தெலங்கானாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் கடந்த மாதம் உயிரிழந்தன. பறவை காய்ச்சலே இதற்கு காரணம் என ரத்தப் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மாவட்டங்களில் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தமிழகம், கர்நாடகா, தெலங்கானாவிலும் ஆந்திராவின் கோழிகள் விற்பனை ஆகவில்லை. இதனால் கோழி...
மகாராஷ்டிராவில் கிராமத் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் தனஞ்சய் முண்டேவின் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தின் மசாஜோக் கிராமத்தின் தலைவராக இருந்த சந்தோஷ் தேஷ்முக் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி கடத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஒரு எரிசக்தி நிறுவனத்தை குறிவைத்து மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சியைத் தடுக்க முயன்றதாகக்...
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், சிக்கிய 57 தொழிலாளர்களில் 32 தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய 25 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பத்ரிநாத் கோயிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) முகாமுக்கு அருகே இந்த பனிச்சரிவு ஏற்பட்டதால்...
ஹெலிகாப்டரில் இருந்து எதிரிநாட்டு போர்க்கப்பலை தகர்க்கும் குறுகிய தூர ஏவுகணையை (என்ஏஎஸ்எம்-எஸ்ஆர்), டிஆர்டிஓ மற்றும் கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்தன.
கடற்படை பயன்பாட்டுக்கு, ஹெலிகாப்டர்களில் இருந்து எதிரிநாட்டு போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் குறுகிய தூர ஏவுகணையை (என்ஏஎஸ்எம்-எஸ்ஆர்) டிஆர்டிஓ தயாரித்தது. சுமார் 50 கி.மீ தூரத்துக்குள் உள்ள இலக்கை, இந்த ஏவுகணை மூலம் துல்லியமாக தகர்க்கமுடியும்.
இந்த ஏவுகணையில் ‘மேன்-இன்- லூப்’ என்ற தனிச்சிறப்பான அம்சம் உள்ளது. இதன் மூலம் ஹெலிகாப்டரில்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டுக்குள் இறுதி செய்வது குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கூட்டமைப்பு ஒரே நாணயம், ஒரே விசா நடைமுறையை பின்பற்றுகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு...
நீதிமன்ற உத்தரவை மதிக்காத தொழிலாளர்கள்: செங்கல் சூளையை மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட பெண் உரிமையாளர்
admin - 0
நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செங்கல் சூளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் மதிக்காததால் தான் நடத்தி வந்த செங்கல் சூளையை மூடும் நிலைமைக்கு பெண் உரிமையாளர் தள்ளப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் திருபுரம் அருகிலுள்ள பழையகடா பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பகுமாரி (57). இவர் தனது கணவர் தங்கப்பனுடன் சேர்ந்து பராசாலா பகுதியில் செங்கல் சூளையை நடத்தி வந்தார். கேரள மாநில போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தங்கப்பன்.
இந்நிலையில் செங்கல் சூளையில்...
மணிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அமைப்பினர் வரும் மார்ச் 6-ம் தேதிக்குள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடையவேண்டும் என்று மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா காலக்கெடுவை நீட்டித்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மைதேயி, குக்கி இனத்தவரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரம் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் படையினரிடமிருந்து கொள்ளையடித்துச் சென்ற ஆயுதங்களை தந்துவிட்டு...
பட்டியலின மக்களுக்கு எதிரான மனநிலையில் பாஜக செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பட்டியலின சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் அரசியலமைப்பு சட்ட அமைப்புகளில் ஒன்றாகும். ஆனால் ஆணையத்தின் இரு முக்கிய பதவிகள் கடந்த ஓராண்டாக காலியாக உள்ளன. இதன்மூலம் ஆணையம் பலவீனப்படுத்தப்பட்டு உள்ளது.
சமூக அநீதிகளை எதிர்கொள்ளும் பட்டியலின மக்களுக்காக எஸ்சி தேசிய...
டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் படங்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் கூச்சலிட்டனர். இதனால் 21 எம்எல்ஏக்கள் 3 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால், சட்டப்பேரவை வளாகத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் எதிர்க்கட்சி...
தலைநகர் அமராவதியில் உள்ள பேரவையில், ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டணி அரசு சார்பில் ஆந்திர மாநில நிதி அமைச்சர் வி. கேஷவ் ரூ.3.22 லட்சம் கோடியில் இந்த 2025-26ம் வருவாய் ஆண்டுக்காக நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதில், விவசாய நல திட்டங்களுக்காக ரூ.44 லட்சம் கோடியும், அன்ன தாதா சுக்கீ பவ திட்டத்துக்கா ரூ. 6,300 கோடியும், போலவரம் அணைக்கட்டும் திட்டத்துக்காக ரூ.6,705 கோடியும், அடிப்படை...









