Google search engine
“அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிமுடிக்கப்பட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை கத்தரிக்கோலால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்க ஸ்டாலினுக்கு கை வலிக்கிறதா?” - அண்மையில் தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் இப்படியொரு கேள்வியை எழுப்பினார். நெல்லை மாவட்​டத்​தி​லிருந்து 2019-ல் தென்​காசி மாவட்​டம் தனி​யாக பிரிக்​கப்​பட்​டது. இதையடுத்து தென்​காசி​யில் புதி​தாக கட்​டி​முடிக் கப்​பட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் 2 ஆண்​டு​களாக திறக்​க​முடி​யாமல் கிடப்​ப​தைத்​தான் இப்​படி காட்​ட​மாக...
இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை நகரின் சிறப்பை போற்றும் வகையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். “எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386! சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின்...
 மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் 5-வது முறை​யாக நிரம்​பியது. நீர் வரத்து அதி​க​மாக இருப்​ப​தால், அணை​யில் இருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் உபரி​யாக வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இதனால், காவிரி கரையோர மாவட்​டங்​களுக்கு வெள்ள அபா​யம் எச்​சரிக்கை தொடர்கிறது. நடப்​பாண்​டில் முதல்​முறை​யாக, ஜூன் 29-ல் மேட்​டூர் அணை​யின் நீர் மட்​டம் 120 அடியை எட்​டி, நிரம்​பியது. டெல்டா பாசனத்​துக்கு மேட்​டூர் அணை​யில் இருந்து ஜூன் 12-ம் தேதி முதல் தொடர்ந்து...
 சென்னை மாநக​ராட்​சி​யின் 2 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு ஒப்​படைக்​கும் வகை​யில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானத்தை ரத்து செய்ய முடி​யாது என உத்​தர​விட்​டுள்ள உயர் நீதி​மன்​றம், தூய்​மைப் பணி​யாளர்​கள் கடைசி​யாக வாங்​கிய சம்​பளத்தை குறைக்​காமல் வழங்க வேண்​டும் என அறி​வுறுத்​தி​ உள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யின் 5, 6-வது மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கும் வகை​யில் மாநக​ராட்​சி​யில் கடந்த ஜூன் மாதம் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. அதன்​படி, தூய்​மைப் பணிக்​கான ஒப்​பந்​தத்தை தனி​யாருக்கு...
கூத்​தாநல்​லூர் அருகே வீட்​டில் தூங்​கிக்​கொண்​டிருந்த ஒன்​றரை வயது குழந்​தையை கவ்​விச் சென்று கடித்​துக் குதறிய தெரு நாய், காப்​பாற்​றச் சென்ற பாட்​டி யை​யும் கடித்தது. திரு​வாரூர் மாவட்​டம் கூத்​தாநல்​லூர் அரு​கே​யுள்ள மேல்​கொண்​டாழி கிராமத்​தைச் சேர்ந்​தவர் அபு​தாகிர். வெளி​நாட்​டில் பணிபுரிந்து வரு​கிறார். இவரது மனைவி சுல்​தான்​பீ​வி(26). இவர்​களுக்கு அஜ்மல் பாஷா என்ற ஒன்​றரை வயது ஆண் குழந்தை உள்​ளது. சுல்​தான் பீவி, தனது தாய் மல்​லிகா பீவி(44) மற்​றும் குழந்தை அஜ்மல்...
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 1996 காலியிடங்களுக்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 390 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 12-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 1996 காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்பும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை 10-ம் தேதி அன்று...
சுட்டுப் போட்டாலும் திமுக-வினருடன் அதிமுக-வினர் கை கோக்க மாட்டார்கள் என்பார்கள். ஆனால், எழுதப்படாத அந்த விதியை பொய்யாக்கி இருக்கிறார்கள் சங்கரன்கோவில் நகராட்சி அதிமுக கவுன்சிலர்கள். சங்கரன்கோவில் நகராட்சியில் தனிப்பெரும் கட்சியாக 12 வார்டுகளை வென்றது அதிமுக. இருந்த போதும், 9 வார்டுகளில் மட்டுமே வென்றிருந்த திமுக, கூட்டணி தோழர்களின் ஆதரவுடன் சேர்மன் பதவியைக் கைப்பற்றியது. உமா மகேஸ்வரி சேர்மனானார். ஆனால், வெகு சீக்கிரத்திலேயே சொந்தக் கட்சியினரே உமா மகேஸ்வரிக்கு எதிராக...
திருச்செந்தூர் நவம்பரில் 1980 சுப்பிரமணிய சுவாமி கோயில் அறநிலையத் துறை அதிகாரியாக இருந்த சுப்பிரமணிய பிள்ளை மர்மமான முறையில் இறந்து போனார். இதை கொலை என்று சொல்லி, 1982 பிப்ரவரியில் மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு நீதி கேட்டு நெடும்பயணம் போனார் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி. நடைபயணத்தில் அவரது காலில் கொப்புளங்கள் ஏற்பட்டதாகக் கேள்விப்பட்ட அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர், கருணாநிதியை போனில் அழைத்து நலம் விசாரித்தார். அத்தோடில்லாமல் தனது நண்பருக்கு உதவியாக...
 மகா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் பலத்த மழை பெய்து வரு​கிறது. இதனால், மோச​மான வானிலை நில​வுவ​தால், மும்பை​யில் இருந்து நேற்று மாலை 5.35 மணிக்கு சென்​னைக்கு வரவேண்​டிய இண்​டிகோ ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானம் ரத்து செய்​யப்​பட்​டது. அதே​போல், சென்​னை​யில் இருந்து நேற்று மாலை 6.20 மணிக்கு மும்​பைக்கு புறப்​பட்டு செல்​லும் இண்​டிகோ ஏர்​லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்​யப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது. மும்பை - சென்னை இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம், மும்பை - சென்னை...
மதுரை பாரப்பத்​தி​யில் நாளை நடக்கும் விஜய் கட்​சி​யின் மாநில மாநாட்​டுக்​கான பணி​கள் இறு​திக்​ கட்​டத்தை எட்டியுள்ளன. மாநாட்டு திடல் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளது. மதுரை-தூத்​துக்​குடி சாலை​யில் உள்ள பாரப்பத்​தி​யில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை (ஆக.21) நடக்​கிறது. சுமார் 500 ஏக்​கர் பரப்​பள​வில் எல்​இடி திரைகளு​டன் கூடிய டிஜிட்​டல் வடிவி​லான மேடை, பார்​வை​யாளர் கேலரி​கள், வாகன பார்க்கிங், மாநாட்டு திடலை சுற்​றி​லும் கட்​சிக் கொடி, தோரணங்​கள், பதாகைகள், தற்​காலிக...