Google search engine
ஸ்ரீவில்லிபுத்தூர்: வனவிலங்குகளால் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு தென்னைவிவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்தையா தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதி கிராமங்களான சிங்கம்மாள்புரம், மம்சாபுரம், வாழைக்குளம், திருவண்ணா மலை வெங்கடேசபுரம் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர். வனவிலங்குகளால் சேதமடைந்த...
குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக நடவு செய்யப்பட்ட 1.90 லட்சம் மலர் நாற்றுக்கள் பூத்துக் குலுங்குகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது இதமான காலநிலைநிலவி வருகிறது. மேலும் சாரல் மழை பெய்து வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். 1.90 லட்சம் செடிகள் நடவு: இந்நிலையில் இரண்டாம் கட்ட சீசனுக்காக கடந்த ஜூலைமாதம் குன்னூர் சிம்ஸ் பூங்காவளாகத்தை சுற்றிலும் அமெரிக்கா,...
காலாண்டு தேர்வு தொடர் விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. நடப்பு கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் மற்றும் முதல் பருவ தேர்வுகள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி...
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் போற்றி வளர்க்கப்பட்ட, மாபெரும் மக்கள் பேரியக்கமான அதிமுக, அக்.17-ம் தேதி 53-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை முன்னிட்டு, 17-ம் தேதிமுதல் 20-ம் தேதிவரை பொதுக்கூட்டங்கள், கட்சி ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், புதுச்சேரி, ஆந்திராஉள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன. அதன்படி, 17-ம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், பிற மாநிலங்களிலும், ஆங்காங்கே...
மதுரை: தமிழகத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் மேல்நிலை அதிகாரிகள் முதல் கீழ்நிலை அதிகாரிகள் வரை யாரும் பணிகளை முறையாகக் கண்காணிப்பதில்லை என்று உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த கோபிநாத், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அரவக்குறிச்சி குறிகாரன் வலசை, கீழ்பாகம் கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்...
 பராமரிப்புப் பணி காரணமாக, பாஸ்போர்ட் சேவை இணையதளம் திங்கட்கிழமை காலை 6 மணி வரை செயல்படாது என தெரிவிக் கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் சேவை இணைய தளத்தில் ( www.passportindia.gov.in ) தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த இணையதளம் 4-ம் தேதி (நேற்று) இரவு 8 மணி முதல் 7-ம் தேதி காலை 6 மணி வரை இயங்காது. இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், இணையதளத்தைப் பயன்படுத்த முடியாது...
ஒருகால பூஜை திட்ட கோயில் அர்ச்சகர்களின் குழந்தைகளின் மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதன்படி, நடப்பாண்டு 500 மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2024–25-ம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், “ஒருகால பூஜைத்திட்ட கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் குழந்தைகள் நலன்கருதி, நடப்பாண்டு 500 மாணவர்களுக்கு மேற்படிப்புக்காக தலா ரூ.10...
சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார். சிலதினங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்தக்குழாயில் வீக்கம் இருந்ததால், ஏற்கெனவே திட்டமிட்டபடி கடந்த மாதம் 30-ம் தேதி இரவு சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் அயோடா மகா தமனியில் இருந்த வீக்கத்துக்கு அறுவைசிகிச்சையின்றி இடையீட்டு...
 சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முதன்மை நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். அதேபோல அமலாக்கத் துறைதரப்பு சாட்சியான தடயவியல்துறை உதவி இயக்குநர் மணிவண்ணனும் ஆஜராகியிருந்தார். அப்போது அமைச்சர் தரப்புவழக்கறிஞர் இளங்கோ, விசாரணையை தள்ளிவைக்க கோரினார். அதற்கு அமலாக்கத் துறை வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதியும்,...
 சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், வரும் 6, 7-ம் தேதிகளில் சில இடங்களிலும், வரும் 8-ம் தேதி பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக் கூடும். இன்று முதல் அக். 9 தேதி வரை தஞ்சாவூர்,...