10 மக்களவைத் தொகுதிகளைக் கணக்குப் போட்டு 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மாளிகைக் கட்சியிடம் முதல் சுற்றில் 60 தொகுதிகளை கேட்க வேண்டும் என்ற கணக்கில் இருக்கிறதாம் தடாகக் கட்சி. முடிவாக அத்தனை தொகுதிகள் கிடைக்காவிட்டாலும் அப்படி இப்படிப் பேசி 40 தொகுதிகளை கட்டாயம் பெற்றுவிட வேண்டும் என்ற உள் ஒதுக்கீட்டுத் திட்டத்தையும் வைத்திருக்கிறார்களாம்.
அதிலும், 2024 மக்களவைத் தேர்தலில் இரண்டாமிடத்தைப் பிடித்த சட்டமன்றத் தொகுதிகளை கட்டாயம் எங்களுக்கு வேண்டும் எனக்...
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 70 வயதான தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்: உதயநிதி தொடங்கி வைக்கிறார்
admin - 0
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: கடந்த 2025-26-ம் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்பில், ``இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு...
நயினார் நாகேந்திரன் கூட்டத்துக்கு திரண்டு வந்த அதிமுகவினர்: இரு கட்சிகளின் தொண்டர்கள் உற்சாகம்
admin - 0
சேலம் மாவட்டத்தில் மேட்டூர் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக கட்சிகள் சம பலத்தில் உள்ளன. இதனால், இந்தத் தொகுதி முக்கியமாக பார்க்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை மேட்டூர் தொகுதியில் தான் தேமுதிக, நாதக, பாமக, பாஜக கட்சிகள் முதல் கூட்டத்தை நடத்தியுள்ளன. அந்த வகையில், மேட்டூரில் பாஜக சார்பில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தில்...
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தவெகவுடன் கூட்டணி வைக்க தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், தவெக தலைவர்கள் கண்டுகொள்ளாதது அமமுகவினரை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் புதிய வரவாக நடிகர் விஜயும் களமிறங்குவதால், கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு ஒரு மாதமாக வெளியே வராமல் இருந்தார் விஜய்.
கூட்ட நெரிசலுக்கு தவெகவையும்...
செங்கோட்டையன் விவகாரத்திலும் திமுக பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது: நயினார் நாகேந்திரன் கருத்து
admin - 0
செங்கோட்டையன் விவகாரத்திலும் திமுக பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே தொட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ‘வந்தே மாதரம்’ 150-வது ஆண்டு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக கூறிய பிறகே, அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக பல்வேறு விஷயங்களை தான் முன்னெடுத்ததாக செங்கோட்டையன்...
‘சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்’ என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழக பாஜக சார்பில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகில் நடைபெற்ற விழாவுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை வகித்தார்.
மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்பட...
பார்ட்டி பிள்ளைகளை பக்குவமாய் வழிநடத்திச் செல்ல அண்மையில் பனையூர் பார்ட்டியில் சார்பு அணி நிர்வாகிகளை அறிவித்தார்கள். ஆனால், மாவட்ட அளவிலான நிர்வாகிகளை அறிவித்தவர்கள், சார்பு அணிகளின் மாநில தலைமைக்கு இன்னும் யாரையும் நியமிக்காமல் இருக்கிறார்களாம். இதனால், யார் காட்டிய வழியில் போவது என்று தெரியாமல் அணிகளின் மாவட்டப் பொறுப்பாளர்கள் குழம்பிப் போய் நிற்கிறார்களாம். ஏற்கெனவே, கட்சிப் பதவிகளை தருவதாகச் சொல்லி கட்சியின் ‘பிஸி’ தளபதி பலபேரிடம் பலவிதமாக பலன்...
விடுதலை நாள் விழாவை புறக்கணித்த அமைச்சர்! – புகையும் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி
admin - 0
புதுச்சேரி அரசியலில் பாஜக அமைச்சர் ஜான்குமார் முதல்வர் ரங்கசாமி தரப்பை ஆத்திரப்படுத்தும் விதமாக தனது அரசியல் நடவடிக்கைகளை கட்டமைத்து வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் ஏனாம் பிராந்தியத்தில் அரசு சார்பில் கொடியேற்றி வைக்கப் பணிக்கப்பட்ட ஜான்குமார், அதை உதாசீனம் செய்திருப்பது ஆளும் கட்சி வட்டாரத்தை மட்டுமல்லாது எதிர்க்கட்சிகளையும் சீற வைத்திருக்கிறது.
புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசில் பாஜக-வுக்கு 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள்....
“முதலமைச்சராக இருந்த போதே ஜெயலலிதா சிறை செல்ல யார் காரணம்?” – தினகரனை திருப்பிக் கேட்கும் ஆர்.பி.உதயகுமார்
admin - 0
‘‘முதலமைச்சராக இருந்த போதே ஜெயலலிதா சிறை செல்ல யார் காரணம்? அந்தப் பாவமெல்லாம் உங்களைச் சும்மா விடாது” என்று டிடிவி. தினகரனுக்கு எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
தினகரனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: இன்றைக்கு, ஆளும் மக்கள் விரோத திமுக அரசை பற்றி எதுவும் பேசாமல், தினந்தோறும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தினகரன் ஏதேதோ...
அதிமுக அணிக்கு சாதகமாக வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறதா? – அமைப்புச் செயலாளர் செம்மலை பதில்
admin - 0
அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இரட்டை இலை சின்னத்துக்கு சவால் விட்டிருக்கும் நிலையில், எஸ்ஐஆர் சர்ச்சை உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலையிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சேபம் தெரிவிக்கின்றன. உண்மையில் இந்த எஸ்ஐஆரின் நோக்கம் தான் என்ன?
தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டுமானால், வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் அற்றதாக இருக்க வேண்டும்....










