பஹல்காம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 5 நாள் காவலில் எடுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக தீவிர விசாரணை நடைபெற்றது.
இதில், மிகப்பெரும் திருப்புமுனையாக பஹல்காமின்...
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் ஜூலை 1-ம் தேதி இந்திய கடற்படையுடன் இணைக்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறியுள்ளதாவது:
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பல் ஜூலை 1-ம் தேதி ரஷ்யாவின் கடலோர நகரமான கலினின்கிராட்டில் இருந்து இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.
கடல் மற்றும் நிலத்தை குறிவைக்கும் நீண்ட தூர கப்பல் ஏவுகணையான பிரம்மோஸ் உட்பட 26 சதவீதம் உள்நாட்டு உதிரிபாகங்களை...
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானின் லஷ்கர் தீவிரவாதிகள்: என்ஐஏ தீவிர விசாரணையில் உறுதி
admin - 0
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் லஷ்கர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் என்ஐஏ விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில்...
யமுனை நதி தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: யமுனை நதி நமது நம்பிக்கையின் சின்னம். ஆனால், டெல்லியை ஆண்ட முந்தைய அரசுகள் யமுனையை புறக்கணித்து விட்டன. யமுனையை சுத்தம் செய்ய அக்கறை காட்டவில்லை. ஆனால் முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் யமுனை நதி நீரை குடிப்பேன் என்று பேசினார். அதை அவர் நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் யமுனையை சுத்தம் செய்ய...
அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்ட நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இஸ்ரேல் - ஈரான் போர் கடந்த 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா நேற்று நேரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் நேற்று...
ஈரானில் இருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம்
admin - 0
ஈரானிலிருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, ஆபரேஷன் சிந்து திட்டத்தின் மூலம் ஈரானில் உள்ள இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஈரானில் உள்ள இந்திய தூதரகமும் மத்திய வெளியுறவு அமைச்சகமும் செய்து வருகிறது. இதுவரை 4 தனி விமானங்களில் மாணவர்கள் உட்பட 1,100...
ரூ.7.42 கோடி மோசடி வழக்கில் மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரியின் கணவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரி ராஷ்மி கரந்திகரின் கணவர் புருஷோத்தம் சவான். இவர் மும்பை, தானே மற்றும் புனே நகரில் அரசு ஒதுக்கீட்டு குடியிருப்புகளை சலுகை விலையில் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.24.78 கோடி மோசடி செய்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சூரத் நகரை சேர்ந்த ஒரு தொழிலதிபர்...
ஆம் ஆத்மி ஆட்சியின்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்: அமலாக்கத் துறை தீவிர விசாரணை
admin - 0
ஆம் ஆத்மி ஆட்சியின்போது டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தியபோது 12,748 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதுதொடர்பாக டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு அண்மையில் விசாரணை நடத்தியது. அப்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக...
5 ஆண்டுகளுக்குப் பின்னர் சிக்கிம் மாநிலகத்திலுள்ள நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடங்கியுள்ளது.
இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் கடந்த 2020-ல் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை நாதுலா கணவாய் வழியாகச் செல்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த யாத்திரை ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். கைலாஷ்...
ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள தாலியை முதிய தம்பதிக்கு ரூ.20-க்கு கொடுத்தது ஏன் என்பது குறித்து மகாராஷ்டிர நகைக்கடைக்காரர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கோபிகா ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்திருக்கும் நிலேஷ் கிவான்சரா கூறியதாவது: என்னுடைய கடைக்கு சில நாட்களுக்கு வந்த ஒரு மூத்த தம்பதியினர் நகைகளை பார்த்துவிட்டு எதுவும் வாங்காமல் திரும்பிச் சென்றனர். சில நாட்கள் கழித்து சத்ரபதி சாம்பாஜிநகரிலுள்ள எங்கள் கடையின்...





