கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராடும்போது, தமிழகத்தில் அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
விருதுநகரில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து 18 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக,...
மெரினா உள்ளிட்ட 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் மையங்கள்: விரைவில் திறக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டம்
admin - 0
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை உள்ளிட்ட 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்கும் மையங்களை விரைவில் திறக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
சென்னை குடிநீர் வாரியம் நாளொன்றுக்கு 1100 மில்லியன் லிட்டர் குடிநீரை தினமும் விநியோகித்து வருகிறது. அது சுத்தமான நீராக இருந்தாலும், மக்கள் ஆர்ஓ தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கப்பட்ட, தெளிவான நீரையே குடிக்க விரும்புகின்றனர். அதுவே அவர்களுக்கு மன நிறைவை தருகிறது.
அதனால் கணிசமான தொகையை...
எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீ. உயரம் ஏறி சாதனை: திருநெல்வேலி பள்ளி மாணவி துணை முதல்வரிடம் வாழ்த்து
admin - 0
எவலெஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்த திருநெல்வேலி பள்ளி மாணவி துணை முதல்வரிடம் வாழ்த்து பெற்றார். திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயது பள்ளி மாணவி லலித் ரேணு. இவர் தனது தந்தை ஸ்ரீதர் வெங்கடேஷுடன் சேர்ந்து மலையேற்ற பயிற்சி பெற்று வருகிறார்.
அவர் 6,000 அடி உயரம் உடைய வெள்ளியங்கிரி மலை முதல் 30-க்கும் மேற்பட்ட பல்வேறு மலைகளில் மலையேற்றம் மேற்கொண்டுள்ளார். அண்மையில் அவர் எவரெஸ்ட்...
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், 15-வது ஊதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு தொடங்கியது. இதில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றது.
30 சங்கங்கள் வெளிநடப்பு: போக்குவரத்துத் துறை செயலாளர் க.பணீந்தர்ரெட்டி, மாநகர போக்குவரத்துக்...
பழைய புத்தகக் கடை போல அரசு நூலகங்கள் செயல்படுவதாக தமிழக பாஜக செயலாளர் எஸ்.ஜி.சூர்யா விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க ஆட்சி என்றாலே ஏதோ கல்விக்கும் அறிவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற மாயை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாயை இப்போது நூலகத் துறைக்குள் நடக்கும் நாடகங்களால் உடைபட்டு வருகிறது.
தி.மு.க ஆட்சி அமைந்த 2021 -22, 2022 - 23 ஆண்டுகளில் வெளிவந்த புதிய...
இ.டி.க்கு பயமில்லை என்றால் நண்பர்களை வெளிநாட்டுக்கு அனுப்பியது ஏன்? – உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
admin - 0
‘இ.டி.க்கு பயமில்லை என்றால் நண்பர்களை வெளிநாட்டுக்கு அனுப்பியது ஏன்?’ என துணை முதல்வர் உதயநிதிக்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
திமுகவுக்கு பயம்: பாஜக - அதிமுக கூட்டணியை பார்த்து திமுகவுக்கு பயம் வந்திருப்பது உண்மை. பிரதமர் மோடிக்கும் பயப்பட மாட்டேன், இ.டி.க்கும் (அமலாக்கத் துறை) பயப்படமாட்டேன் என துணை முதல்வர் உதயநிதி தொடர்ந்து...
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
டிஜிபி மற்றும் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி அலுவலகங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு கடிதம் வந்தது. அதில், ‘சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழி சாலையில் உள்ள தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி வீட்டில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது...
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க கோரிக்கை
admin - 0
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்துக்கு அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி மருத்துவர் ரோடரிக்கோ எச்.ஆப்ரினுக்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் தென் பகுதியில் உள்ள பெரிய மாநிலம் தமிழகம். இந்த மாநிலம் 8...
கோடை விடுமுறை முடிந்து மக்கள் ஊர் திரும்பும் நிலையில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்: பயணிகள் குற்றச்சாட்டு
admin - 0
கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோடை விடுமுறை முடிந்து, தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதியும், தனியார் பள்ளிகள் ஜூன் 5-ம் தேதியும் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் நாளை (மே 30) ஊர் திரும்ப திட்டமிட்டு வருகின்றனர்.
ரயில்களில் முன்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்த...
பழைய பெருங்களத்தூரில் பேட்டரியை அணைக்காமல் சென்றதால் பழுதுபார்க்கும் மையத்தில் தீ விபத்து: 9 கார்கள் எரிந்து நாசம்
admin - 0
பழைய பெருங்களத்தூரில் கார் பழுதுபார்க்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 9 கார்கள் எரிந்து நாசமாகின. பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (42) இவர் அதே பகுதியில் கார் பழுதுபார்க்கும் மையம் மற்றும் கார்களை வாடகை விடும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல பணிகள் முடிந்த பிறகு, கடையை பூட்டிவிட்டு அனைவரும் சென்றனர்.
இந்நிலையில், நேற்று காலை பழுதுபார்க்கும் மையத்தின் உள்பகுதியில் இருந்து திடீரென...










