Google search engine
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் 60 சதவீதம் பேர் அதீத வெப்பம் சார்ந்த உடல் நல பாதிப்புகளுக்குள்ளாகும் அபாயத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் பருவகாலங்களில் ஏற்படும் தட்பவெப்ப மாறுபாடுகளை எதிர்கொள்ளுதல், அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தல், விழிப்புணர்வுடன் இருத்தல் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு கேள்வி - பதில் அடிப்படையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர்...
கன்னட மொழி குறித்த பேச்சு தொடர்பாக மன்னிப்பு கேட்க மறுத்ததன் மூலம் கமல்ஹாசன் தமிழனாக தலை நிமிர்ந்து நிற்கிறார், என செல்வபெருந்தகை தெரிவித்தார். ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொண்டார். தொடர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏ சி.சரஸ்வதியின் வீட்டுக்குச் சென்று, அவரது மகள் கருணாம்பிகா குமாரின் மறைவுக்கு செல்வபெருந்தகை ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் செல்வபெருந்தகை கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக...
தரு​மபுரி​யில் தேமு​திக நிர்​வாகி இல்​லத் திருமண நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 234 தொகு​தி​களுக்​கும் பொறுப்​பாளர்​களை நியமித்​து, தேர்​தல் பணி மேற்​கொள்​கிறோம். இதற்​காக விரை​வில் மாநில, மாவட்​டச் செய​லா​ளர்​களுக்​கான கூட்​டம் நடை​பெற உள்​ளது. வரும் ஜனவரி 9-ம் தேதி கடலூரில் மாநாடு நடத்த உள்​ளோம். தொடர்ந்து எங்​கள் பயணம் தொடரும். பாஜக​வில் இருந்​து, கூட்​டணி பேச்​சு​வார்த்​தைக்கு எங்​களுக்கு...
ராணுவ வீரர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை உரிய காலக்கெடுவுக்குள் ஒப்படைக்காததால் ஏற்பட்ட தாமதத்துக்கு ஆண்டுக்கு 9.30 சதவீத வட்டியும், சேவை குறைபாடுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும், வழக்கு செலவுக்காக ரூ.25 ஆயிரமும் வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு ராணுவ நல வீட்டுவசதி அமைப்பு சார்பில் லாப...
தமிழகத்தில் முருகன் அவதாரத்தை எடுத்துள்ளது பாஜக. இதற்கு மக்கள் ஏமாறமாட்டார்கள், முருகனும் ஏமாறமாட்டார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் வரும் 14-ம் தேதி பேரணி நடைபெறவுள்ளது. ஜனநாயகத்தைக் காப்பவர்களும், மதச் சார்பின்மையைப் பாதுகாப்பவர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்க வேண்டும். பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு...
திருச்செந்தூரில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்வதற்காக சாக்கடை தொட்டிக்குள் இறங்கிய மாற்றுத் திறனாளி தூய்மைப் பணியாளர் கழிவுநீரில் மூழ்கி உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகேயுள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் சுடலைமணி(40). மாற்றுத் திறனாளியான இவர், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பாதாள சாக்கடைக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்காக நேற்று காலை...
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலைய கட்டுமானப்பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அடுத்த மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் திறக்கப்பட்டது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து செல்கிறார்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அருகில், தாம்பரம் –...
மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை அரசியலுக்காக பாஜக நடத்துகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அரசமலை வையாபுரியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாஜகவினர் முருகனை ஒப்புக்கு தூக்கிப் பிடிக்கிறார்கள். ஆனால், நாங்கள் உளமாறப் பிடிக்கிறோம். பாஜக நேற்று தொடங்கிய கட்சி அல்ல. அதேபோல, முருகனும் புதிதாகத் தோன்றவில்லை. இவ்வளவு நாள் முருக பக்தர்கள் மாநாட்டை ஏன் நடத்தவில்லை? தமிழகத்தில்...
உணவுத்துறை அமைச்சர் தலைமையிலான மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலை சீரமைத்து 23 உறுப்பினர்களுடனான புதிய பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசிதழில் உணவுத்துறை செயலர் சத்யபிரத சாஹூ வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: உணவுத்துறை அமைச்சர் தலைமையிலான இந்த கவுன்சிலில், வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த், தஞ்சாவூர் எம்.பி., எஸ்.முரசொலி, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா, உணவுப் பொருள் வழங்கல் ஆணையர், மாநில நுகர்வோர் குறைதீர்...
வழக்கறிஞர்கள் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் அறிவுரை வழங்கினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் நாளை(ஜூன் 8) பணி ஓய்வு பெற இருக்கிறார். இதையொட்டி, அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் பிரிவுபசார விழா நேற்று நடைபெற்றது. விழாவில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் பேசியதாவது: சீனாவில் ஆண்டுகளுக்கு பெயர் சூட்டுவதுண்டு. அதேபோல் 1963-ம் ஆண்டுக்கு நீதிபதிகள் ஆண்டு என்று தான்...