23 வயதே நிரம்பிய ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் ஜானவி தங்கேட்டி, வரும் 2029-ம் ஆண்டு விண்வெளியில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பாலகொல்லு பகுதியை சேர்ந்தவர் ஜானவி தங்கேட்டி(23). பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர், அமெரிக்காவின் டைடன்ஸ் விண்வெளி பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதன்மூலம் வரும் 2029-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜானவி தங்கேட்டி 5 மணி நேரம் வரை விண்வெளியில்...
பஞ்சாப் இடைத்தேர்தலில் வேட்பாளர் யார்? – மாநிலங்களவை எம்.பி.யாக அர்விந்த் கேஜ்ரிவால் மறுப்பு
admin - 0
பஞ்சாபில் காலியாகும் மாநிலங்களவை எம்.பி. பதவியை ஏற்க ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால் மறுத்துள்ளார். இதனால், அதன் இடைத்தேர்தல் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி சமீபத்தில் காலமானார். இதையடுத்து அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட மாநிலங்களவை எம்.பி. சஞ்சீவ் அரோரா வெற்றி பெற்றுள்ளார். அவர் எம்எல்ஏ பதவியை ஏற்க...
இந்திய விமானப்படைக்கு அடுத்தாண்டில் 6 தேஜஸ் போர் விமானங்கள் விநியோகம்: எச்ஏஎல் தலைவர் டி.கே.சுனில் உறுதி
admin - 0
‘‘இந்திய விமானப்படைக்கு அடுத்தாண்டில் 6 தேஜஸ் போர் விமானங்களை விநியோகம் செய்வோம்’’ என எச்ஏஎல் நிறுவன தலைவர் டி.கே.சுனில் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையில் உள்ள மிக்-21 போர் விமானங்களுக்கு மாற்றாக எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து 83 தேஜஸ் -1 ஏ போர் விமானங்களை ரூ.48,000 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த 2021-ல் ஒப்பந்தம் செய்தது. ஆனால் இந்திட்டத்தில் மிகவும் தாமதம் ஏற்படுவதாக இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங்...
வீடு ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருந்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார்: கர்நாடக அமைச்சர் ஜமீர் திட்டவட்டம்
admin - 0
கர்நாடக அரசின் வீட்டு வசதித்துறை சார்பில் வீடற்ற ஏழை மக்களுக்கு வீடு, வீட்டு மனை, வீடு கட்டுவதற்கு மானியம் ஆகியவை வழங்கப்படுகிறது. இதில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் ஆலந்த் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பி.ஆர்.பாட்டீல் பேசிய ஆடியோவில், ‘‘ராஜீவ் காந்தி வீட்டு வசதி ஆணையத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
அதிகாரிகள் அத்தனை பேரும் பணம் வாங்கி கொண்டே வேலை பார்க்கிறார்கள். ஏழை மக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டே வீட்டு...
ராஜா ரகுவன்சி கொலை வழக்கில் மேலும் 2 பேரை மத்திய பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சிக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரும் அவரது மனைவி சோனமும் தேனிலவுக்கு மேகாலயா மாநிலத்துக்குச் சென்றனர்.
அங்கு ரகுவன்சி கொல்லப்பட்டார். சோனம் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ரகுவன்சியை கொன்றது தெரியவந்தது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது....
மேற்கு வங்க சட்டபேரவையில் இருந்து தீபக் பர்மன், சங்கர் கோஷ், அக்னிமித்ர பால் மற்றும் மனோஜ் ஓரான் ஆகிய நான்கு பாஜக எம்எல்ஏக்களை எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் பிமன் பானர்ஜி உத்தரவிட்டார். அவையில் முன்பு கூறப்பட்ட சில கருத்துகளை நீக்குவது தொடர்பான விவாதத்தின்போது இந்த எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சபாநாயகர் இந்த முடிவை எடுத்தார்.
இதுகுறித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் கூறுகையில், “...
கர்நாடகாவில் வீட்டு வசதி திட்டத்தில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அண்மையில் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியதாவது: கர்நாடக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து விதமான வீட்டு வசதி திட்டங்களில் முஸ்லிம், கிறிஸ்தவர்,...
அமெரிக்காவில் உள்ள சாதாரண வாழ்க்கை எனக்கு வேண்டாம். இந்தியாவில் உள்ள அசாதாரணமான வாழ்க்கையை விரும்புகிறேன் என்று இந்தியாவில் குடியேறிய அமெரிக்க பெண் கிறிஸ்டன் பிஷர் தெரிவித்தார்.
அமெரிக்காவைச் சேரந்த கிறிஸ்டன் பிஷர் 4 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை விட்டு வெளியேறி இந்தியாவில் வசித்து வருகிறார். அவரது குடும்பத்தாரும் அவருடன் வசித்து வருகின்றனர். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை போட்டு புகழ் பெற்று வருகிறார் பிஷர். அவரது வீடியோக்களை பலரும்...
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலுக்கு மிக அருகே சாலையில் கிடந்த ஒரு பையில் வெடிகுண்டுகள், துப்பாக்கி தோட்டக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆந்திர போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுனர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற சைவ திருத்தலமாகும். இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இக்கோயிலுக்கு மிக அருகே வாசவி சத்திரத்தின் எதிரே உள்ள...
மேற்கு வங்கம், கேரளா உட்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: குஜராத்தில் பாஜக, ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் வெற்றி
admin - 0
நான்கு மாநிலங்களில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், குஜராத்தில் ஆளும் பாஜக, ஆம் ஆத்மி கட்சி தலா ஒரு தொகுதிகளை கைப்பற்றின. கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அவற்றில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
கேரளாவில் உள்ள நிலாம்பூர், குஜராத்தில் உள்ள விஸவாதர் மற்று கடி, பஞ்சாபில் மேற்கு லூதியானா, மேற்கு வங்கத்தில்...










