தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பெரியார், அம்பேத்கர் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிலைகளைத் திறந்துவைத்தனர். இதில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் திருமாவளவன் பேசியதாவது: திமுக அரசியல் இயக்கமாகவும், ஆளும் கட்சியாகவும் வீரநடை போடுகிறது. எனவே, இன்னொரு கட்சி திமுகவுக்கு முட்டுக்கொடுக்க வேண்டிட அவசியமில்லை. திமுக பலவீனமாகவும் இல்லை. திமுகவை...
வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தவெக தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா மற்றும் முஸல்மான் வக்பு (ரத்து) மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இண்டியா கூட்டணியின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது. இதைத் தொடர்ந்து மசோதாவுக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்த நிலையில், சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது.
இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவையில் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு,...
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை 3 நாள் ஆன்மிக பயணமாக நேற்று உத்தரகாண்ட் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து இமயமலை செல்லவும் அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பாஜக அமைப்பு தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் அண்ணாமலை மாற்றப்பட்டு, புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதேமேடையில்,...
திமுகவுடன் பாஜக மறைமுக கூட்டணி என விஜய் சொல்வதை பொருட்படுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன் கருத்து
admin - 0
திமுகவுடன் பாஜக மறைமுக கூட்டணி என்று விஜய் பொத்தாம் பொதுவாக கூறுவதை பொருட்படுத்த தேவையில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நான் பாஜக மாநில தலைவராக புதிதாக பொறுப்பேற்றாலும், கட்சி தொண்டர்களுடன் கடந்த 9 ஆண்டுகளாக பழகி வருகிறேன்....
தமிழ் புத்தாண்டு புதிய எழுச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக அமையட்டும்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
admin - 0
தமிழ் புத்தாண்டு புதிய எழுச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக அமையட்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: தமிழ்ப் புத்தாண்டு, பெருமைமிக்க பண்டைய, வளமான தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் கொண்டாட்டமாகும். இந்த புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளை கொண்டுவரட்டும்.
அதிமுக...
தமிழகத்தில் இன்றும், நாளையும் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.14) இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்....
பாமகவில் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே நடைபெற்று வரும் கட்சியை வழிநடுத்துவது யார் என்ற அதிகார மோதல் போக்கால் யார் பின்னால் செல்வது என தெரியாமல் நிர்வாகிகளும், தொண்டர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்த மோதல் போக்கு ஏதோ புதிதாக இப்போது ஏற்பட்டது அல்ல. கட்சியின் இளைஞர் அணி தலைவரில் இருந்து கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி, கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்த போதே, தந்தைக்கும், மகனுக்கும்...
தொழில்நுட்ப வளர்ச்சி, வெளிநாடுகளின் செயல்பாடுகள் போன்றவற்றால் பாதுகாப்பு சூழல் வேகமாக மாறி வருகிறது. இதைக் கருத்திக் கொண்டு, தக்க வியூகங்கள் வகுத்து முப்படை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சித் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 45 வார பயிற்சியை நிறைவு செய்த 478 அதிகாரிகளுக்கு பட்டங்கள் வழங்கி பாதுகாப்புத் துறை அமைச்சர்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு நேற்று வந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
பின்னர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாகலாந்து மிக குளிர்ச்சியாகவும், இயற்கை எழில் நிறைந்த மாநிலமாகவும் உள்ளது. இந்த மாநிலத்தில் முந்தைய காலத்தில் ஆயுதம் ஏந்திய போராளிகள் இருந்தனர். மோடி பிரதமரான பிறகு போராளிகளுக்கும், அரசுக்குமிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இனி ஆயுதத்தை ஏந்த மாட்டோம் என்று போராளிகள் உறுதியளித்தனர். அதை...
பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
admin - 0
பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்படும் இடமாறுதல்களை ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கம்ப்யூட்டர் புரோகிராமராகப் பணிபுரிந்து வருபவர் ஆர்.சிவகுமார். இவர் 1995 முதல் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், தனக்கு கம்ப்யூட்டர் புரோகிராமர்களுக்கான ஊதியம் தரப்படுவதில்லை. ணிக்குரிய ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதில் சிவகுமாருக்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை உச்ச...










