உ.பி.யின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சனூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் நேற்று காலை 9.15 மணிக்கு சோபன் - பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது.
இதில் இருந்து இறங்கிய பயணிகள் சிலர், எதிரில் உள்ள 3-வது நடைமேடைக்கு செல்ல படிக்கட்டுகளை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது 3-வது லைனில் வேகமாக வந்த நேதாஜி எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது. இதில் 6 பெண்கள்...
ஆந்திராவில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிக லஞ்சம் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, நேற்று ஒரே நேரத்தில் என்.டி.ஆர் மாவட்ட இப்ரஹிம்பட்டினம், பிரகாசம் மாவட்டம் ஓங்கோல், விஜயநகரம் மாவட்டம் போகாபுரம், சத்யசாய் மாவட்டம் சிலமத்தூரு, பல்நாடு மாவட்டம் நரசராவ் பேட்டா, திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா உட்பட பல மாவட்டங்களில் 120 பத்திரப்பதிவு மற்றும் துணை பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ராணுவத்துக்கு மதம், ஜாதி ஆகியவை கிடையாது என ராகுல் கருத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.
பிஹார் மாநிலம் அவுரங்காபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ நாட்டில் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 10 சதவீதம் பேர் உள்ளனர்.
இவர்கள் கட்டுப்பாட்டில்தான் கார்பரேட் நிறுவனங்கள், அரசு நிர்வாகம், நீதித்துறை, ராணுவமும் கூட இந்த 10 சதவீதத்தினர்...
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள மூடனஹள்ளியை சேர்ந்தவர் மஞ்சே கவுடா (55).
இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் கர்நாடக வனத்துறை இடத்துக்கு அருகில் இருந்தது. இதனால் வனத்துறை அந்த நிலத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. தனது நிலத்துக்கு உரிய இழப்பீடை உடனடியாக வழங்குமாறு மண்டியா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சே கவுடா மனு அளித்தார். ஆனால் அரசு இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தியுள்ளது.
இந்நிலையில் மஞ்சே கவுடா...
பிஆர்எஸ் கட்சியை பாஜகவிடம் அடமானம் வைத்த கேசிஆர்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் குற்றச்சாட்டு
admin - 0
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் சட்டப்பேரவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் ஜூப்ளி ஹில்ஸ் சிறுபான்மையினர் சங்கத்தினர் நேற்று முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது ரேவந்த் ரெட்டி பேசியதாவது:
ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டபோது காங்கிரஸ் மட்டுமே சிறுபான்மையினர் நலனில் அக்கறை செலுத்தும் கட்சி என...
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தாய், ஆண் நண்பருக்கு 180 ஆண்டு சிறை தண்டனை: கேரள போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
admin - 0
கேரளாவில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தாய், அவரது ஆண் நண்பருக்கு 180 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் கணவர் மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
அப்போது, வேறு ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பெண் கணவரை விட்டுப் பிரிந்து ஆண் நண்பருடன் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் வசித்து...
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்தும் மலர்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான...
ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், முள்ளைய்ய பூடி மண்டலம், பண்டபல்லி எனும் கிராமத்தில் கிரிஜன ஆசிரம அரசு மகளிர் பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பள்ளியில் பணியாற்றும் சுஜாதா எனும் ஆசிரியை, பாடம் சொல்லித் தரும் நேரத்தில் 2 மாணவிகளை அழைத்து, கால்களை பிடித்து விடச் செய்துள்ளார். அப்போது அந்த ஆசிரியை செல்போனில் பேசிக்கொண்டு...
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் -கத்னி வழித்தடத்தில் லால் காதன் என்ற பகுதியில் சரக்கு ரயில் ஒன்று நேற்று மாலை நின்று கொண்டிருந்தது.
அதே வழித்தடத்தில் பிலாஸ்பூர் செல்லும் புறநகர் மின்சார ரயிலும் வந்தது. வேகமாக வந்த மின்சார ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் 8 பயணிகள் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர் களின்...
போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பாக, ஆபாத் ஹர்ஷ்த் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இவரது மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘‘வளர் இளம் பருவத்தினர் இடையே சம்மதத்துடன் நடைபெறும் உறவில் போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. போக்சோ சட்டப் பிரிவுகள் குறித்து சிறுவர், ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த...










