Google search engine
பிஹாரில் அரசி​யல் கட்​சிகளின் தேர்​தல் பிரச்​சா​ரங்​கள் சூடு​பிடித்​துள்​ளது. கடுமை​யான தேர்​தல் பணி​களுக்கு இடையே காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி பெகுச​ராய் என்ற இடத்​தில் உள்​ளூர் மக்​களு​டன் இணைந்து குளத்​தில் இறங்கி மீன்​டிபிடித்து மகிழ்ந்​தார். படகு மூல​மாக குளத்​துக்​குள் சென்ற ராகுல் தண்​ணீரில் குதித்து நீச்​சல் அடித்​தார். அப்​போது விகாஸ்​ஷீல் கட்​சி​யின் (விஐபி) நிறு​வனர் முகேஷ் சாஹ்னி உடனிருந்​தார். இதுதொடர்​பான வீடியோவை தனது எக்ஸ் தளத்​தில் பகிர்ந்து ராகுல் காந்தி கூறி​யுள்​ள​தாவது: மீனவர்​கள்,...
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் செயற்குழு கூட்டம் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நேற்று தொடங்கியது. ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்து 101-ம் ஆண்டுக்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் செயற்குழு கூட்டம் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நேற்று தொடங்கியது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே ஆகியோர் இந்த கூட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் நாடு முழுவதிலும் இருந்து 407 பிரதிநிதிகள்...
மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் 75 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்க நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் நகரில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் பூங்கா உள்ளது. இப்பூங்காவில் 75 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அம்பேத்கர் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்படாததால் பணிகளை தொடங்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்துக்கு ரூ.10 கோடி...
கடந்த ஆண்டு ஏப்ரலில் ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் புகுந்தனர். அங்கிருந்த மைனர் பெண்ணிடம் இருந்து தங்க நெக்லஸ், காதணிகள் மற்றும் ரூ.50,000 ரொக்கத்தை பறித்தனர். பிறகு அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக பிரிங்கியா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் டேரிங்பாடி காவல் நிலையப் பகுதியை சேர்ந்த, 24...
 கேரளாவில் பேய் பிடித்திருப்பதாகக் கூறி மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், சந்தயமங்கலத்தைச் சேர்ந்தவர் சஜீர். இவர் தனது மனைவி ரெஜிலாவுக்கு பேய் பிடித்திருப்பதாக கருதி தாக்கி உள்ளார். இதுகுறித்து ரெஜினா போலீஸில் புகார் செய்தார். போலீஸார் எச்சரித்து அனுப்பினர். அதன் பிறகு, சஜீர் சூனியக்காரரை சந்தித்து ஆலோசனை கேட்டுள்ளார். அவரது அறிவுரைப்படி, நேற்று முன்தினம் காலையில், மனைவியை தன் முன் உட்கார...
 உத்தர பிரதேச மாநிலம் வாராணசி நகராட்சியின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது: உத்தர பிரதேச திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார விதிகள் (2021) வாராணசியில் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.250, வாகனங்களில் இருந்தபடி குப்பையை வீசினாலோ எச்சில் துப்பினாலோ ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இதுபோல சாலையில் சுற்றித் திரியும் பிராணிகளுக்கு உணவுப் பொருள் வழங்கினால் ரூ.250, பூங்கா, சாலை உள்ளிட்ட பொது...
மோந்​தா புயல் ஆந்​தி​ராவை புரட்டி போட்​டுள்​ளது. புய​லால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களை ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்​று ஆய்வு செய்​தார். வங்க கடலில் மையம் கொண்​டிருந்த மோந்தா புயல் செவ்​வாய்க்கிழமை நள்​ளிரவு காக்​கி​நாடா - மசூலிப்​பட்​டினம் இடையே கரையை கடந்தது. அப்போது சுமார் 100 முதல் 110 கி.மீ வேகத்​தில் சூறாவளி காற்​றுடன் கனமழை பெய்​தது. கோனசீ​மா, விசாகப்​பட்​டினம், விஜயநகரம், அம்​பேத்கார், ஸ்ரீகாகுளம், பிர​காசம், கிருஷ்ணா, நெல்​லூர், கோதாவரி...
தெலங்​கா​னா​வில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலை​மையி​லான அமைச்சரவையில் தற்​போது 15 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் எண்​ணிக்கை அடிப்​படை​யில் மேலும் 3 பேருக்கு அமைச்​சர​வை​யில் வாய்ப்பு வழங்கலாம். தெலங்​கா​னா​வில் முஸ்​லிம் சிறு​பான்​மை​யினருக்கு ஒவ்​வொரு முறை​யும் ஓர் அமைச்​சர் பதவி வழங்​கப்​பட்டு வரு​கிறது. இம்​முறை இந்த வாய்ப்பை யாருக்கு வாய்ப்பு வழங்​கலாம் என ரேவந்த் ரெட்டி அரசு ஆலோ​சித்து வந்​தது. பிறகு இது தொடர்​பாக கட்சி மேலிடமே முடிவு எடுக்​கும்...
பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் இம்​முறை ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) மற்​றும் எதிர்க்​கட்​சிகளின் மெகா கூட்​ட​ணியை சேர்ந்த சுமார் 50 அதிருப்தி எம்​எல்​ஏக்​கள் வேட்​புமனு தாக்​கல் செய்​துள்​ளனர். அதி​கபட்​ச​மாக ராஷ்டிரிய ஜனதா தளத்தை (ஆர்​ஜேடி) சேர்ந்த 27 பேர் போட்டி வேட்​பாள​ராகி உள்​ளனர். இதையடுத்து ஐக்​கிய ஜனதா தளத்​தின் (ஜேடி​யு) 16 பேரும் பாஜக​வின் 6 பேரும் போட்டி வேட்பாளராக களம் காண்​கின்​றனர். இதனால் கட்​சியை விட்டு நீக்​கப்​பட்ட இவர்​கள்...
குடிபோதை​யில் வாக​னம் ஓட்​டிய இளைஞருக்கு 1,000 துண்​டுப் பிரசுரங்​களை வழங்​கு​மாறு புனே மோட்​டார் வாகன நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது. மகா​ராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி சின்ச்​வாட்​டின் ஹின்​ஜா​வாடி பகு​தி​யில் கடந்த ஜூலை 22-ம் தேதி 28 வயது இளைஞர் ஒரு​வர் மது​போதை​யில் வாக​னம் ஓட்டி வந்து போலீ​ஸாரிடம் சிக்​கிக்​கொண்​டார். இதையடுத்து அவர் மீது மோட்​டார் வாகன சட்​டம் தொடர்​புடைய பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. அவருக்​கு, புனே மோட்​டார் வாகன நீதி​மன்​றம்...