Google search engine
தெலங்கானா மாநிலம் ஹைத​ரா​பாத் ஜூப்ளி ஹில்ஸ் சட்​டப்​பேரவை தொகு​திக்கு விரை​வில் இடைத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில் ஆளும் காங்​கிரஸ், பாஜக, பிஆர்​எஸ் கட்​சிகளுக்கு இடையே மும்​முனைப் போட்டி நில​வு​கிறது. இந்​நிலை​யில் ஜூப்ளி ஹில்ஸ் சிறு​பான்​மை​யினர் சங்​கத்​தினர் நேற்று முதல்​வர் ரேவந்த் ரெட்​டியை சந்​தித்து காங்​கிரஸ் கட்​சிக்கு ஆதரவு தெரி​வித்​தனர். அப்​போது ரேவந்த் ரெட்டி பேசி​ய​தாவது: ராகுல்​காந்தி பாத​ யாத்​திரை மேற்கொண்டபோது காங்​கிரஸ் மட்​டுமே சிறு​பான்​மை​யினர் நலனில் அக்​கறை செலுத்​தும் கட்சி என...
கேரளா​வில் 12 வயது சிறுமி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில், தாய், அவரது ஆண் நண்​பருக்கு 180 ஆண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது. கேரள மாநிலம் திரு​வனந்​த​புரத்​தைச் சேர்ந்த ஒரு பெண் தன் கணவர் மற்​றும் ஒரு பெண் குழந்​தை​யுடன் வசித்து வந்​துள்​ளார். அப்​போது, வேறு ஒரு ஆணுடன் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, அந்​தப் பெண் கணவரை விட்​டுப் பிரிந்து ஆண் நண்​பருடன் மலப்​புரம் மற்​றும் பாலக்​காடு மாவட்​டங்​களில் வசித்து...
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்தும் மலர்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான...
ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், முள்ளைய்ய பூடி மண்டலம், பண்டபல்லி எனும் கிராமத்தில் கிரிஜன ஆசிரம அரசு மகளிர் பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் பணியாற்றும் சுஜாதா எனும் ஆசிரியை, பாடம் சொல்லித் தரும் நேரத்தில் 2 மாணவிகளை அழைத்து, கால்களை பிடித்து விடச் செய்துள்ளார். அப்போது அந்த ஆசிரியை செல்போனில் பேசிக்கொண்டு...
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் -கத்னி வழித்தடத்தில் லால் காதன் என்ற பகுதியில் சரக்கு ரயில் ஒன்று நேற்று மாலை நின்று கொண்டிருந்தது. அதே வழித்தடத்தில் பிலாஸ்பூர் செல்லும் புறநகர் மின்சார ரயிலும் வந்தது. வேகமாக வந்த மின்சார ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் 8 பயணிகள் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ரயில் விபத்தில் உயிரிழந்தவர் களின்...
போக்சோ சட்​டம் தவறாக பயன்​படுத்​தப்​படு​வது தொடர்​பாக, ஆபாத் ஹர்​ஷ்த் என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​திருந்​தார். இவரது மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.​வி. நாகரத்​னா, ஆர்​.ம​காதேவன் அடங்​கிய அமர்வு முன் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள், ‘‘வளர் இளம் பரு​வத்​தினர் இடையே சம்​மதத்​துடன் நடை​பெறும் உறவில் போக்சோ சட்​டம் தவறாக பயன்​படுத்​தப்​படு​கிறது. போக்சோ சட்​டப் பிரிவு​கள் குறித்து சிறு​வர், ஆண்​கள் மத்​தி​யில் விழிப்​புணர்வு ஏற்​படுத்த...
பிஹாரில் வரும் பொங்​கல் பண்​டிகை​யின்​போது பெண்​களுக்கு தலா ரூ.30,000 நிதி​யுதவி வழங்​கப்​படும் என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) முதல்​வர் வேட்​பாளர் தேஜஸ்வி யாதவ் தெரி​வித்​துள்​ளார். நவ. 6, 11 ஆகிய தேதி​களில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும் ஆர்​ஜேடி தலை​மையி​லான மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. பிஹாரில் பெண்​கள் சுய தொழில் தொடங்க பிஹார் அரசு...
தலைநகர் டெல்​லி​யின் எல்​லை​யி​லிருந்து 40 கி.மீ. தொலை​வில் ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத் மாவட்​டத்​தில் உள்ள பல்​லப்​காரில் பயிற்சி வகுப்பு முடித்து மாணவி ஒரு​வர் தனது இரண்டு தோழிகளு​டன் வீடு திரும்​பி​க்கொண்டிருந்தார். அப்​போது அந்த வழி​யில் இளைஞர் ஒரு​வர் கையில் பையுடன் இருசக்கர வாக​னத்​தில் காத்​திருந்​தார். அவரின் அருகே அந்த மாணவி வந்​ததும் பின்​தொடர்ந்து சென்ற அந்த இளைஞர் தனது பையில் மறைத்து வைத்​திருந்த துப்​பாக்​கியை எடுத்து மாண​வியை நோக்கி சுட்​டார். இதில், ஒரு...
இன்​ஸ்​டாகி​ராமில் இந்து கடவுள்​களுக்கு எதி​ரான ஓர் அவதூறு வீடியோ கடந்த 27-ம் தேதி வெளி​யானது. மைனர் பெண் ஒரு​வர் வெளி​யிட்ட அந்த ஒரு நிமிட வீடியோவில் இடம்பெற்ற இந்து கடவுள்​களுக்கு எதி​ரான கருத்​துக்கு பலர் ஆட்​சேபம் தெரி​வித்​தனர். அந்த மைனர் பெண் மற்​றும் அவரது குடும்​பத்​துக்கு எதி​ராக இந்து அமைப்​பு​கள் போராட்​டம் நடத்​தின. காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தன. இதன் அடிப்​படை​யில் மைனர் பெண்ணை உ.பி. போலீ​ஸார் தடுப்பு காவல்...
ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யின் பல பகு​தி​களில் புறாக்​கள் ஏராள​மாக உள்​ளன. இவற்​றுக்கு மும்பை நகர மக்​கள் தானி​யங்​கள் அளிப்​பதும் வழக்​கம். ஆனால், புறாக்​களால் மும்பை நகர் அசுத்​த​மாவ​தாக​வும் மனிதர்​களுக்கு நுரை​யீரல் பாதிப்​பு, சுவாச நோய் பரவுவ​தாகவும் புகார்​கள் எழுகின்​றன. இதற்கு தீர்வு காண மகா​ராஷ்டிர அரசு, கடந்த ஜுலை 3-ம் தேதி முதல் 51 புறா கூடு​களை அப்​புறப்​படுத்​தி​யது. தாதர் உள்​ளிட்ட பல முக்​கியப் பகு​தி​களில் இருந்த புறாக்​களின் கூடு​களை...