Google search engine
போலீஸார் தொந்தரவு கொடுப்பதாகக் கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று காலை பெண் ஒருவர் கணவர் மற்றும் 2 பிள்ளைகளுடன் வந்தார். வந்தவர் திடீரென மறைத்து வைத்திருந்த ‘பிளாஸ்க்கை’ திறந்து அதில் இருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார். இதைக் கண்டு அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அவரை...
காவல், சிறைத் துறை சார்பில் ரூ.668.71 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநிலத்தின் அமைதியைப் பேணிப்காத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்புப் பணிகளுக்காக...
டாஸ்மாக்கில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நேற்று முன்தினம் நள்ளிரவில் நிறைவு பெற்றது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை...
மாணவர்களின் கல்வியில் திமுக அரசு தலையிட வேண்டாம் என தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக பாஜக சார்பில் சென்னை விருகம்பாக்கம், தி.நகர் உள்பட 6 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், பழங்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜகவை பார்த்து சூரியன் அச்சப்படும்...
விடுமுறைக் காலங்களில் அரசுப் பள்ளிகளில் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான தேர்வுகள் நிறைவடைந்து, தற்போது முடிவுகளும் வந்துவிட்டன. 2025-26-ம் கல்வியாண்டுக்கான பள்ளி திறக்கும் தேதியை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் அரசுப் பள்ளிகளையே நம்பி இருக்கின்றனர். காமராஜரின் எண்ணங்கள் நிறைவேற, கல்வி அனைவருக்கும்...
 பிரதமரின் பிம்பம் பலவீனமடைந்ததை மறைக்கவே நல்லெண்ண தூதுக் குழுக்களை மத்திய பாஜக அரசு அமைத்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக 7 நல்லெண்ண தூதுக் குழுக்களை மத்திய அரசு அமைத்திருப்பதை வரவேற்கிறோம். நல்லெண்ணத் தூதுக் குழுக்களை அனுப்புவது என்ற நிலைப்பாட்டை எடுப்பதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக யூகிக்க முடிகிறது. அதன்படி,...
திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த போலீஸார் இருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருப்பூரில் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி சமீபத்தில் நடைபெற்றது. அதில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். அப்போது, அனுப்பர்பாளையம் மற்றும் திருப்பூர் தெற்கு காவல் நிலையங்களில் காவலர்களாகப் பணியாற்றும் மந்திரம், சின்னச்சாமி ஆகியோர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதையடுத்து, இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட...
சென்னை மாநகராட்சி சார்பில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக மின் மாற்றியை சுற்றி நிறுவப்படும் மறைப்புகளில் பாரம்பரிய கட்டிடங்களை மாதிரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மாநகரப் பகுதியில் மின் வாரியம் சார்பில் ஏராளமான மின் மாற்றிகள் சாலையோரங்களில் நிறுவப்பட்டுள்ளன. குறிப்பாக வட சென்னையில் மின் மாற்றிகள் நிறுவப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அங்கு கட்டுமானக் கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே...
சென்னை தரமணி ராஜீவ்காந்தி சாலையில் பள்ளம் ஏற்பட்ட பகுதியில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் சீர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை சோழிங்கநல்லூரிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி நேற்று முன்தினம் மாலை வாடகை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாடகை காரில் ஐடி ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர், ஓட்டுநர் ஆகியோர் பயணித்தனர். தரமணியில் டைடல் பார்க் சந்திப்பு அருகில், ராஜீவ்காந்தி சாலையில்...
திருவோணம் அருகே அனுமதியின்றி இயங்கிவந்த பட்டாசு ஆலையில் நேற்று நேரிட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி தென்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சமரத்பீவி(47). இவரது மகன் ரியாஸ்(19). இவர்கள் அதே பகுதியில் அண்ணாதுரை என்பவருக்குச் சொந்தமான இடத்தில் பட்டாசு கடை நடத்தி வந்தனர். பின்னர், அதே இடத்தில் சணல் கொண்டு தயாரிக்கப்படும் நாட்டுவெடியை அனுமதியின்றி தயாரித்து, கோயில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்து...