ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் மூத்த தலைவர்களாக இருந்த செஞ்சி ராமச்சந்திரன், ஏ.கோவிந்தசாமியின் மகன் ஏ.ஜி.சம்பத் உள்ளிட்டோரை ஓரங்கட்டிவிட்டு அமைச்சர், மாவட்ட செயலாளர், மாநில துணை பொதுச் செயலாளர் என திமுகவில் பொன்முடி அசுர பலம் பெற்றார். விழுப்புரம் மாவட்டத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மாறினார்.
தன்னை எதிர்க்க யாருமில்லை என்ற அதிகாரத்துடன் வட்டமடித்த பொன்முடியின் செல்வாக்கு சமீபத்தில் சரிந்தது. பெண்கள் குறித்து பேசக் கூடாததை பேசியதால் மாநில துணை...
“சங்கம் வைக்க கூட திமுக ஆட்சியில் போராட வேண்டியிருக்கிறது!” – மார்க்சிஸ்ட் கட்சி கே.பாலகிருஷ்ணன் பளிச் பேட்டி
admin - 0
தமிழக அரசியல் களம், நெல் கொள்முதல் பிரச்சினை, சட்டம் - ஒழுங்கு நிலவரம், தேர்தல் கூட்டணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனுடன் ‘இந்து தமிழ் திசை’க்காக உரையாடியதிலிருந்து…
திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தைத் தாண்டி தங்களை வளர்த்துக் கொள்ள இடதுசாரிகள் என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
தேசிய முக்கியத்தும் வாய்ந்த பிரச்சினைகளில் மற்ற கட்சிகளுடன் ஒத்துழைப்பதும் எங்களின் நிலைப்பாடு. மற்றபடி மக்களின் வாழ்வாதாரப்...
மோஸ்ட் சீனியர் சிட்டிசன்களுக்கு இந்த முறை சீட் இருக்காது என தேனாம்பேட்டைக் கட்சி தலைமையிலிருந்தே சமயம் கிடைக்கும் போதெல்லாம் பிரேக்கிங் நியூஸை போட்டு விடுகிறார்களாம்.
‘மத்திய’ விசாரணை வளையங்களுக்குள் எக்குத் தப்பாய் மாட்டி இருக்கும் மூத்த முன்னோடிகள் சிலருக்கு மீண்டும் சீட் கொடுத்தால் டெல்லி பார்ட்டிகள் தேவையற்ற குடைச்சல் கொடுத்து தேர்தல் நேரத்தில் குண்டுக் கட்டாய் தூக்கி வைத்து கூட்டணியின் வெற்றிக்கு குண்டுவைக்கப் பார்ப்பார்கள் என்ற அச்சப்படுகிறதாம் தேனாம்பேட்டைத் தலைமை....
‘உதயநிதியை முதல்வராக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவுபகல் கனவாகவே இருக்கும்’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் பேசி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மக்களுக்காக வாழ்கிறோம் என்று சொல்லி, தன்னுடைய மக்களுக்காக திமுக வாழ்கிறது....
தமிழத்தில் வரும் 2026 தேர்தலில் கூட்டணிக்கு இடமில்லை, தனித்துதான் போட்டி என்றும், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுத்த முடிவை நான் எடுக்கமாட்டேன் என்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் குழு கலந்தாய்வுக் கூட்டம் சென்னை வடபழனியில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து முதன்மை நிர்வாகிகளுடன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்...
கோடநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேடிய கோப்புகளை கிழித்துவிட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமமுக-வின் சென்னையைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னை அடையாரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:
அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பது...
தமிழக அரசின் விரிவான மினி பேருந்து திட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், 1,350 தனியார் பேருந்துகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் இந்த மேல் முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டுள்ளனர்.
பேருந்து வசதி இல்லாத சிறிய கிராமங்களுக்கும் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தும் வகையில் தமிழக அரசு புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தை கடந்தாண்டு அறிவித்தது. அதன்படி தனியார் மினி பேருந்துகள் 25 கிமீ தூரம் வரை...
தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் 1983-ம் ஆண்டு நடந்த போர் காரணமாகவும் பல்வேறு காலகட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் தமிழகத்துக்கு அடைக்கலம் வந்தனர். உலகின் பல நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளன. இந்தியாவில்தான் ஈழத்தமிழ் மக்கள் அகதி முகாம்களிலேயே ஆயுள் முழுதும் வாழ்ந்து...
அரசு கல்லூரிமாணவ-மாணவிகளுக்கு டிசம்பர் மாதம் மடிக்கணினி விநியோகிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கோவி.செழியன், தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, நடப்பு கல்வி ஆண்டில் ரூ.2,000 கோடியில் 10 லட்சம் மடிக்கணினி வழங்குது குறித்தும் எந்த ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு முதலில் வழங்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திருச்சி, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக உள் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் (நவ.6, 7) தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 8 முதல் 11-ம் தேதி வரை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,...










