Google search engine
சத்​தீஸ்​கரில் நேற்று 42 பெண்​கள் உட்பட 77 நக்​சலைட்​கள் பாது​காப்​புப் படை​யினர் முன்​னிலை​யில் ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு சரணடைந்​தனர். நக்​சல் அபா​யம் உள்ள மாநிலங்​களில் அடுத்​தாண்டு மார்ச் 31-ம் தேதிக்​குள் நக்​சலைட்​கள் ஒழிக்​கப்​படு​வர் என மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா உறு​திபட தெரி​வித்​துள்​ளார். இதனால் பாது​காப்புப் படை​யினர் தீவிர தேடு​தல் வேட்டை நடத்தி வரு​கின்​றனர். இதையடுத்து நக்​சலைட்​கள் சரணடைவதும் அதி​கரித்து வரு​கிறது. மகா​ராஷ்டிரா மாநிலம் கட்​சிரோலி மாவட்​டத்​தில் நக்​சல்...
ராஜஸ்​​தானின் ஜெய்​சால்​மரிலிருந்து ஜோத்​பூர் நோக்கி செல்​லும் தனி​யார் பேருந்து நேற்று பிற்​பகல் 57 பயணி​களு​டன் புறப்​பட்டது. போர் அருங்​காட்​சி​யகம் அருகே தையத் கிராமத்​தில் சென்​றுகொண்​டிருந்​த​போது அந்​தப் பேருந்​தின் பின்புறத்திலிருந்து திடீரென தீப்​பற்றி பேருந்து முழு​வதும் மளமளவென பரவி​யது. இதில், பயணி​கள் அவசர​மாக வெளி​யேற முடி​யாமல் சிக்​கிக் கொண்​ட​தால் 20 பேர் உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மேலும், 15 பயணி​கள் கடுமை​யான தீக்​கா​யங்​களு​டன் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். ராஜஸ்​தான் முதல்​வர்...
ஹரி​யானா ஐபிஎஸ் அதிகாரியான பூரண் குமார் கடந்த 7-ம் தேதி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி அம்னீத் பி.குமார், மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பட்டியல் வகுப்பை சேர்ந்த தனக்கு எதிராக மூத்த அதிகாரிகள் 10 பேர் சாதியப் பாகுபாடு காட்டியதாகவும் மனரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை 11...
மகாராஷ்டிர மாநிலம், மும்பை சாலைகளின் பரி​தாப நிலை மற்​றும் சாலை பள்​ளங்​களால் ஏற்​படும் உயி​ரிழப்​பு​கள் குறித்து மும்பை உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணை நடத்​தி​யது. இந்த வழக்​கில் நீதிப​தி​கள் ரேவதி மோஹிதே தேரே, சந்​தேஷ் பாட்​டீல் ஆகியோர் அடங்​கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்​கியது. இந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: குடிமக்கள் நல்ல சாலைகளுக்கு உரிமை உடையவர்கள். சாலை பள்ளங்கள் அல்லது திறந்தவெளி சாக்கடைகளால் உயிரிழப்பு ஏற்பட்டால், இறந்தவரின் சட்டப்பூர்வ...
கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் ஆயுத, போதைப் பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பஞ்சாப் மாநில காவல் துறை சார்பில் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் தடுப்பு சாதனங்கள் நிறுவப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் அண்மை காலமாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் கடத்தல் முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பஞ்சாப் போலீஸார் கூறியதாவது: பாகிஸ்தானில் இருந்து ஏ.கே. 47...
கடன் அட்டை என்​பது கடனாக பொருட்​களை வாங்​க​வும் பல்​வேறு கட்​ட​ணங்​களை செலுத்​த​வும் மட்​டுமே பயன்​படும் என நாம் நினைக்​கிறோம். ஆனால் வழக்​க​மான பயன்​பாடு​களைத் தாண்​டி, பணத்தை மிச்​சப்​படுத்​து​வதற்​கான ஆதா​ர​மாக​வும் அவற்​றைப் பயன்​படுத்தி வரு​கிறார் மணிஷ் தமேஜா. அவரிடம் மொத்​தம் 1,638 கடன் அட்​டைகள் உள்​ளன. எந்த ஒரு கடனும் இல்​லாமல் வெகுமதி புள்​ளி​கள், கேஷ்பேக், பயணச் சலுகைகள் மற்​றும் ஓட்​டல் சலுகைகளை அதி​கரிக்க இந்த கடன் அட்​டைகளை அவர் பயன்​படுத்தி...
டாஸ்​மாக் முறை​கேடு வழக்​கில் அமலாக்​கத் துறை விசா​ரணை தடையை நீட்டித்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்டுள்ளது. தமிழகத்​தில் ‘டாஸ்​மாக்’ தலைமை அலு​வல​கத்​தில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தீவிர சோதனை நடத்​தினர். இந்த சோதனை சட்​ட​விரோதம் என்று அறிவிக்க கோரி​யும், விசா​ரணை என்ற பெயரில் அதி​காரி​களை துன்​புறுத்த கூடாது என்று உத்​தர​விட கோரி​யும் டாஸ்​மாக் நிர்​வாகம் மற்​றும் தமிழக அரசு சார்​பில்...
மத்​திய பிரதேசத்​தில் ஓய்வு பெற்ற அரசு அதி​காரி வீடு​களில் இருந்து 2.7 கிலோ தங்​கம், 5.5 கிலோ வெள்​ளி, 17 டன் தேன், பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்டு உள்​ளன. மத்​திய பிரதேச பொதுப் பணித் துறை​யில் தலைமை பொறி​யாள​ராக கோவிந்த் பிர​சாத் மெஹ்ரா பணி​யாற்​றி​னார். கடந்த ஆண்டு பிப்​ர​வரி​யில் அவர் ஓய்வு பெற்​றார். இதன்​பிறகு தலைநகர் போபாலில் உள்ள வீட்​டில் அவர் வசித்து வந்​தார்....
உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் சார்​தாம் என்று அழைக்​கப்​படும் பத்​ரி​நாத், கேதார்​நாத், கங்​கோத்​ரி, யமுனோத்ரி ஆகிய 4 புகழ்​பெற்ற தலங்​கள் அமைந்​துள்​ளன. இந்​நிலை​யில் பிரசித்தி பெற்ற பத்​ரி​நாத் கோயிலில் நேற்று தொழில​திபர் முகேஷ் அம்​பானி வழிபட்​டார். அவரை கோயில் நிர்​வாகி​கள் வரவேற்று அழைத்​துச் சென்று பிர​சாதங்​களை வழங்​கினர். பலத்த பாது​காப்​புடன் முகேஷ் அம்​பானி கோயிலுக்கு வந்​திருந்​தார். பின்​னர் அவர் அங்​கிருந்து புறப்​பட்டு சமோலிக்​குச் சென்​றார்​.
சீன நாட்டை சேர்ந்​தவர் ட்யூ யாங்​கன். விசா நிபந்​தனை​களை மீறியது, போலி ஆவணங்​கள் தயாரித்​தது, நிபந்​தனை​களை மீறி இந்​தி​யா​வில் தங்​கியது தொடர்​பாக 2021-ம் ஆண்டு யாங்​கன் மீது புகார் எழுந்​தது. இதையடுத்து திருப்​பதி அருகே உள்ள ரேணி​குண்டா போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்​தனர். இவ்​வழக்கு திருப்​பதி நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது. இதனைத் தொடர்ந்​து, அவர், பல பகு​தி​களில் தொழிற்​சாலைகளில் பணி​யாற்​றும் சீன நாட்​டைச் சேர்ந்​தவர்​களுக்​காகவே ரேணி​குண்​டா​வில்...