உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது.
இதுகுறித்து உத்தர பிரதேச அரசு நேற்று கூறியதாவது: உலகின் மிகப்பெரிய மத விழாவான மகா கும்பமேளா பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. வரும் பிப்ரவரி 26 வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் 45 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று ஏற்கெனவே மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கங்கை, யமுனை, புராணத்தில்...
ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா விண்கலனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்துக்காக திரவ உந்துவிசை அமைப்புடன் கூடிய க்ரூ மாட்யூல் (வீரர்கள் தங்கும் அறை) தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ககன்யான் திட்டத்தை மூன்று கட்டங்களாக பிரித்து செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2 கட்டமான முதல் ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை நடத்துவதற்கான ஆராய்ச்சிகளை இஸ்ரோ தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், இந்த 2-ம் கட்ட திட்டத்துக்கான...
ரயிலில் தீவிபத்து என புரளி ஏற்பட்டதைத் தொடர்ந்து தண்டவாளத்தில் குதித்த 12 பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ்ன் மாவட்டம் மஹேஜி-பார்த் ஹடே ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று மாலை 5 மணியளவில் லக்னோ-மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலில் தீபிடித்து விட்டது என யாரோ புரளியைக் கிளப்பினர். இதையடுத்து பயணிகள் சிலர் அபாயச் சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தினர். ரயிலில்...
மகா கும்பமேளா குறித்தும் இந்து கடவுள்கள் பற்றியும் அவதூறு பரப்பியதாக 2 பத்திரிகையாளர்களை உ.பி. போலீஸார் கைது செய்துள்ளனர்.
உ.பி.யின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோட்வாலி நகர காவல்துறை அதிகாரி அலோக் மணி திரிபாதி கூறுகையில், கும்பமேளா குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட கம்ரான் அலி என்ற பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மதச் சின்னங்களை அவமதித்தற்காக இவர்...
ஜப்பானிலிருந்து புல்லட் ரயில் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் அதிக தாமதம் ஏற்படுவதால், மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் சூரத் - பிலிமோரா இடையே அடுத்தாண்டு...
சிஏஜி அறிக்கைப்படி ரூ.382 கோடி ஊழலில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் குற்றம்சாட்டி உள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மக்கான் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தலைமை கணக்கு தணிக்கையாளர் அமைப்பு (சிஏஜி) 14 அறிக்கைகளை வெளியிட்டுள்ளது....
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் கடந்த 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக கடந்த 9-ம்தேதி அதிகாலை 5 மணி முதல் இலவச டோக்கன் வழங்க திருப்பதியில் 8 இடங்களை திருமலை...
தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் தொடரவும், சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தவும் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று ஒப்புதல் அளித்தது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் தேசிய சுகாதார திட்டம் பல சாதனைகளை படைத்ததாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்....
கடந்த 2024-ம் ஆண்டில் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது தவறவிட்ட பொருட்களை மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எப்) உரிய விசாரணைக்குப் பிறகு அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 2024-ம் ஆண்டு டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது தவறவிட்ட பயணிகளின் உடமைகள் உரிய விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.40.74 லட்சம் ரொக்கம், 89 லேப்டாப், 193 செல்போன்கள், 40 வாட்ச், 9 மங்கள்சூத்ரா எனப்படும்...
வன்தாரா திட்டத்தின் கீழ் 20 யானைகள், மரங்களைத் தூக்கிச் செல்லும் தொழிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளில் பழக்கப்பட்ட யானைகள், வெட்டப்படும் மரங்களை தூக்கிச் செல்லும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் வன்தாரா திட்டத்தின் கீழ் 20 யானைகள் அண்மையில் மீட்கப்பட்டன.
வன்தாரா மீட்பு மையத் திட்டமானது, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் திரிபுரா மாநில உயர் நீதிமன்றத்தின்...









