Google search engine
மாநகராட்சி சார்பில் வெள்ளப் பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை 6 இடங்களில் நேற்று நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளிலிருந்து மிக அதிக வெள்ளநீர் வெளியேற்றப்படும்போது, ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை எவ்வாறு மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை 6 இடங்களில் நேற்று நடைபெற்றது. அதன்படி, மணலி மண்டலம்...
கடற்கரை யார்டில் நடைமேம்பாலம் பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரை - வேளச்சேரி, அரக்கோணம் வழித் தடத்தில் சில புறநகர் மின்சார ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே, சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை கடற்கரை யார்டில் நடைமேம்பாலம் பணி நடைபெறுவதால், கடற்கரை - வேளச்சேரி, அரக்கோணம் வழித் தடத்தில் சில புறநகர் மின்சார ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வேளச்சேரி...
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 17-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று முன்தினம் இரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும், அந்த வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியிலும் அதிக திறன் கொண்ட வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது வெள்ளிக்கிழமை வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பதிவாளர் அலுவலக ஊழியர்கள், இது...
நாட்டின் எல்லை பாதுகாப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளுக்கு முக்கிய தகவல்களை வழங்கும் இஓஎஸ்-09 உள்ளிட்ட 6 செயற்கைக் கோள்கள் வரும் 18-ம் தேதி பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. விவசாயம், பேரிடர் மேலாண்மை, நீர்வளம், மீன்வளம், காடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட தொலைஉணர்வு பயன்பாட்டுக்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் என பல்வேறு செயற்கைக் கோள்கள்...
தமிழகத்தில் உள்ள 3,873 பொது நூலகங்களுக்கு ரூ.40 கோடியில் புத்தகங்களை கொள்முதல் செய்வதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. வெளிப்படையான முறையில் நூல்கள் கொள்முதல் செய்யப்படுவது நூலகர்கள், வாசகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் பொது நூலகத் துறையின்கீழ் மாநில நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என 4,500-க்கும் மேற்பட்ட நூலகங்கள் இயங்கி வருகின்றன. கடந்த காலங்களில் நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து...
உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மேற்கொண்ட பொய் பிரச்சாரத்தால் தர்பூசணி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால், சாகுபடியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர். தர்பூசணி பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்க வேண்டும், கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மகளிர் பெயரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 53,333 குடியிருப்புகள் மகளிர் பெயரில் ஒதுக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வாரியத்தால் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியை நேற்று திறந்து வைத்தார்....
‘திருப்பதி பெருமாளை இழிவுபடுத்தி பாடல் வெளியிட்ட நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகைச்சுவை நடிகர் சந்தானம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் திருப்பதி பெருமாளை கேலி செய்யும் விதமாக, ‘பார்க்கிங் காசு கோவிந்தா, பாப்கார்ன் டேக்ஸ் கோவிந்தா, ஹீரோயின் நடிப்பு கோவிந்தா, ஃபேன்ஸோட...
ஊட்டி அரசு தாவர​வியல் பூங்​கா​வில் புகழ்​பெற்ற 127-வது மலர்க் கண்​காட்​சியை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்​து​வைத்​தார். நீல​கிரி மாவட்​டத்​தில் கடந்த 3-ம் தேதி கோடை விழா கோத்​தரி காய்​கறி கண்​காட்​சி​யுடன் தொடங்​கியது. தொடர்ந்​து, 127-வது மலர்க் கண்​காட்சி நேற்று தொடங்​கியது. கண்​காட்சி வரும் 25-ம் தேதி வரை நடை​பெறும் இந்​தக் கண்​காட்​சி​யில் சுற்​றுலாப் பயணி​களைக் கவரும் வகை​யில் ஜெர்​மனி​யம் சைக்​ளோபின் பால்​சம், புதிய ரக ஆர்​னமெண்​டல்​கேல், ஓரியண்​டல் லில்​லி, பேன்சி...
2021 சட்டமன்றத் தேர்தலில் மகனுக்காக அறந்தாங்கி தொகுதியை அழுத்தம் கொடுத்து வாங்கிய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், 2024 மக்களவைத் தேர்தலில் தனக்கு போட்டியிட தொகுதி இல்லாமல் போனதால் அப்செட் மோடுக்குப் போனார். இப்போது, 2026-ல் அறந்தாங்கி தொகுதியில் உதயசூரியன் போட்டியிட வேண்டும் என திமுக-வினர் உரிமைக் குரல் எழுப்புவதால் அரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரனுக்கும் மீண்டும் அறந்தாங்கி சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எம்​ஜிஆர் காலத்து அரசி​யல்​வா​தி​யான...