேசன் (48). இவர் வீட்​டிலேயே கார் பழுது பார்க்​கும் பணிமனை நடத்தி வந்​தார். இவரது மனைவி லதா (45). இளைய மகன் தினேஷ்(20). இந்​நிலை​யில், வெங்​கடேசன் நேற்று காலை தனது மனைவி லதா, மகன் தினேஷ் ஆகியோ​ருடன் காரில்...
தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரும் பகு​திநேர ஆசிரியர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும் என்று அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: பணி நிரந்​தரம் உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்​தில் 10-வது நாளாக தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்த பகுதிநேர ஆசிரியர்​கள் காவல் துறை​யின​ரால் வலுக்​கட்​டாய​மாக கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். ஓவி​யம், இசை, உடற்​கல்​வி, கணினி என பல்​வேறு பாடங்​களைப் பயிற்​று​விக்க...