திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் முத்துராமன் (32). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்தார். 2018-ல் வள்ளியூர் முப்பிடாதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு பக்தர்களை வரவேற்று திமுக சார்பில் பதாகை வைத்திருந்தார். இதற்கு தெற்கு வள்ளியூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கவேல் என்பவர் எதிர்ப்பு...
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தலைமை செயலகத்தில் உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் நேற்று கோரிக்கை மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை முடக்கும் நோக்கில், மத்திய அரசின் நுகர்வோர் கூட்டுறவு அமைப்பு மூலம் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கார்ப்பரேட்களை நெல் கொள்முதலில் களமிறக்க மறைமுக சதி நடைபெற்று...
சென்னையில் 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்குகள் எத்தனை? – விவரம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
admin - 0
சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகர போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த அக்.4-ம் தேதி, சென்னை மாநிலக் கல்லூரி மாணவரான திருத்தணியைச் சேர்ந்த சுந்தர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டார். ரயில்வே பாதுகாப்பு படையினர் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு...
கோவை ஈஷா யோகா மையம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக வார இதழ் ஒன்றைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கோவையில் கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற அர்ஜுன் சம்பத் மகனும், கட்சியின் இளைஞரணித் தலைவருமான ஓம்கார் பாலாஜி, வார இதழ் ஆசிரியரை மிரட்டும் தொனியில் பேசியதாக திமுகவைச் சேர்ந்த அப்துல் ஜலீல் புகார் அளித்தார். இதன் பேரில் ஓம்கார் பாலாஜி மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில்...
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகமுத்து (22). கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாகப் பணிபுரிந்து வந்த நாகமுத்து 2012-ல் தற்கொலை செய்துகொண்டார்.
முன்னதாக, தனது தற்கொலைக்கு கோயில் அறங்காவலர்களாக இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, லோகு, சரவணன், ஞானம், மணிமாறன், சிவக்குமார், பாண்டி ஆகிய 7 பேர் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் அளித்த...
மருத்துவமனையில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தை தொடர்ந்து, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “இச்சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரிக்கப்படும். கைதான இளைஞர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர் களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதியாக வழங்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
பின்னர்...
ஆசிரியர்களின் குற்றப் பின்னணி குறித்து விசாரிப்பது தொடர்பாக விரைவில் உரிய உத்தரவு: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
admin - 0
ஆசிரியர்களின் குற்றப் பின்னணி குறித்து விசாரிப்பது தொடர்பாக விரைவில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பதியப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், போலி என்சிசி முகாம் நடத்தியதாகக் கூறப்படும் மேலும்...
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உயிரிழந்த வழக்கறிஞர்களின் வாரிசுகளுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில் நிறுவப்பட்ட தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியம், தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் இருந்து பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசால், ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு வழக்கறிஞர் நல நிதியத்தில் இருந்து, உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் வாரிசுகளுக்கு நிதியுதவியாக தலா...
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நவம்பர் 15 (நாளை) பவுர்ணமி, அதைத் தொடர்ந்து நவ.6, 17 (சனி, ஞாயிறு) வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம்,ஈரோடு, திருப்பூருக்கு நவ.15, 16-ம் தேதிகளில் 705 பேருந்துகளும்,...
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் செல்ல முயன்ற அவரை பணியாளர்கள், பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அந்த இளைஞரை கைது செய்த போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பிரேமா. இவரது மகன் விக்னேஷ்...










