சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தொகுதிவாரியாக பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
அந்தவகையில் தேமுதிக தனது கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக மாற்றி அமைத்து வருகிறது. சமீபத்தில், தமிழக முழுவதும் மண்டல பொறுப்பாளர்களை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்தார். தொடர்ந்து தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை...
வாடகை ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் விமான நிலையங்களுக்கு எரிபொருள் கொண்டு செல்லமாட்டோம்: டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
admin - 0
வாடகை ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் நாளை முதல் விமான எரிபொருளை கொண்டு செல்லமாட்டோம் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் முனையம் செயல்பட்டு வருகிறது. இங்கு எண்ணூர், காமராஜர் துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்கள் கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.
பின்னர், டேங்கர் லாரிகள் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு...
உதட்டு வீக்கத்துக்காக சென்ற சிறுவனின் மர்ம உறுப்பில் ஆபரேஷன்: மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
admin - 0
உதட்டில் ஏற்பட்ட வீக்கத்துக்கு சிகிச்சை பெற சென்ற சிறுவனின் ஆண் குறியில் ஆபரேஷன் செய்ததால், மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக மருத்துவமனையின் மருத்துவம் மற்றும் செவிலியரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில், உதட்டில் ஏற்பட்ட வீக்கத்துக்காக 9 வயது சிறுவன் ஒருவன் அனுமதிக்கப்பட்டான். அந்த சிறுவனுக்கு மருத்துவரும், செவிலியரும் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்கு பின்னர்...
கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் 25, 26-ம் தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்குப் பருவமழை கேரளாவில் அடுத்த சில தினங்களில் தொடங்கி, தமிழகப் பகுதிகளில் பரவ வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து,...
தூய்மை பணியாளர் திட்டத்தில் முறைகேடு: சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
admin - 0
தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் செல்வப்பெருந்தகையின் நெருங்கிய உறவினர் அங்கம் வகித்த நிறுவனம் அதிக லாபம் அடைந்ததாக குற்றம்சாட்டி சிபிஐ விசாரணை கோரி சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மத்திய அரசின் நமஸ்தே என்ற திட்டம் ஆகியவற்றில் முறைகேடு நடப்பதாக யூடியூபரான...
கல்லூரி மாணவர்களுக்காக 20 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல்: தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியது
admin - 0
கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகளை வழங்குவதற்கான கொள்முதலுக்கு தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தாக்கல் செய்தார். அதில் அரசு ஊழியர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அப்போது, தமிழகத்தில் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து...
சமூக நீதியை குழிதோண்டி புதைத்த காட்டாட்சி நடக்கிறது: திமுக அரசு குறித்து நயினார் நாகேந்திரன் விமர்சனம்
admin - 0
தமிழக வரலாற்றிலேயே சமூக நீதியை குழிதோண்டி புதைத்த காட்டாட்சியை இதுவரை யாரும் கண்டதில்லை என திமுக அரசை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளச்சாராயத்தைக் காப்பாற்ற எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் காவு வாங்க திமுக அரசு தயாராக இருக்கும் என்பதற்கான மற்றொரு ஆதாரம் தான் தஞ்சாவூரில் நிகழ்ந்த பயங்கர சம்பவம். கடந்த ஏப்ரல் மாதம், நடுக்காவேரியில் கள்ளச்சாராயம் விற்பவர்களைத்...
மின்வாரியத்துக்கு வழங்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் கோரிக்கை
admin - 0
‘மின்வாரியத்துக்கு மத்திய நிதி நிறுவனங்கள் வழங்கி உள்ள கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும்’ என, மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில், அமைச்சர் சிவசங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென் மாநில மின்துறை அமைச்சர்களின் மாநாடு, மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில், தமிழக மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பங்கேற்று பேசியதாவது:
ஊரக மின்மயமாக்கல் கழகம் (ஆர்இசி)) மற்றும் மின் நிதிக் கழகம் (பிஎஃப்சி) ஆகிய...
137 பொறியியல் கல்லூரிகளுடன் தொழில்நுட்ப மையம் ஒப்பந்தம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
admin - 0
தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் 137 பொறியியல் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், புத்தொழில் நிறுவன மேம்பாட்டுக்கான ‘ஜிக்சா’ தளத்தின் பயன்பாடு தமிழகத்தின் 2, 3-ம் நிலை நகரங்களுக்கும் கிடைக்கும் என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ‘உமாஜின் - 2024’ மாநாட்டில், தமிழ்நாடு தொழில்நுட்ப மையம்...
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அமலாக்கத் துறை சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றுதான். மக்கள் வரிப்பணத்தில் ஊழல் செய்தால் கட்டாயம் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். ஆனால், அமலாக்கத் துறை சோதனைக்குப் பின்னர் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. எனவே, உண்மை...









