Google search engine
சரக்குகள் கையாளுவதை அதிகரிக்க, ஈரோடு, திருப்பூர், பெருந்துறை, வஞ்சிபாளையம் ஆகிய 4 ரயில்வே ஷெட்டுகளை நவீனமயமாக்கும் பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ரயில்வேயில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சரக்குகளைக் கையாளும் ரயில் நிலையங்களை மேம்படுத்துவது, சரக்கு ரயிலில் நவீன வசதிகளை ஏற்படுத்துவது, சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது....
தமிழகத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம், வடக்கு கேரள பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் (மே 19),...
திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி, 3 லட்சம் காலி பணியிடங்களை விரைவாக நிரப்பவேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துப்போட்டி தேர்வு அமைப்பு வலியுறுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வு வயது உச்சவரம்பை மற்ற 12 மாநிலங்களில் உள்ளதுபோல 49 வயது வரை உயர்த்த வேண்டும்; வெளிப்படைத்தன்மையுடன் டிஎன்பிஎஸ்சி செயல்பட வேண்டும்; தமிழ் வழியில் முதன்மைத் தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு 20 சதவீதம் வழங்க வேண்டும்; தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும்; முதன்மை...
தமிழகம் முழுவதும் அரசின் சேவைகளைப் பெற அதிக அளவில் விண்ணப்பங்கள் வரும் நிலையில், இ-சேவை மைய சர்வர் அவ்வபோது முடங்கி பணிகள் பாதிக்கப்படுகிறது. இதனால் மாணவர் சேர்க்கைக்கான சான்றை உரிய காலத்தில் பெற முடியாமல் பெற்றோர் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் அரசு கேபிள் டிவி நிறுவனம், கூட்டுறவுத் துறை, எல்காட் என பல்வேறு துறைகளுக்கு அரசு இ-சேவை மையங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
 கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதை மறைத்து, இந்து பட்டியலின இடஒதுக்கீட்டில் போட்டியிட்ட அதிமுக பெண் பேரூராட்சித் தலைவரை தகுதி நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி கவுன்சிலர் அய்யப்பன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 2022 உள்ளாட்சித் தேர்தலில் தேரூர் பேரூராட்சி வார்டு 8-ல் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். 2-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற...
தஞ்சாவூர் அருகே தளவாய்ப்பாளையம் வீரையன் நகரில் வசித்து வருபவர் எம்.ரங்கசாமி. அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான இவர் தற்போது அமமுக துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். 2011-2017 காலகட்டத்தில் இவர் எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.49 கோடி சொத்து சேர்த்ததாக ரங்கசாமி, மனைவி ஆர்.இந்திரா, மகன் வினோ பாரத் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், ரங்கசாமி வீட்டில் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு...
கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் பசுந்தீவனங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தமிழக கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அலுவலக மாநாட்டுக் கூட்ட அரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், 34 அரசு ஊழியர்களின் பதவி உயர்வு ஆணைகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். உள்கட்டமைப்பு பணிகள்: பின்னர், கால்நடை பராமரிப்புத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்...
தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் தொடங்கியது. சென்னையில் இருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் 402 பேர் புறப்பட்டனர். தமிழகத்திலிருந்து நடப்பாண்டு 5,730 பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக 5,407 பேரும், மீதமுள்ள 323 பேர் பல்வேறு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்தும் பயணம் மேற்கொள்கின்றனர். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 402 பேர்...
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணி ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக மாவட்டத் தலைவர், செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கவுரவத் தலைவர் கோ.க.மணி எம்எல்ஏ, மாநிலப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், மாநில...
சென்னையில் சட்டம் - ஒழுங்கு நிலை தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் அருண் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, மோசடி உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் அருண் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ரவுடிகள், தலைமறைவு குற்றவாளிகளை கைது...