தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பழனிசாமி உறுதி
admin - 0
தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் கட்சி வளர்ச்சிப் பணிகளை கவனியுங்கள் என்று அதிமுக மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கடந்த நவ.4-ம் தேதி தொடங்கியது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஆதரித்து...
தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தருமபுரியில் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் ஈச்சம்பாடி பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈச்சம்பாடி அணையில் இருந்து உபரிநீர் நீரேற்றும் திட்டத்தை செயல் படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று ஈச்சம்பாடி அணை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின்போது, ‘விவசாயிகளுக்கு பயனளிக்கும் எந்த திட்டத்தையும் திமுக அரசு...
எஸ்ஐஆர் விவகாரத்தில் தேவையற்ற வேலையைச் செய்யும் பாஜக, பதற்றமாகவே வைத்திருக்க நினைப்பதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
இது குறித்து நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் என்பது கோவையில் நடந்த இது ஒரு நிகழ்வல்ல. பல நிகழ்வுகள் வெளியே தெரியாமல் உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 6 வயது குழந்தையை வன்புணர்வு செய்து எரித்துக்...
மாளிகைக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த ’கோட்டை’ எக்ஸ் மாண்புமிகுவுக்கு, செய்தி சொல்லும் துறையில் இருந்து ஓய்வுபெற்ற உதவி இயக்குநர் (ஏடி) அந்தஸ்திலான ஒருவர் தான் இப்போது முக்கிய அரசியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறாராம். அவரது ஆலோசனைகளை தட்டாமல் ஏற்றுக் கொள்ளும் எக்ஸ் மாண்புமிகு, பசும்பொன்னுக்கு ‘பலே’ பங்காளிகளுடன் சேர்ந்து பயணப்படுவதற்கு முன்னதாகவும் ஏடியிடம் ஆலோசனை கேட்டாராம்.
“இப்போதைக்கு இது வேண்டாமே” என ஏடி ஏர்பிரேக் போட்டாராம். ஆனால், “டெல்லி சொல்லாத...
ஓபிஎஸ்ஸை நம்பி இபிஎஸ்ஸை பகைத்துக் கொண்ட மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ்ஸின் நிலைமை மதில் மேல் பூனை கணக்காக இருப்பதால் தனக்கான வழியைத் தேடிப் புறப்பட்டு திமுகவில் கலந்துவிட்டார்.
மனோஜ் பாண்டியனுக்கு தேர்தலில் சீட் உறுதி என்று உத்தரவாதம் அளித்துத்தான் அவரை திமுகவுக்கு அழைத்து வந்தாராம் அமைச்சர் சேகர் பாபு. இந்த நிலையில், ஏற்கெனவே ஆலங்குளத்தில் வெற்றிபெற்ற மனோஜ் பாண்டியனுக்கு இந்த முறை அந்தத் தொகுதிக்குப் பதிலாக அம்பாசமுத்திரத்தை ஒதுக்க திமுக...
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, முன்னெப்போதும் இல்லாத வகையில் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பிருந்தே முக்கிய கட்சிகள் ஆயத்தப் பணிகளை தொடங்கிவிட்டன. தற்போது, சமூக வலைதளங்கள் வழியே பிரச்சாரம் செய்யவும், செய்திகளை பரப்பவும், விவாதங்களில் ஈடுபடவும் அனைத்துக் கட்சிகளின் ஐடி விங்குகளும் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.
திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் ஐடி விங் ஆலோசனைக் கூட்டங்களை அடிக்கடி நடத்துகின்றன. ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என...
‘சிதம்பரம் தொகுதி எங்களுக்குத்தான்..!’ – குறி வைத்து காய் நகர்த்தும் திமுக கூட்டணிக் கட்சிகள்
admin - 0
‘கூட்டணி கட்சிகளின் ஆக பெரிய பலம்தான் திமுகவின் பலம்’ - இதை அக்கட்சியின் கூட்டணியில் உள்ள தலைவர்கள் நன்றாகவே உணர்ந்து, இந்தத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு வருகின்றனர்.
யாருக்கு எத்தனை சீட் என்பதைக் காட்டிலும், யாருக்கு எந்தத் தொகுதி என்பதில் பெரும் போட்டி தற்போதே நடந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் தொகுதியை தங்கள் வசம் பெற்று விட வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் தற்போதே...
பாஜக மாநிலச் செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி தமிழகத்தின் அரசியல் கள நிலவரத்தை நன்கு அறிந்தவர். பெயரைக் கேட்டதும் வெளியூர்காரர் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போகும் அளவுக்கு நன்கு தமிழ் பேசக் கூடியவர். அவரிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
வலுவான கூட்டணியை அமைப்போம் என பாஜக திரும்பத் திரும்பச் சொன்னாலும் யாருமே பாஜக அணி பக்கம் திரும்புவதாகத் தெரியவில்லையே?
கடந்த காலங்களில் வேட்புமனு தாக்கலுக்கு முந்தைய நாள் கூட கூட்டணிகள் இறுதியாகி...
பிஹாரில் பேசியதுபோல தமிழகத்தில் பேச மோடிக்கு தைரியம் உண்டா? – தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
admin - 0
வாக்கு அரசியலுக்காக தமிழகத்தில் பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி பேசுகிறார். தமிழகம் வந்து இவ்வாறு பேச அவருக்கு தைரியம் உள்ளதா? என்று முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
தருமபுரி மக்களவை உறுப்பினர் மணி இல்ல திருமண விழா தருமபுரியில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மங்கல நாணை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது: அனைத்துக் கட்சிக்...
திமுகவினரை குறிவைத்து அடிக்கும் பாஜகவுக்கு நான் முதல் பலி ஆகிவிட்டேன்! – அமைச்சர் நேரு ஒப்புதல் வாக்குமூலம்
admin - 0
திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதற்கு நான் முதல் பலியாகி விட்டேன் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பாக நிலை முகவர்களுக்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் முதன்மைச் செயலாளரும், திருச்சி மண்டல பொறுப்பாளருமான அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது:...









