திருச்சி அருகே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சாரக் கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வேன் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில் நிர்வாகிகள் 4 பேருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் துறையூரில் பழனிசாமி பங்கேற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த இடத்தை கடக்க முயன்ற 108 ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த 10 பேர் மீது துறையூர் போலீஸார் வழக்குப்பதிவு...
அதிமுக வாக்குச்சாவடி கிளை நிர்வாகிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்த மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2026 சட்டப் பேரவை தேர்தலில், அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்வகையில், சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில், வாக்குச்சாவடி (பாகம்) கிளைகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன.
இதன் நிர்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைத்து, அவர்களுக்கு தக்க பயிற்சி அளிக்க வேண்டும்....
அமெரிக்க வரிவிதிப்பு பாதிப்பை சமாளிக்க உதவி திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலிருந்து அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் 87 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி 50 பில்லியன் டாலராக குறையக்கூடும் என்றும், இதன் காரணமாக இந்திய ஏற்றுமதித் துறை நிலைத் தன்மை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை அச்சுறுத்தலுக்கு ஆளாகும் என்றும்...
அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் போலீஸார் ஏன் தாமதம் செய்கின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் என்.வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான அரசு நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் போலீஸார் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடிக்கு முறைகேடு நடந்ததாக...
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கேள்வி தயார் செய்வதில் கவனக்குறைவுடன் செயல்படுவதாக தமிழக அரசுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வில், அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழிபெயர்ப்பில், முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் பெயர், ‘தி காட் ஆஃப் ஹேர்கட்டிங்’ (The God of Hair Cutting) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கவனக்குறைவாகவும்,...
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண் அளித்த நகை திருட்டு வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி இறந்த அஜித்குமாரின் தாயார் உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின்போது...
குற்ற வழக்கில் தொடர்புடைய மதுரை ஆதீனம் பதவி விலக வேண்டும், அந்த இடத்தில் தன்னை நியமிக்க வேண்டும் என ஆதீன மட ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்புரான், மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தார்.
இதுகுறித்து அளித்த மனு: மதுரை ஆதீன மடத்தின் தம்புரானாக குருமகா சந்நிதானத்தின் கரங்களால் தீட்சை பெற்று, கடந்த 2018 ஜூலை முதல் பணியாற்றி வருகிறேன். தற்போது, 293-வது ஆதீனத்தின் கீழ் தம்புரானாகப் பணிபுரிந்து வருகிறேன்.
வேறு ஒருவருக்கு...
பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரம் ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு: விவசாயிகள் சங்கம் மனு
admin - 0
பரந்தூர் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள காலி ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பகுதியில் 5 ஆயிரத்து 747 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், விமான நிலையம் அமைக்க ஏகனாபுரத்தில் உள்ள காலி ஏரியை...
வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாக எழுந்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விசாரணை குறித்த முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் என மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்...
கடலூர் ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்: ஐகோர்ட் உத்தரவு
admin - 0
கடலூரில் நாளை நடைபெற உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் பட்டியலினத்தவர்கள் கலந்து கொள்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கரும்பூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 28ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில் பொதுக்கோவில் அல்ல எனக்கூறி கோவிலுக்கு...










