மோட்டார் வாகன விதிகளை மீறிய 1 லட்சத்து 82,375 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஆர்டிஓ-வுக்கு பரிந்துரை செய்யப் பட்டிருப்பதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நடப்பு ஆண்டு ஜூலை மாதம் வரை 10,066 விபத்து வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இந்த விபத்துக்களில் 10,536 பேர் உயிரிழந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 10,589விபத்துக்களில் 11,106 பேர்...
ஒரே குடும்பத்தில் பலர் அரசியல் பதவிக்கு வருவது புதிதல்ல என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம், புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி கடைவீதியில் செய்தியாளர்களிடம் கூறியது: ஒரு குடும்பத்தில் இருந்து பலர் அரசியல் பதவிக்கு வருவதுபுதிதல்ல. பல மாநிலங்களில், பல கட்சிகளில் நிகழ்ந்துள்ளது. அதுபோல, ஒரே குடும்பத்தில் ஒருவர்...
“தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழநி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், சமயபுரம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் போன்ற கோயில்களில் தமிழக அரசு அந்தந்த கோயில்களுக்கென்றே ஒரு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியை நியமித்து பிரசாதங்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை தமிழக இந்துசமய அறநிலையத்துறை கண்காணிக்க வேண்டும்,” என்று தமாகா பொதுச் செயலாளர் எம்.யுவராஜா வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு,...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு காரணமானோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மோகன்ராஜ், தமது நிலத்தை பறிக்க அரசியல் கட்சி ஆதரவுடன் நடந்த முயற்சிகளால் மனம் உடைந்து, அதற்கு காரணமானோர்...
தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: அணைகளில் உள்ளநீர் இருப்பை பொருத்து நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்தஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 2,009 மெகாவாட்நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 50 சதவீத மின்னுற்பத்தி இலக்கை அடைந்துவிட்டோம். தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்ததால் இந்த இலக்கை எட்ட முடிந்தது. குந்தா, காடம்பாறை, திருநெல்வேலி, ஈரோடுஆகிய 4 முக்கிய மின்னுற்பத்தி வட்டங்களில் 2,321.90 மெகாவாட் மின்னுற்பத்தி திறன்...
கோயில் லட்டில் விலங்கு கொழுப்பு சர்ச்சை தொடர்பாக கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆஞ்சநேயருக்கு தேங்காய் உடைத்து முறையிடும் நிகழ்வு இன்று (செப். 28) நடைபெற்றது. கரூர் ரயில்வே குடியிருப்பில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் முன்பு இந்து முன்னணி கரூர் மாநகரத் தலைவர் கணேசன் தலைமையில் நகரச்செயலாளர் காமேஷ்வரன், மாவட்ட பொருளாளர் ரமேஷ் முன்னிலையில் காலை 8 மணிக்கு ஆஞ்சநேயரிடம் முறையிட்டு 11 தேங்காய்களை உடைத்து முறையிட்டனர். இதில்...
“இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழகம்தான் முதல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில், திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். 31 லட்சம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.28) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ராணிப்பேட்டை...
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் காவல்துறை மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் இந்திய சுவிசேஷ திருச்சபை (இசிஐ) பேராயருமான எஸ்றா சற்குணம் (86), வயது மூப்பு காரணமாக கடந்த 22-ம் தேதி காலமானார். இதையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக...
தமிழக அரசுத் துறைகளில் குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள 2,327 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 5 லட்சத்து 81,305 பட்டதாரிகள் எழுதினர். அதைத் தொடர்ந்து குரூப் 2 தேர்வுக்கான விடைக் குறிப்பு (கீ ஆன்சர்) செப்டம்பர் 23-ம் தேதி வெளியிடப்பட்டது. இதன் மீதான ஆட்சேபனைகளை தெரிவிக்க செப்.30-ம் தேதி வரை கால அவகாசம்...
மருத்துவ ஆராய்ச்சிக்கான உதவித்தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ‘மருத்துவத்தின் செயற்கை நுண்ணறிவு கருத்து கட்டுரை தொகுப்பு’ புத்தகத்தை வெளியிட்டார்.அதைத் தொடர்ந்து, மருத்துவ ஆசிரியர்கள், முதுநிலை மற்றும் இளநிலை பட்டதாரிகளுக்கு சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கான விருதை...