தமிழகத்தில் உள்ள 3,873 பொது நூலகங்களுக்கு ரூ.40 கோடியில் புத்தகங்களை கொள்முதல் செய்வதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. வெளிப்படையான முறையில் நூல்கள் கொள்முதல் செய்யப்படுவது நூலகர்கள், வாசகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் பொது நூலகத் துறையின்கீழ் மாநில நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என 4,500-க்கும் மேற்பட்ட நூலகங்கள் இயங்கி வருகின்றன. கடந்த காலங்களில் நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து...
உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மேற்கொண்ட பொய் பிரச்சாரத்தால் தர்பூசணி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால், சாகுபடியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
தர்பூசணி பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்க வேண்டும், கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மகளிர் பெயரில் 53,333 குடியிருப்புகள் ஒதுக்கீடு: அமைச்சர் அன்பரசன் பெருமிதம்
admin - 0
திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மகளிர் பெயரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 53,333 குடியிருப்புகள் மகளிர் பெயரில் ஒதுக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வாரியத்தால் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியை நேற்று திறந்து வைத்தார்....
திருப்பதி பெருமாளை இழிவுபடுத்தி பாடல்; நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை – இந்து தமிழர் கட்சி வலியுறுத்தல்
admin - 0
‘திருப்பதி பெருமாளை இழிவுபடுத்தி பாடல் வெளியிட்ட நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகைச்சுவை நடிகர் சந்தானம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் திருப்பதி பெருமாளை கேலி செய்யும் விதமாக, ‘பார்க்கிங் காசு கோவிந்தா, பாப்கார்ன் டேக்ஸ் கோவிந்தா, ஹீரோயின் நடிப்பு கோவிந்தா, ஃபேன்ஸோட...
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி கோடை விழா கோத்தரி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, 127-வது மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது.
கண்காட்சி வரும் 25-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஜெர்மனியம் சைக்ளோபின் பால்சம், புதிய ரக ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி...
2021 சட்டமன்றத் தேர்தலில் மகனுக்காக அறந்தாங்கி தொகுதியை அழுத்தம் கொடுத்து வாங்கிய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், 2024 மக்களவைத் தேர்தலில் தனக்கு போட்டியிட தொகுதி இல்லாமல் போனதால் அப்செட் மோடுக்குப் போனார். இப்போது, 2026-ல் அறந்தாங்கி தொகுதியில் உதயசூரியன் போட்டியிட வேண்டும் என திமுக-வினர் உரிமைக் குரல் எழுப்புவதால் அரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரனுக்கும் மீண்டும் அறந்தாங்கி சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான...
தமிழக அரசின் நடவடிக்கைகளால் பெண் காவலர்களின் வாழ்க்கையிலும் பணியிலும் மாற்றங்கள்: உதயநிதி ஸ்டாலின் தகவல்
admin - 0
தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களின் பணியிலும், வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
‘காவல் துறையில் பெண்கள்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து 11-வது தேசிய மாநாடு வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் நேற்று முன்தினம் தொடங்கியது இரண்டு நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டை...
2026 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை: தவெக துணை பொதுச்செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார் உறுதி
admin - 0
2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது என்று தமிழக வெற்றிக் கழக துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறினார்.
தவெக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வக்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் தவெக இஸ்லாமியர்களுக்கு துணைநிற்கும். வக்பு சட்டத்துக்கு எதிராக திமுக கட்சி சார்பிலோ அல்லது தமிழக அரசு...
சந்தானம் நடித்துள்ள திரைப்படத்தின் பாடலுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பாடலில் சர்ச்சை வரிகள் நீக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘சீனிவாசா கோவிந்தா’ எனும் பாடல், திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர்...
“வரும் 2026 மட்டுமல்ல, 2031, 2036-ம் ஆண்டிலும் தமிழகத்தில் திமுகதான் ஆட்சி அமைக்கும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உதகையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 16) காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “உதகை பயணம் சிறப்பாக அமைந்துள்ளது. மக்களை சந்தித்துப் பேச முடிந்தது. அவர்களது கருத்தையும் அறிந்துகொள்ள முடிந்தது. நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாது, சுற்றுலா நிமித்தமாக வந்த மக்களின்...










