Google search engine
ஹைத​ரா​பாத்​தில் கலப்பட கள் குடித்​த​தில் 3 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 12 பேர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். ஹைத​ரா​பாத் கூகட்​பல்​லி​யில் நேற்று அதி​காலை கலப்பட கள் குடித்த 19 பேர் வாந்​தி, மயக்​கம் ஏற்பட்டு கீழே விழுந்​தனர். இவர்​களில் சிலர் தனி​யார் மருத்​து​வ​மனைக்​கும், சிலர் செகந்​தி​ரா​பாத் காந்தி அரசு மருத்​து​வ​மனைக்​கும் கொண்டு செல்​லப்​பட்டு அனு​ம​திக்​கப்​பட்​டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 12 பேர் தொடர்ந்து...
உத்​தரபிரதேசத்​தில் முதன்​முறை​யாக மது​பானத் தொழிலுக்​கான மெகா முதலீட்டு மாநாடு இன்று (ஜுலை 10) நடை​பெற உள்​ளது. இதில், ரூ.5,000 கோடி மதிப்​பிலான முதலீட்டு திட்​டங்​களுக்கு புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. உ.பி.​யில் பல்​வேறு தொழில்​களை ஊக்​குவிக்க முதலீட்டு மாநாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் முதன்​முறை​யாக மது உற்​பத்​தியை ஊக்​குவிக்​கும் முதலீட்டு மாநாடும் நடை​பெற உள்​ளது. இந்த மாநாட்டை லக்​னோ​வின் இந்​திரா காந்தி பிர​திஷ்​டானில் மாநில கலால் துறை நடத்​துகிறது....
 சத்​தீஸ்​கரின் தண்​டே​வா​டா​வில் 2 பெண்​கள் உள்​ளிட்ட 12 நக்​சலைட்​கள், போலீஸ், சிஆர்​பிஎப் அதி​காரி​கள் முன்​னிலை​யில் சரணடைந்​துள்​ளனர். இவர்​களில் ரூ.28.50 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்ட 9 பேரும் அடங்​கு​வர். அரசின் ‘உங்​கள் வீடு, கிராமத்​துக்கு திரும்​பு' பிரச்​சா​ரத்​தின் கீழ் மாவட்​டத்​தில் இது​வரை 1,005 நக்​சலைட்​கள் சரண் அடைந்​துள்​ளனர். இந்த சாதனை அரசின் தொலைநோக்கு கொள்​கைகள், பாது​காப்​புப் படைகளின் தொடர் நடவடிக்கை மற்​றும் உள்​ளூர் சமூகங்​களின் நம்​பிக்​கையை பிர​திபலிக்​கிறது. மாவோ​யிஸ்ட்​களின் வெற்று சித்​தாந்​தத்​தால்...
இறக்​கும​தி-ஏற்​றுமதி மோசடி​யில் குற்​றம் சாட்​டப்​பட்டு 25 ஆண்​டு​கள் அமெரிக்​கா​வில் தலைமறை​வாக இருந்த பொருளா​தார குற்​ற​வாளி மோனிகா கபூர் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்​டார். இதற்​கான அனு​ம​தியை நியூ​யார்க் நகர நீதி​மன்றம் வழங்​கியது. இதையடுத்​து, அவரை சிபிஐ காவலில் எடுக்க உள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். ‘‘மோனிகா ஓவர்​சீஸ்’’ என்ற நிறு​வனத்​தின் உரிமை​யாளர் மோனிகா கபூர். இவர் தனது இரண்டு சகோதரர்​களான ராஜன் கன்னா மற்​றும் ராஜீவ் கன்​னா​வுடன் சேர்ந்து நகை வணி​கத்​திற்​கான வங்கி...
கர்​நாடக மாநிலத்​தில் உள்ள ஹாச‌ன் மாவட்​டத்​தில் கடந்த 40 நாட்​களில் 45 வயதுக்​குட்​பட்ட‌ 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயி​ரிழந்​தனர். இதே​போல கதக் மாவட்​டத்​தி​லும் 20-க்​கும் மேற்​பட்​டோர் திடீர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து ஆய்வு செய்​வதற்​காக கர்​நாடக அரசு 10 மருத்​து​வர்​கள் அடங்​கிய நிபுணர் குழுவை அமைத்​தது. மருத்​து​வ நிபுணர் குழு சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் தினேஷ் குண்​டு​ரா​விடம் ஆய்​வறிக்​கையை சமர்ப்​பித்​தது. அதனை பெற்​றுக்​கொண்ட பின்​னர்​,​ தினேஷ் குண்டு ராவ் கூறிய​தாவது:...
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கேரள சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, பிரபலமான யூடியூபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி, 2024 ஜனவரி முதல் 2025 மே வரையிலான காலத்தில், கண்ணூர், கோழிக்கோடு, கொச்சி, ஆலப்புழா, மூணாறு உள்ளிட்ட நகரங்களுக்கு ஜோதி மல்ஹோத்ரா சென்று வந்துள்ளார். இந்த பயணத்துக்கான அனைத்து செலவுகளையும்...
 டி.வி. தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்மிருதி இரானி. மேலும் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிப் பணியும் ஆற்றிவந்தார். பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் 2014 முதல் 2024 வரை ஸ்மிருதி இரானி மத்திய அமைச்சராக இருந்தார். இந்நிலையில் 2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தோல்வி அடைந்ததையடுத்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க முடிவு செய்தார். இதன்படி, தற்போது `கியூன்கி...
இ​மாச்சல பிரதேச மாநிலத்​தில் கடந்த 2 வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. மேலும், கடந்த மாதம் 20-ம் தேதி முதல் 19 முறை மேகவெடிப்பு மழை அங்கு பதி​வாகி​யுள்​ளது. இந்​நிலை​யில் மண்டி மாவட்​டம் துனாக் கிராமத்​தி​லுள்ள இமாச்சல பிரதேச மாநில கூட்​டுறவு வங்​கிக் கிளை​யானது மழை நீரில் மூழ்​கி​யுள்​ளது. மேலும் சகதி, குப்பை ஆகியவை வங்​கிக் கிளை முழு​வதும் தேங்​கிக் கிடக்​கிறது. இதனால் கிளை​யில் டெபாசிட் செய்​யப்​பட்​டிருந்த கோடிக்​கணக்​கான மதிப்​புள்ள...
திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்துள்ளனர். பாஜக, பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய திபெத்துக்கான அனைத்துக் கட்சி இந்திய நாடாளுமன்ற அமைப்பு இந்த மாதம் நடைபெற்ற அதன் இரண்டாவது கூட்டத்தின்போது இதற்கான...
கடந்த நாடாளு​மன்ற கூட்​டத்​தொடரில் வக்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்​றப்​பட்​டது. இதை எதிர்த்து பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் மற்​றும் முஸ்​லிம் அமைப்​பு​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்​திருந்​தன. விசா​ரணை​யின்​போது, புதிய வக்பு சட்​டத்​தில் முஸ்​லிம் அல்​லாதவர்​களை​யும் குழுக்​களில் சேர்ப்​பது உள்​ளிட்ட சில அம்​சங்​கள் மீது நீதிப​தி​கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்​து, மத்​திய அரசு தாமாகவே முன்​வந்து சர்ச்​சைக்​குரிய அம்​சங்​களை வழக்கு முடி​யும் வரை அமல்​படுத்​த​மாட்​டோம் என உத்​தர​வாதம் அளித்​திருந்​தது. இதனால்,...