Google search engine
சென்னை: தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நலத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் மாணவ, மாணவிகள் விடுதிகளில் குடிநீர் சுத்திகரிக்கும் கருவிகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. மாணவர்களின் ஆங்கில மொழிப் புலமையை அதிகரிக்க, சிறப்பு ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. 8,800 ஆதிதிராவிடர் மற்றும்...
சென்னை: உபா சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப் பட்டுள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சாய்பாபா மறைவெய்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவர், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற பொய்யான குற்றச்சாட்டின் பேரில் 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு கொடுமையான உபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். மாற்றுத்திறனாளியான அவருக்கு அவர் பயன்படுத்தும் சக்கர நாற்காலியைக்...
சென்னை: தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க தற்காலிக பொறுப்பாளர்களை நியமனம் செய்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் அறிவித்துள்ளார். நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை என்ற கிராமத்தில் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடியில் கொடி கம்பம் அமைக்கவும் திட்டமிட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன....
சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,614 பேருந்துகளை தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சாலை போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டஅறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. அந்த வகையில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு ஏற்ப கேஎப்டபிள்யூ என்னும் ஜெர்மன் வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெறப்படும் நிதியுதவியில் குளிர்சாதன வசதியில்லா பிஎஸ் 6 வகையிலான 1,614...
திருவாரூர்: மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது, மும்மொழிக் கொள்கைக்கு வழி வகுப்பதாகவும், இந்தி திணிப்பை வலியுறுத்துவதாகவும் உள்ளது. மேலும், 3, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது, மாணவர்கள் இடைநிற்றலை அதிகப்படுத்தும். இதனால், பள்ளிக்கல்வி படுமோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்ற அச்ச உணர்வு நீடிக்கிறது. இதன் காரணமாகவே தமிழக...
சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புக்கான 2024-25 கல்வியாண்டின் பொதுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (அக்டோபர் 14) காலை வெளியிட்டார். அதன்படி, “பிளஸ் 2 செய்முறைத் தேர்வு அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி 7-ல் தொடங்கி பிப்ரவரி 14-ல் முடிவடையும். பிளஸ் 1 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 15-ல் தொடங்கி பிப்ரவரி 21-ல் நிறைடவையும், 10-ம் வகுப்புக்கான செய்முறைத்...
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார். மேலும், “கவரைப்பேட்டை ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக 10 இடங்களில் திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ரயில் பயணிகளை பாதுகாப்பாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க 20 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது” என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார். சென்னையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர்...
திருச்சி: திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு நேற்று மாலை புறப்பட்ட விமானத்தில் தொழில்நுடப் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்த விமானம் மீண்டும் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், விமானிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த விமானத்தில் 141 பயணிகள் இருந்தனர். முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் மக்கள் விமானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்...
கோவை: மோசமான வானிலை காரணமாக துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது. துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி இன்று (அக்.12) காலை சென்று கொண்டிருந்த 'ஃப்ளை துபாய்' நிறுவனத்தை சேர்ந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவிய காரணத்தால் அரை மணி நேரத்துக்கு மேல் வானில் வட்டமிட்ட அந்த விமானம் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை சர்வதேச...
மதுரை: மதுரை சட்டக் கல்லூரி மாணவருக்கு தமிழ் வழி கல்விச் சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் தீபக் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் மதுரை சட்டக் கல்லூரியில் கடந்த 1997-ல் தமிழ் வழியில் சட்டம பயின்றேன் .குற்றவியல் வழக்கறிஞர் பணியிடத்திற்கான தேர்வு எழுத உள்ளேன். எனவே, தமிழ் வழியில் பயின்றதற்கான பிஎஸ்டிஎம் (PSTM) சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு...