சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் 2024-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடரை ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் முடித்து வைத்தார். இந்நிலையில், வரும் 2025-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு நேற்று கூறியதாவது:
சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தை ஆளுநர் ஜனவரி 6-ம் தேதி கூட்டியுள்ளார். அன்று காலை...
சென்னை - பினாங்கு நேரடி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று தொடங்குகிறது. மலேசியா நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு மாநிலமான பினாங்குக்கு பல்வேறு நாடுகளில் இருந்து நேரடி விமான சேவை இயக்கப்படுகிறது.
அங்கு தமிழர்கள் அதிகம் வசித்தாலும், இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது. இந்தியாவில் இருந்து, குறிப்பாக சென்னையில் இருந்து பினாங்குக்கு நேரடி விமான சேவை இயக்க வேண்டும் என்று தமிழர்கள் தொடர்ந்து...
அலோபதி – ஆயுஷ் மருத்துவத்தின் ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் பல நோய்களுக்கு தீர்வு: துணைவேந்தர் நாராயணசாமி
admin - 0
அலோபதி - ஆயுஷ் மருத்துவம் ஒருங்கிணைந்து சிகிச்சை அளித்தால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கே.நாராயணசாமி தெரிவித்தார்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ‘அலோபதி - ஆயுஷ் மருத்துவர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சி மையம் - 2024’ என்ற மாநாட்டை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.நாராயணசாமி நேற்று தொடங்கி...
21 சிப்காட் தொழில் பூங்காக்களில் ஒரே நாளில் லட்சம் மரக்கன்றுகள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
admin - 0
தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில், ஒரே நாளில் 21 சிப்காட் தொழிற்பூங்காக்களிலும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: முதல்வரின் பசுமை தமிழக தொலை நோக்கு திட்டத்தின் உதவியுடன், தொழில்துறை சார்பில், புதிய முயற்சியாக, பசுமை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று (டிச.20) ஒரே நாளில், ஒரு...
இரட்டை இலை சின்னம் தொடர்பான புகாரை பரிசீலித்து முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 8 வாரம் காலஅவகாசம் வழங்க வேண்டும் எனக்கோரி திண்டுக்கல் சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனு மீது உரிய விசாரணை...
ஸ்ரீரங்கங்கத்தைச் சேர்ந்த ஆன்மிக பேச்சாளர் ரங்கராஜன் மீது போலீஸார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் குறித்து விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ‘உண்மைக்கு புறம்பாக தன்னைப் பற்றி அவதூறாக திரித்து புனையப்பட்ட உரையாடலை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பொய்யான அவதூறு கருத்துகளை பதிவிட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன்...
தமிழகத்தில் தரமற்ற துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதலை முதல்வர் ஸ்டாலின் தடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகளுக்கு 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு மற்றும் 6 கோடி லிட்டர் பாமாயில் விநியோகிக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியது.
இதில் கலந்து கொண்ட நிறுவனங்களில், துவரம் பருப்புக்கு மாதிரி வழங்கிய 6 நிறுவனங்கள்...
தகவல் தொழில்நுட்பம் வாயிலாக அரசு சேவை குறித்து ஜனவரியில் விழிப்புணர்வு வாரம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
admin - 0
தகவல் தொழில்நுட்பம் வாயிலாக அரசின் பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்து வகையில் வரும் ஜனவரி மாதத்தில் ஒருவாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளர்.
வெளிப்படையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டு, மின்னாளுகையை படிப்படியாக அரசின் அனைத்து மட்டங்களிலும் புகுத்தி, அதன்மூலம் முழுமையான அரசாங்கத்தை எய்திடும் வகையில் ‘டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம்’ தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழக அரசின் நிர்வாகத்திறன், டிஜிட்டல்...
தேனி மாவட்டம் பழனிசெட்டிப் பட்டியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் விசாரணைக்கு ஆஜராகாததால், மதுரை போதைப் பொருள்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து போலீஸார், சென்னையில் இருந்த சவுக்கு சங்கரை இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.
வீடியோ பரவல்: இதற்கிடையே தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் குறித்து அண்மையில் அவதூறாகப்...
சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உணவுத் திருவிழாவில் அனைத்து மாவட்டங்களின் பிரபல உணவு வகைகளும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா சென்னை மெரினா கடற்கரையில் நேற்று தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி...









