Google search engine
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு ஜிகாத்' வெற்றி பெறாது என்று அந்த மாநில துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னா விஸ் தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் 20-ம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), தேசிய வாத...
அரசு அதிகாரிகள் போல நடித்து, தனிப்பட்ட நபர்களின் செல்போனில் தொடர்பு கொண்டு போலியாக மிரட்டல் விடுக்கும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற மோசடி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக மக்களுடன் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில்,...
 டெல்லியில் காற்றின் தரம் இன்றும் (திங்கள்கிழமை) மிக மோசமாக இருக்கிறது. தலைநகர் டெல்லி இந்தியாவிலேயே மிக மோசமான காற்றுமாசு கொண்ட நகரமாக அறியப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே டெல்லிக்கு காற்று மாசு பெரும் சவாலாக இருக்கிறது. இந்நிலையில், தீபாவளி வாரம் தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் காற்றின் தரம் இன்றும் (அக்.28) மிக மோசமாக உள்ளது. கடந்த 24 மணி நேர சராசரியின்படி இன்று காலை 6 மணியளவில் டெல்லியில் காற்றின்...
எழுபது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்துக்கான பெயர் பதிவு அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த நடைமுறைகளை பிரதமர் நரேந்திர மோடி வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எழுபது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் அவர்களின் வருமானத்தை பொருட்படுத்தாமல் மருத்துவக் காப்பீடு அளிக்கும் 'ஆயுஷ்மான் பாரத் - பிரதமர் ஜன ஆரோக்கிய யோஜனா' திட்டத்துக்கு...
குஜராத்தின் அகமதாபாத் நகரில் போலி ஆவணங்களுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் நாட்டின் பல பகுதிகளில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு போலி ஆதார் அட்டைகள், பான் அட்டைகளை ஒரு கும்பல் வழங்கி வருகிறது. இவ்வாறு போலி ஆவணங்களுடன் இந்தியாவில் பல இடங்களில் தங்கியிருக்கும் வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். புனே அருகில் உள்ள...
மகாராஷ்டிர தேர்தலில் முக்கிய திருப்பமாக வோர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரேவை எதிர்த்து சிவசேனா சார்பில் மிலிந்த் தியோரா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் முக்கிய நபராக அறியப்பட்ட மிலிந்த் தியோரா மனக்கசப்பின் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார். இந்த நிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள அவருக்கு மும்பை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வைப்பதென கட்சி மேலிடம் முடிவெடுத்தது. சிவசேனா (யுபிடி) கட்சியின்...
வங்கக் கடலில் உருவான டானா புயல் நேற்று அதிகாலை ஒடிசாவில் கரையைக் கடந்தது. இந்த புயலின் பாதிப்பால் மேற்கு வங்கத்தில் ஒருவர் உயிரிழந்தார். கடந்த 19-ம் தேதி வங்கக் கடலின் அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, பின்னர் புயலாக மாறியது. டானா என்று பெயரிடப்பட்ட இந்த புயல் ஒடிசாவின் புரி மாவட்டம், மேற்கு வங்கத்தின் சாகர் தீவு இடையே வியாழக்கிழமை நள்ளிரவு முதல் கரையைக் கடக்கும் என்று...
உயர்கல்விக்காக தங்களது குழந்தைகளை கனடாவுக்கு அனுப்பவேண்டாம் என்று பெற்றோருக்கு கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் வர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடாவில் கடந்த ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். அதில் சஞ்சய் வர்மாவையும், பிற இந்திய தூதரக அதிகாரிகளையும் கனடா தொடர்புபடுத்தியது. இந்தக் குற்றச்சாட்டுகளால் கடும் அதிருப்தி அடைந்த மத்திய அரசு, இந்தியாவில் இருந்து கனடா தூதர் மற்றும் அந்நாட்டின் 5...
கேரள மாநிலம் திருச்சூரில் 78 தங்க நகை உற்பத்தி மையங்கள் மற்றும் மொத்த வியாபார கடைகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத 108 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதம் கேரள மாநிலத்துக்கு செல்கிறது. கேரளாவில் கடந்தாண்டு சுமார் 150 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசுக்கு செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை கணக்கிட்டால், குறைந்த அளவில் இருந்தது. கணக்கில் காட்டப்படாமல்...
கடந்த அக்டோபர் 12-ம் தேதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக் கில் கைதாகி உள்ள 5 பேரில் ஒருவர், பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோ லுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் அவருடைய பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்குமுன், லாரன்ஸை போல் அன்மோலும் நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு பொறுப்பேற்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்த வழக்கில்...