‘திமுகவின் கம்பீரத்தை சிதைத்து விடாதீர்கள்’ – செந்தில் பாலாஜிக்கு எதிராக சீறுகிறார் என்கேகேபி ராஜா
admin - 0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 39 சட்டமன்ற தொகுதிகளின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக தலைமை நியமித்துள்ளது.
இந்த மாவட்டங்களில், செந்தில் பாலாஜி யாரைக் கை காட்டுகிறாரோ அவருக்குத்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பது உடன்பிறப்புகளின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், இந்த 5 மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்,...
மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி, கடந்த 2006-ல் சமயநல்லூர் தொகுதியில் (தனி) வென்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர். தொகுதி மறுசீரமைப்பில் சமயநல்லூர் தொகுதி மறைந்ததால், கடந்த 2011-ல் மானாமதுரை தொகுதியில் (தனி) போட்டியிட்டு தோற்றார். அப்போதே மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பனும், அவரது ஆதரவாளர்களும் ஒத்துழைக்காததே தமிழரசி தோல்விக்கு காரணம் என்று பரவலாக பேசப்பட்டது.
2016-ல் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. கடந்த 2019 இடைத்தேர்தலிலும் சீட் தரவில்லை. ஆனாலும் அவர் விடாப்பிடியாக,...
பாமக துவங்கிய காலம்தொட்டு அக்கட்சியின் சட்டப்பிரிவின் முகமாக இருப்பவர் வழக்கறிஞர் பாலு. தந்தையா - மகனா என்ற இக்கட்டான சூழ்நிலையில் கட்சி தவித்துவரும் நிலையில், இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சட்டச் சிக்கல்களை பாமக சந்தித்து வருகிறது. சட்டப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பவரும் கட்சியின் செய்தி தொடர்பாளருமான பாலு நம்மிடம் பேசியதிலிருந்து...
பாமகவில் இத்தனை காலம் பணியாற்றிய நீங்கள் கட்சி நிறுவனரையே பகைத்து கொண்டு அன்புமணி பக்கம்...
கரூர் களத்தை வைத்து காய்களை நகர்த்த தொடங்கிவிட்டார்கள் கதர் கட்சியின் சில தலைவர்கள்.. கூட்டணி திசையை மாற்றலாம் என கட்சிக்குள் வெளிப்படையாகவே பேசுகிறார்களாம். அண்மையில் ஆய்வுக்கு வந்த மேலிடப் பிரதிநிதியிடமும் அவர்கள் இதுபற்றி விளக்கினார்களாம்... அவரோ, எதுவாக இருந்தாலும் கட்சி மேலிடம் முடிவு செய்யும். அதுவரை வெளியில் எதுவும் பேச வேண்டாம் என கடிவாளம் போட்டுவிட்டு சென்றுவிட்டார்.
ஆனாலும், விடாது கருப்புபோல ‘செல்வ’ எதிர்ப்பு கோஷ்டியினர் முயற்சியை தொடர்கிறார்களாம். கரூருக்கு...
“ஆளும் கட்சியினருக்கும் குறைகள் இருக்கின்றன!” – திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம் ஒப்புதல்
admin - 0
திமுக நிகழ்ச்சிகள், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என அனைத்திலும் முன்நிற்பவர் திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம். அவரிடம், நடப்பு அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
2026 தேர்தலில் வணிகர்களின் வாக்கு யாருக்குச்சாதகமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
வணிகர்கள் வாக்குகள் 90 சதவீதம் திமுக கூட்டணிக்குத்தான் கிடைக்கும். மத்திய அரசுதான் வரிகளை போட்டு பிழிகிறது. மாநில அரசு வரிச்சுமையை கூட்டாததால் வியாபாரிகள் மகிழ்ச்சியாக, நிம்மதியாக...
விளவங்கோடு தொகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிபெற்ற விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்தார். அது கிடைக்கவில்லை என்றதும், சீனியர் என்ற அடிப்படையிலும் பெண் பிரதிநிதி என்பதாலும் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பதவியாவது கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார்.
அதுவும் ஆகாது என்று தெரிந்ததும், “காங்கிரஸில் பெண்களை அங்கீகரிப்பதில்லை” என்று புகார் வாசித்துவிட்டு 2024-ல் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து, காங்கிரஸ் பாரம்பரியத்தில் வளர்ந்த தன்னை சமரசம்...
கலவரத்தாலும் கள்ளச்சாராய பலிகளாலும் கறை படிந்து ஆளும் திமுகவுக்கு பெரும் நெருக்கடியை தந்த தனித் தொகுதி கள்ளக்குறிச்சி. தற்போது அதிமுக வசம் இருக்கும் இந்தத் தொகுதியை இம்முறை தங்கள் பிடிக்குள் கொண்டுவரும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது திமுக.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரான புவனேஸ்வரி பெருமாளை கள்ளக்குறிச்சிக்கான வேட்பாளராகவே கிட்டத்தட்ட தெரிவு செய்துவிட்ட கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏ-வுமான வசந்தம் கார்த்திகேயன், அவரை தொகுதிக்குள் முன்னிலைப்படுத்தி வருகிறார்.
இவருக்குப்...
திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக கூட்டணியை பலப்படுத்த நினைக்கும் பாஜக, அதற்காக முன்பு அதிமுக மற்றும் பாஜக உடன் கூட்டணியில் இருந்த கட்சிகளை எல்லாம் மீண்டும் தங்கள் பக்கம் கொண்டுவர வரிசையாக காய்நகர்த்தி வருகிறது. அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணியிடமும் பாஜக தரப்பிலிருந்து பக்குவமாக பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கிறார்கள்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவும் பாமகவும் அங்கம் வகித்தன. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலின்போது...
பிஎட். படிப்பில் சேர்ந்த மாணவர்கள் தகுதி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த அக்.27 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) கே.ராஜசேகரன் அனுப்பிய சுற்றறிக்கை: 2025-26-ம் கல்வி ஆண்டில் பிஎட். மற்றும் பிஎட். (சிறப்புக் கல்வி) படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் தகுதி கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் அக்.27-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
இதற்குமேல் காலநீட்டிப்பு வழங்கப்படாது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்...
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு பருவமழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தால், ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக சென்று அங்கு...










