Google search engine
சத்​தீஸ்​கர் மாநிலத்​தில் பாது​காப்பு படை​யினர் மேற்​கொண்ட தீவிர நக்​சல் வேட்​டையை தொடர்ந்​து, 5 மாவட்​டங்​களில் நேற்று 66 நக்​சலைட்​கள் பாது​காப்பு படை​யினர் முன்​னிலை​யில் சரணடைந்​தனர். இவர்​களில் 49 பேர் பற்றி தகவல் தெரி​விப்​போருக்கு ரூ.2.27 கோடி பரிசு அறிவிக்​கப்​பட்​டிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது. சத்​தீஸ்​கர் மாநிலத்​தில் நக்​சலைட்​களை முற்​றி​லும் ஒழிக்க மத்​திய அரசு கடந்த சில ஆண்​டு​களாக தீவிர நடவடிக்கை எடுத்​து வருகிறது. நக்​சல் வேட்​டைக்கு என மத்​திய ஆயுதப்​படை மற்​றும் மாநில...
ஹைத​ரா​பாத் வனஸ்​தலிபுரத்​தில் வசித்த ஓய்​வு​பெற்ற ஐஆர்​எஸ் அதி​காரி ஒய்​.​வி.எஸ்​.எஸ். பாஸ்​கர் ராவ், ஏழு​மலையானின் தீவிர பக்​தர் ஆவர். அவர் தனது இறப்​புக்கு பிறகு தனது வீடு மற்​றும் வங்கி சேமிப்பை ஏழு​மலை​யானுக்கு வழங்க வேண்​டும் என உயில் எழுதி வைத்​திருந்​தார். இந்​நிலை​யில் பாஸ்​கர் ராவ் உடல்​நலக்​குறை​வால் சமீபத்​தில் உயி​ரிழந்​தார். இதையடுத்து அவரது வீட்​டுப் பத்​திரம், வங்​கிக் கணக்கு புத்​தகம் மற்​றும் உயி​லின் நகலை அவரது உறவினர்​கள் நேற்று திரு​மலைக்கு வந்​து,...
மும்பை ரயில் குண்​டு​வெடிப்பு வழக்​கி​லிருந்து 12 பேரை விடு​வித்த மும்பை உயர் நீதி​மன்ற தீர்ப்​புக்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​கால தடை விதித்​துள்​ளது. கடந்த 2006-ல் மும்பை புறநகர் ரயில்​களில் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்​ததில் 189 பேர் உயிரிழந்​தனர். இது தொடர்​பான வழக்கை விசா​ரித்த மும்பை சிறப்பு நீதி​மன்​றம் 12 பேர் குற்​ற​வாளி​கள் என தீர்ப்பு வழங்​கியது. இவர்​களில் 5 பேருக்கு மரண தண்​டனை​யும் 7 பேருக்கு ஆயுள் தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டது....
பெங்​களூரு சர்​வ​தேச‌ விமான நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் அதி​காலை​யில் போதைப் பொருள் கடத்​தல் நடை​பெறு​வ​தாக வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​களுக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. அதன் அடிப்​படை​யில் பெங்​களூரு மண்டல அதி​காரி​கள் விமான நிலை​யத்​தில் சோதனை​யில் ஈடு​பட்​டனர். அப்​போது குவாஹாட்​டி​யில் இருந்து பெங்​களூரு விமானத்​தில் வந்த 2 இளம்​பெண்​கள் மீது சந்​தேகம் ஏற்​பட்​டது. அவர்​களின் உடைமை​களை அதி​காரி​கள் பரிசோ​தித்​தனர். அவர்​களின் பெட்​டி​யில் வழக்​கத்​துக்கு மாறாக, 40-க்​கும் மேற்​பட்ட சோப்​பு​கள் இருந்தன. அவற்​றின்...
பாஜக​வின் கொள்​கைகளை எதிர்க்​கும் சமாஜ்வாதி ​கட்சி இந்​துத்​து​வாவுக்கு எதி​ரான நிலைப்​பாட்​டில் இருப்பதாகவே கருதப்​படு​கிறது. இந்​நிலை​யில் வரும் 2027 உ.பி. தேர்​தலை முன்​னிட்டு அக்​கட்​சி​யின் நடவடிக்​கை​களில் மாற்​றம் ஏற்பட்டுள்​ளது. உ.பி.​யில் தற்​போதைய ஷ்ராவண மாதத்​தில் சமாஜ்​வாதி சார்​பில் காவடி யாத்​திரைகளுக்கு ஏற்​பாடு செய்யப்பட்டது. இதற்கு முன்​பாக கேதார்​நாத்​தில் இருப்​பது போன்ற ஒரு சிவன் கோயிலை விரைந்து கட்டி முடிப்​ப​தில் சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் இறங்கி உள்​ளார். இந்த கோயில், அகிலேஷின்...
திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் பல்​வேறு தீர்​மானங்​கள் ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டன. இதுகுறித்து அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர்​.​நா​யுடு, தேவஸ்​தான நிர்​வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: திரு​மலைக்கு வரும் பக்​தர்​கள் எண்​ணிக்கை நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. எனவே திருமலை​யில் 3-வது க்யூ காம்ப்​ளக்ஸ் கட்ட முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்​கான சாத்​தி​யக் கூறுகளை ஆராய தனி கமிட்டி...
 நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் நேற்று முன்​தினம் தொடங்​கியது. முதல் நாளில் பல்வேறு பிரச்​சினை​களை எழுப்பி மக்​களவை, மாநிலங்​களவை​யில் எதிர்க்​கட்​சிகள் அமளி​யில் ஈடு​பட்​டன. இதனால் இரு அவைகளும் முடங்​கின. இதைத் தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அப்​போது பஹல்​காம், ஆபரேஷன் சிந்​தூர், விமான விபத்து தொடர்​பான விவ​காரங்​களை மக்​களவை​யில் எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் எழுப்​பினர். அதோடு பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணிக்கு எதிர்ப்பு தெரி​வித்து...
அமெரிக்​காவைச் சேர்ந்த போ​யிங் நிறு​வனம் மூன்று ஏஎச்​-64இ அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களை இந்​திய ராணுவத்​திடம் நேற்று ஒப்​படைத்​தது. இந்​திய விமானப் படைத் திறனை நவீன​மாக்​கும் முயற்​சி​யின் ஒரு முக்​கிய மைல்​கல்​லாக இந்த அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களின் வரவு பார்க்​கப்​படு​கிறது. அமெரிக்​காவைச் சேர்ந்த போ​யிங் நிறு​வனத்​திட​மிருந்து இந்​திய ராணுவத்​துக்கு 6 அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களை வாங்​கும் திட்டத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு பாது​காப்பு அமைச்​சகம் அனு​மதி அளித்​தது. இதற்​காக, இந்​திய அரசு மற்​றும் போ​யிங் நிறு​வனத்​துக்கு...
 குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் கடந்த மாதம் ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. அதில் எரிபொருள் சுவிட்ச் ஆப் ஆகி இருந்​தது தெரிய​வந்​தது. இதைத் தொடர்ந்து போயிங் ட்ரீம்​லைனர் விமானங்​களின் இன்​ஜின் எரிபொருள் சுவிட்சுகளை ஆய்வு செய்ய வேண்​டும் என்று அனைத்து விமான நிறு​வனங்​களுக்​கும் சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில், ‘‘அனைத்து போயிங் விமானங்​களி​லும் எரிபொருள் கட்​டுப்​பாட்டு சுவிட்ச் அமைப்​பு​களை ஆய்வு செய்​து​விட்​டோம். இதில் எந்​தப் பிரச்​சினை​யும் கண்​டறியப்​பட​வில்​லை’’...
கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் ரயில்​களில் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்​த​தில் 189 பேர் உயி​ரிழந்​தனர். 800-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இது தொடர்​பாக 12 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கை விசா​ரித்த மும்பை சிறப்பு நீதி​மன்​றம் கடந்த 2015-ம் ஆண்டு 12 பேரும் குற்​ற​வாளி​கள் என தீர்ப்பு வழங்​கியது. இவர்​களில் 5 பேருக்கு மரண தண்​டனை​யும் 7 பேருக்கு ஆயுள் தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டது. இதையடுத்​து,...