Google search engine
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரது முழு மருத்துவ செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த பெண் ஒருவர், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கர்ப்பிணியான இவர் கோவை - திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் கடந்த 6-ம்...
அரசு மருத்​துவர்​களுக்கு நியாயமான ஊதியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்​கும் வகையில் அரசாணை 354-ஐ அமல்​படுத்தக் கோரி இறுதிவரை போராடியவர் அரசு மருத்​துவர் லட்சுமி நரசிம்​மன். இவர் கடந்த 2020 பிப்​.6-ம் தேதி உயிரிழந்​தார். இதுவரை இந்த அரசாணை​யும் அமலாக​வில்லை. இந்த பின்னணி​யில் ‘மருத்​துவர் லட்சுமி நரசிம்​மனின் உயிர்த் தியாகத்​துக்கு மதிப்​பில்​லை​யா?’ என்ற தலைப்​பில் அரசு மருத்​துவர்​களுக்கான சட்டப் போராட்​டக்​குழு தலைவர் எஸ்.பெரு​மாள் பிள்ளை எழுதிய கட்டுரை ‘இந்து தமிழ் திசை’...
தமிழகத்​தில் இன்று​முதல் 15-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பு: தமிழகம், புதுச்​சேரி மற்றும் காரைக்​கால் பகுதி​களில் இன்று​முதல் 15-ம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளை​யில் லேசான பனிமூட்டம் காணப்​படும். ஞாயிற்றுக்​கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதிவான வெப்ப அளவு​களின்​படி, சமவெளி...
கொடுங்கையூர் எம்.ஆர்.நகரில் தவெக வடசென்னை மாவட்டம் சார்பில் 33-வது விலையில்லா விருந்தகத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் திறந்து வைத்தார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, விஜய்யை ஆட்சியில் அமர வைப்போம் என்று உறுதியுடன் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் 32 இடங்களில் விலையில்லா விருந்தகம் செயல்படுகிறது. இங்கு தினமும் காலையில் சுமார் 200 பேருக்கு இட்லி, வடை, பொங்கல் உள்ளிட்ட சிற்றுண்டி இலவசமாக...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, நாதக இடையே மறைமுக கூட்டணிக்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கை: டெல்லி மாநிலத் தேர்தல் தோல்வி இண்டியா கூட்டணியின் தோல்வி. இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்து பிஹாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் நடைபெறவிருக்கும் தேர்தல்களிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெறுவது சாத்தியமில்லாமல் ஆகிவிடும். எனவே, இண்டியா கூட்டணியின் கலந்தாய்வுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி...
சென்னையில் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடிய இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழந்த நிலையில், மற்றொரு சம்பவத்தில் பேட்மிட்டன் விளையாடியபோது ஓய்வு பெற்ற ராணுவ கர்னலும் உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் கார்த்திக்(25). சென்னையில் தங்கி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர் பணி செய்து வரும் நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, இவர் ஆதரவு தெரிவித்த...
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ. 3,800 கோடி முதலீட்டில் டாடா குழுமத்தின் சோலார் தொழிற்சாலையில் உற்பத்தியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.2,574 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த 2 தொழிற்சாலைகள் மூலம் 6,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்டத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்....
வில்​லிவாக்கம் பேருந்து நிலை​யத்​தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ள​தால், இப்பேருந்து நிலை​யத்​தில் இருந்து இயக்​கப்​பட்ட 7 வழித்​தடங்​களின் 63 பேருந்​துகள் தற்காலிகமாக பிப்​.9-ம் தேதி முதல் ஐசிஎப் பேருந்து நிலை​யத்​தில் இருந்து இயக்​கப்பட உள்ளன. அதன்​படி, 20, 27டி, 23வி ஆகிய பேருந்​துகள் ஐசிஎப் நிறுத்​தத்​தில் இருந்து புறப்​பட்டு புதிய ஆவடி சாலை வழியாக நாதமுனி சென்று யு டர்ன் எடுத்து வில்​லிவாக்கம் (கல்​பனா) பேருந்து நிறுத்தம் வழியாக அதன்...
சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள 240 ஆண்டுகள் பழமையான பொது அஞ்சலகத்துக்கு நிரந்தர ஓவிய அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டது. சுற்றுலா, ஆன்மிகம், வரலாறு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உள்ள அஞ்சல் அலுவலகங்களுக்கு ‘நிரந்தர ஓவிய அஞ்சல் முத்திரை’ வெளியிடப்படுகிறது. சென்னையில் மயிலாப்பூர் தலைமை அஞ்சலகம், அண்ணா சாலை அஞ்சல் தலை பணியகம், சென்னை பல்கலைக்கழக அஞ்சல் அலுவலகம் உட்பட தமிழகத்தில் இதுவரை 51 தபால் நிலையங்களுக்கு நிரந்தர அஞ்சல்...
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு கோரும் கால அவகாசத்தை ஏற்க முடியாது என்றும், திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் எனவும் டாஸ்மாக் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், விற்பனையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமை செயலகம் முன்பு பிப்.11-ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்...