உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இந்தியா தாக்குதல் நடத்தியிருக்காது: அமெரிக்காவில் சசி தரூர் விளக்கம்
admin - 0
உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இந்தியா, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்காது என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் தெரிவித்தார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர்ப் பதற்றம் நிலவியது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகள் மீது இந்திய ராணுவப் படைகள் தாக்குதல்...
நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளைப் பதிவு செய்வதற்கான ‘உமீத்’ வலைதளத்தை மத்திய அரசு நேற்று அறிமுகம் செய்துள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து வக்பு சொத்துகளை பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றுவதற்காக புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இணையதளம் தொடங்குவதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும்...
ஆர்சிபி அணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது: பெங்களூரு நெரிசல் உயிரிழப்பில் காவல் துறை நடவடிக்கை
admin - 0
கடந்த புதன்கிழமை அன்று ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் அந்த அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிகில் சோசாலே உட்பட நான்கு பேரை கார்நாடக மாநில காவல்துறை கைது செய்துள்ளது.
பெங்களூருவில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மார்க்கெட்டிங் மற்றும் வருவாய் பிரிவு தலைவர் நிகில் சோசாலே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெங்களூருவில் இருந்து...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட சமீபத்திய பதற்றங்களின் போது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் காட்டிய முதிர்ச்சி மற்றும் பரஸ்பர புரிதல், நாட்டின் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் உறுதி செய்வதிலும் தொடர வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பாகவத் கூறினார்.
நாக்பூரில் நடந்த ஆர்எஸ்எஸ் தன்னார்வலர் பயிற்சி முகாமின் முடிவில் பேசிய மோகன் பாகவத், “ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் ஒரு சிறப்பு நேரத்தில் எங்கள்...
‘நீங்கள் என்னை தப்பியோடியவன் என்று கூறலாம்... ஆனால் நான் மோசடிக்காரன் அல்ல’ என்று இந்தியாவில் இருந்து தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
ரூ.9,000 கோடிக்கு மேல் பணமோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் தேடப்படும் குற்றவாளியான விஜய் மல்லையா, கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பி ஓடினார். இங்கிலாந்தில் உள்ள அவர், இந்தியாவில் தனக்கு எதிராக இருக்கும் வழக்குகள் குறித்தும், தனது சட்டப் போராட்டங்கள், தனது விமான நிறுவனத்தின்...
ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 நீளத்துக்கு பிரம்மாண்ட ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. செனாப் ஆற்றில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது. நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும்...
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் அரசால் உருவாக்கப்பட்ட பேரழிவு சம்பவம் என்றும், இந்தத் துயரச் சம்பவத்துக்கு மாநில முதல்வரும், துணை முதல்வரும் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹாசத் பூனவல்லா சாடியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பூனவல்லா, “பெங்களூருவில் நாம் பார்த்தது, அரசால், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவே. அதற்கு முதல்வரும், துணை முதல்வருமே நேரடி பொறுப்பு. அவர்களே முதன்மை குற்றவாளிகள், சம்பவத்துக்கு பொறுப்பேற்றுக்...
நாடு முழுவதும் புதிதாக 564 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கு உருமாற்றம் பெற்ற எல்எப்.7, எக்ஸ்எப்ஜி, ஜேஎன்.1 ஆகிய புதிய வைரஸ்களும் சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட என்பி.1.8.1 என்ற துணை திரிபும் காரணமாக உள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரப்படி நேற்று காலை...
குஜராத்தின் கட்ச் பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே ‘சிந்தூர் வனம்’ என்ற பெயரில் நினைவு பூங்கா அமைக்க குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இந்தியா மேற்கொண்டது. இதற்காக இந்திய பாதுகாப்பு படைகளுக்கும், நாட்டு மக்கள் வெளிப்படுத்திய ஒற்றுமைக்கும் மரியாதை தெரிவிக்கும் வகையில் குஜராத்தின் கட்ச் பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே நினைவுப் பூங்கா அமைக்க குஜராத்...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டுமாறு பிரதமர் மோடியிடம் 16 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
admin - 0
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் அரிய நிகழ்வாக 16 எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் ஒன்றாக இணைந்து வலியுறுத்தி உள்ளன.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில்,...










