நீதித்துறை செயல்பாட்டில் ஓய்வு நீதிபதிகள் தலையிடுவது சரியல்ல: வாஞ்சிநாதன் வழக்கில் நீதிபதிகள் கருத்து
admin - 0
நீதித்துறை செயல்பாடுகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிடுவது சரியல்ல என வாஞ்சிநாதன் வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்த உத்தரவு:எங்களில் ஒருவர் (ஜி.ஆர்.சுவாமிநாதன்) சாதி பாகுபாகுடன் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட நாளில் 26.07.2025 அன்று ஒரு மண்டபக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது....
உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க, விற்க வேண்டும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்
admin - 0
உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன்படி 124-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.
இதில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய விண்வெளி வீரர் ஷுபான்ஷு சுக்லா விண்வெளி பயணத்தை நிறைவு செய்து அண்மையில்...
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்
admin - 0
சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்ளவுள்ளார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்ட போது அவருக்கு லேசான தலைச் சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, காலை 10.50 மணியளவில் அவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு...
230, 110 கே.வி. மின் கம்பிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: மின் தொடரமைப்பு கழகம் அறிவுறுத்தல்
admin - 0
230, 110 கே.வி. மின் கம்பிகளை தொடர்ந்து கண்காணிக்க மின் தொடரமைப்பு கழகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக மின்வாரியம் சென்னை போன்ற பெரிய நகரங்களில் புதைவட மின் கம்பிகள் வாயிலாக ஒவ்வொரு பகுதிக்கும் மின்சாரம் விநியோகம் செய்து வருகிறது.
அனைத்து மின் பகிர்மான வட்டங்களிலும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றார்போல அருகாமையில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் அண்மை காலமாக 230 மற்றும் 110 கே.வி. மின்...
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆக. 2 தொடக்கம்: குடியிருப்புகளின் அருகிலேயே இலவச முழு உடல் பரிசோதனை
admin - 0
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளின் அருகிலேயே இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம். சென்னை மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளிவளாகத்ததில் “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” ஆகஸ்ட் 2-ம் தேதி முதல்வரால் தொடங்கப்படவுள்ளது.
இதையொட்டி, பள்ளி வளாகத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். சுகாதாரத்துறை செயலர் ப.செந்தில் குமார், சென்னை மாநகராட்சி...
ராமேசுவரம் நினைவிடத்தில் அப்துல் கலாமின் 10-வது நினைவுதினம் அனுசரிப்பு: ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
admin - 0
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 10-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
நாட்டின் 11-வது குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் தனது பதவிக் காலத்துக்குப் பின்னர் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசி, மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார்.
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவில் 2015 ஜூலை 27-ம் தேதி...
ரயில் நிலையங்களில் குறைந்தபட்சம் 10 நிமிடம் நிறுத்தப்படும் ரயில்களின் கழிப்பறைகளை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும் என்று வாரியம் உத்தரவிட்டுள்ளது. நெடுந்தொலைவு இயக்கப்படும் ரயில்களில் கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
தண்ணீர் குழாய்கள் உடைந்திருப்பது, ரயில்களில் போதிய தண்ணீர் நிரப்பாதது போன்ற காரணங்களால், கழிப்பறைகள் பல நேரங்களில் அசுத்தமாக காணப்படுகின்றன. இந்நிலையில், 10 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் நிறுத்தப்படும் நிலையங்களில், ரயில் கழிப்பறைகளை...
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஜூலை 30-ல் விண்ணில் செலுத்த ஏற்பாடு: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
admin - 0
புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து இஸ்ரோ உருவாக்கிய செயற்கைக்கோள் ஜூலை 30-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 10-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமேசுவரத்தில் கலாம் நினைவு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் நாராயணண் பேசியதாவது: சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் அளவுக்கு இஸ்ரோ பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 35 கிலோ ராக்கெட்டில்...
காஞ்சிபுரத்தில் நடைபயணம் மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி, நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். தமிழக மக்களின் உரிமை மீட்போம் என்ற பெயரில், பாமக தலைவர் அன்புமணி 100 நாள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதில், 3-வது நாளாக நேற்று காஞ்சிபுரம் சட்டமன்ற பகுதியில் நடை பயணம் மேற்கொண்டார்.
முன்னதாக, காஞ்சிபுரம் நத்தப்பேட்டை மற்றும் வையாவூர் ஏரிகளை பார்வையிட்டார். இதையடுத்து, காஞ்சிபுரம் பட்டு நெசவுக்கு புகழ் பெற்ற பகுதி என்பதால், காஞ்சிபுரத்தில் பட்டு...
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தூத்துக்குடிக்கு விமான நிலையத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத் திறப்பு விழா மற்றும் தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டப் பணிகள் தொடக்க விழா தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நாளை (ஜூலை 26) இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை...









