Google search engine
‘தி​முக தொண்​டர்​கள் ரத்​த​மும், வியர்​வை​யும் சிந்தி உழைத்​த​தாலேயே சு.வெங்​கடேசன் எம்​.பி.​யாகி​யுள்​ளார்’ என்று மாநக​ராட்சி கூட்​டத்​தில் திமுக மேயரும், அக்​கட்சியின் கவுன்​சிலர்​களும் கொந்​தளித்​தனர். இந்​தி​யா​வின் தூய்மை நகரங்​களின் பட்​டியலில் மதுரை கடைசி இடம் பிடித்​தது குறித்து சு.வெங்​கடேசன் எம்​.பி. விமர்​சித்​திருந்​தார். மதுரை நகரின் தூய்மை மோச​மாக உள்​ளது, மாநக​ராட்சி சுய பரிசோதனை செய்​து​கொள்ள வேண்​டும். தூய்​மை​யைப் பாது​காக்க முதல்​வர் தலை​யிட வேண்​டும் என்று அவர் தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், நேற்று நடை​பெற்ற மாநக​ராட்சி கூட்​டத்​தில்...
கி​ராம ஊராட்​சிகளில் சிறிய கடைகளுக்​கும் உரிமத்​தைக் கட்​டாய​மாக்​கும் சட்​டத்தை தமிழக அரசு திரும்​பப் பெறவேண்​டும் என்று தலைவர்கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: இது உழைக்​கும் வர்க்​கத்​தின் மீது நிகழ்த்​தப்​படும் வன்​முறை. விலை​வாசி உயர்வு, மின்​கட்​ட​ணம், குடிநீர் கட்​ட​ணம், பால்​விலை உயர்வு என தள்​ளாடும் சிற்​றுண்​டிக் கடைகளை மொத்​த​மாக இழுத்து மூட முடிவு செய்து விட்​டதா திமுக அரசு. ஏழை, எளிய மக்​களின் தோள்​களின் மீது நிதிச் சுமை ஏற்​றப்​படு​வதை...
திருவாரூர் மாவட்ட திமுக-வில் அசைக்கமுடியாத சக்தியாக இருக்கும் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, 18 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரில் இரண்டு முறை வென்றபோதும் தொகுதியில் அவருக்கான ஆக்டிங் எம்எல்ஏ-வாக இருந்த கலைவாணன், இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், இதே மாவட்டத்தைச் சேர்ந்த டி.ஆர்.பி.ராஜாவும் அதற்கான போட்டியில் இருந்ததால் இருவருக்கும் அமைச்சரவையில் இடமளிக்காமல் சாதுர்யமாக தவிர்த்துக் கொண்டது தலைமை. இத​னால்,...
 ‘தமிழகம் என்​றுமே ஆன்​மிகம் தழைத்​தோங்​கும் புண்​ணி​யபூமி என்​பது மீண்​டுமொரு​முறை நிரூபண​மாகி​யுள்​ளது’ என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: ராஜேந்​திர சோழனின் வீர வரலாற்​றின் ஆயிர​மாவது வெற்றி விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக​வும், தூத்​துக்​குடி நவீன விமான நிலை​யம் உள்​ளிட்ட பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களை தொடங்கி வைப்​ப​தற்​காக​வும் 2 நாள் அரசு​முறைப் பயண​மாக பிரதமர் மோடி 26-ம் தேதி இரவு தமிழகம் வந்​தார். தூத்​துக்​குடி விமான நிலைய...
ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் செல்​வப்​பெருந்​தகை​யிடம் விசா​ரிக்க காவல்​ துறை தவறி​விட்​டது என பகுஜன் சமாஜ் தரப்​பில் உயர்​நீ​தி​மன்​றத்​தில் வாதிடப்​பட்​டது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலை​வ​ராக இருந்த ஆம்​ஸ்ட்​ராங் கடந்​தாண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்​டின் அருகே வெட்​டிக் கொல்​லப்​பட்​டார். இந்த வழக்​கில் இது​வரை 27 பேர் கைது செய்​யப்​பட்டு சிறையில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த வழக்கை செம்​பி​யம் காவல் துறை​யினர் நியாய​மாக விசா​ரிக்​க​வில்லை என கூறி, விசா​ரணையை சிபிஐக்கு...
பள்​ளி, கல்​லூரி​களுக்கு அரசு பேருந்து சேவை வழங்​கு​வது தொடர்​பாக மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் ஆலோசனை செய்து வரு​கிறது. இது தொடர்​பாக அத்துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்​னை​யில் மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் 27 பணிமனை​களில் இருந்து நாள்​தோறும் 3,233 பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. பள்​ளி, கல்​லூரி மற்​றும் அலு​வலக நேரங்களில் மாநகர பேருந்துகளில்கால் ஊன்ற இடம் இல்​லாத அளவுக்கு கடுமை​யான நெரிசல் காணப்​படும். இவற்றை கருத்​தில் கொண்டு பெண் பயணி​கள் அதி​க​மாக பயணிக்​கும்...
கிண்டி பேருந்து நிலை​யத்​தி​ல் ரூ.400 கோடி​யில் ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து வளாகம் அமைப்​ப​தற்​கான முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் ஈடு​பட்​டுள்​ளது. சென்னை கடற்​கரை - தாம்​பரம் ரயில் தடத்​தி​லும், தாம்​பரம் - பிராட்வே பேருந்து வழித்​தடத்​தி​லும் கிண்டி முக்​கிய மைய​மாக உள்​ளது. கிண்​டியை சுற்​றி​யுள்ள பகு​தி​களில் ஐடி நிறு​வனங்​கள், கல்வி நிறு​வனங்​கள், அரசு மற்​றும் தனி​யார் அலு​வல​கங்​கள் இருப்​ப​தால், பயணி​கள் கூட்​டம் எப்​போதும் அதி​க​மாக இருக்​கும். தினசரி ஒரு லட்​சத்​துக்​கும்...
தஞ்​சாவூர் முத்​துக்​கு​மார மூப்​ப​னார் சாலை​யில் திமுக மாவட்ட அலு​வல​க​மான கலைஞர் அறி​வால​யம் உள்​ளது. இந்நிலையில், 2010 முதல் 2025-26-ம் நிதி​யாண்டு வரை மாநக​ராட்​சிக்கு சொத்துவரி புதைசாக்​கடை வரி என ரூ.34,46,396-ஐ 15 நாட்களுக்​குள் செலுத்​து​மாறு கலைஞர் அறி​வால​யத்​துக்கு மாநக​ராட்சி நோட்​டீஸ் அனுப்​பி​ உள்ளது. இதுகுறித்து திமுக நிர்​வாகி​கள் கூறும்போது, ‘‘கலைஞர் அறி​வால​யத்​துக்கு வணி​கப் பயன்​பாட்​டுக்​கான வரி செலுத்​து​மாறு மாநக​ராட்​சி ​நோட்​டீஸ் அனுப்பி இருந்​தது. அறி​வால​யத்​தில் பொது​ மக்​கள் பயன்​படுத்​தும் நூலகம்...
சென்​னையி​லிருந்து துர்​காபூர் புறப்பட இருந்த விமானத்​தின் அவசர கால கதவைத் திறக்க முயற்சி நடந்​த​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. சென்​னையி​லிருந்து மேற்கு வங்க மாநிலம் துர்​காப்​பூர் செல்​லும் இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம் புறப்​படத் தயா​ரானது. விமானத்​தில் 158 பயணி​கள், 6 விமான ஊழியர்​கள் இருந்​தனர். விமானத்​தின் கதவு​கள் மூடப்​பட்​டு, விமானம் ஓடு​பாதை​யில் ஓட இருந்​த​போது, விமானத்​தின் அவசர கால கதவு திறக்கப்படுவதற்கான எச்​சரிக்கை மணி, விமான கேப்​டன் கேபினில் ஒலித்​தது. இதையடுத்து...
நீ​திப​தி​களை​யும், நீதித்​துறையை​யும் விமர்​சித்து சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்ட வழக்​கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிப​திக்கு உயர் நீதி​மன்ற அமர்வு பரிந்​துரை செய்துள்ளது. உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன். இவர் சாதிரீ​தி​யாக நடந்து கொள்​வ​தாக உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​திக்கு வழக்​கறிஞர் எஸ்​.​வாஞ்​சி​நாதன் புகார் அனுப்​பி​யிருந்​தார். இந்​தப் புகார் வழக்​கறிஞர்​கள் வாட்​ஸ்​அப் குழு​வில் வைரலானது. இந்​நிலை​யில் தஞ்சை தமிழ் பல்​கலைக்​கழக பேராசிரியர் நியமனம்...