Google search engine
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் மாதம் திடீரென தீப்பற்றியது. அப்போது வீட்டில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலாகி கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது நேர்மை குறித்து சர்ச்சை எழுந்தது. அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நாடாளுமன்றத்துக்கு பரிந்துரைத்தார். இதை எதிர்த்து...
ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தீர்ப்பாயம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின்படி சந்தா கோச்சார் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது கணவர் தீபக் கோச்சார் மூலம் வீடியோகான் குழுமத்திலிருந்து ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது நிரூபணமாகியுள்ளது. இந்த லஞ்ச பணம் தீபக்...
கேரள முன்னாள் முதல்வரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலை​வரு​மான வி.எஸ்​.அச்​சு​தானந்​தன் (101) உடல்​நலக் குறை​வால் நேற்று கால​மா​னார். பின்​தங்​கிய மக்​களின் உரிமை​களுக்​காக வாழ்​நாள் முழுவதும் போராடிய​வரும் கேரள அரசியலில் முக்​கிய இடத்தை வகித்​தவரு​மான வி.எஸ்​.அச்​சு​தானந்​தன், கடந்த 2019-ல் பக்​க​வாதத்​தால் பாதிக்​கப்​பட்​டதை தொடர்ந்து பொது வாழ்க்​கை​யில் இருந்து வில​கி​னார். கடந்த 2021 ஜனவரி​யில் நிர்​வாக சீர்​திருத்த குழு தலை​வர் பதவி​யில் இருந்து வில​கி​னார். திரு​வனந்​த​புரத்​தில் உள்ள தனது மகன், மகள் வீட்​டில் ஓய்வு...
ஆந்​திர மாநிலத்​தில் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் கடந்​த​கால ஆட்​சி​யின்​போது ரூ.3,500 கோடி மது​பான ஊழல் நடந்ததாக சிறப்பு ஆய்வு குழு தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக ஜெகன் கட்​சியை சேர்ந்த ஒரு எம்பி உட்பட 12 பேர் கைது செய்யப்​பட்​டுள்​ளனர். இதனால் ஜெகன் மோகன் ரெட்​டிக்கு நெருக்​கடி முற்​றி​யுள்​ளது. ஆந்​திர மாநிலத்​தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஜெகன்​மோகன் ரெட்டி முதல்​வ​ராக இருந்​தார். அப்​போது, தமிழகத்தை போன்று ஆந்​தி​ரா​விலும் அரசே...
பிஹாரில் எதிர்வரும் சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் 32 லட்சம் வாக்காளர்களை மட்டுமே சரிபார்க்க வேண்டியுள்ளது. இந்நிலையில் 11,000 பேரை கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்கள் என தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்கள் குறிப்பிட்ட முகவரியில் இல்லை என்பதுடன் அவர்கள் அங்கு வசித்ததாக அண்டை வீட்டாராலும் உறுதி செய்யப்படவில்லை....
 ஆக்​ராவைச் சேர்ந்த 33 வயது மற்​றும் 18 வயதுடைய இரண்டு சகோதரி​கள் காணா​மல் போன வழக்​கில் தொடங்​கப்​பட்ட விசா​ரணை​யில் அவர்​கள் லவ் ஜிகாத் கும்​பலால் கட்​டாய மதமாற்​றம் செய்​யப்​பட்​டது தெரிய​வந்​தது. இதையடுத்​து, ராஜஸ்​தானைச் சேர்ந்த முகமது அலி உள்​ளிட்ட 10 பேர் உத்தர பிரதேச போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டனர். மத மாற்​றத்​துக்​காக அவர்​கள் அமெரிக்கா மற்​றும் கனடா​விலிருந்து நிதி திரட்​டியது தெரிய​வந்​தது. முகமது அலி மதம் மாறு​வதற்கு முன்​பாக இந்து மதத்தை...
 கடந்த 2006-ம் ஆண்டு 189 உயிரிழக்க காரண​மாக இருந்த மும்பை தொடர் குண்​டு​வெடிப்​பில் தொடர்​புடைய 12 பேரை மும்பை உயர் நீதி​மன்​றம் நேற்று விடு​வித்​தது. சிறப்பு நீதி​மன்​றம் விதித்த ஆயுள், மரண தண்​டனை ரத்து செய்​யப்​பட்​டது. கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகரில் ஓடும் 7 ரயில்​களில், 11 நிமிடங்​களுக்​குள் அடுத்​தடுத்து குண்​டு​கள் தன. இதில் 189 பேர் உயி​ரிழந்​தனர். 800-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இது தொடர்​பாக...
கர்​நாடக மாநிலம் தட்​சின கன்னட மாவட்​டம் தர்​மஸ்​தலா​வில் உள்ள மஞ்​சு​நாதா கோயில் மிக​வும் பிரசித்தி பெற்​றது. அந்த கோயி​லில் 10க்​கும் மேற்​பட்ட பெண்​கள் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​க‌ப்​பட்​டு, கொலை செய்​யப்​பட்​ட​தாக தகவல் வெளி​யானது. இதுகுறித்து தர்​மஸ்​தலா கோயி​லில் துப்​புரவு பணி​யாற்​றிய 52 வயதான ஒரு​வர், போலீ​ஸில் புகார் அளித்​தார். இதையடுத்து தர்மஸ்தலா போலீ​ஸார் கோயில் நிர்​வாகத்​தின் மீது 3 பிரிவு​களில் வழக்​குப்​ப​திவு செய்​தனர். இதனை தொடர்ந்து 65 வயதான பெங்​களூரு​வைச் சேர்ந்த...
ம​கா​ராஷ்டி​ரா​வில் அமானுஷ்ய சக்தி இருப்​ப​தாக கூறி, பக்​தர்​களை சித்​ர​வதை செய்த போலி சாமி​யார் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். மகா​ராஷ்டிர மாநிலம் சத்​ரபதி சம்​பாஜி நகர் மாவட்​டம், வஜாபூர் தாலு​கா​வில் உள்​ளது ஷியூர் கிராமம். இந்த கிராமத்​தில் உள்ள கோயி​லில் சஞ்​சய் பகாரே என்​பவர் சாமி​யா​ராக இருக்​கிறார். தனக்கு அமானுஷ்ய சக்தி இருப்​ப​தாக​வும், திரு​மண​மா​காத பெண்​களுக்கு திரு​மணம் ஏற்​பாடு செய்ய முடி​யும், அகோரி பூஜை மூலம் குழந்தை இல்​லாத...
ஒடி​சா​வின் புரி மாவட்​டம், பாலங்கா அரு​கே​யுள்ள பயாபர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, நேற்று முன்​தினம் வீட்​டுக்கு அருகே நடந்து சென்று கொண்​டிருந்​தார். அப்​போது மோட்​டார் சைக்​கிள்​களில் வந்த 3 மர்ம நபர்​கள், சிறுமியை வலுக்​கட்​டாய​மாக அழைத்​துச் சென்​று அவர் மீது பெட்​ரோல் ஊற்றி தீ வைத்து எரித்​தனர். சிறுமி​யின் அலறல் கேட்டு அக்​கம் பக்​கத்​தினர் ஓடி வந்​தனர். இதை பார்த்​ததும் மர்ம நபர்​கள் தப்​பிச் சென்​று​விட்​டனர். பலத்த...