பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு செக் மோசடி வழக்கில் மும்பை நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. ஹார்ட் டிஸ்க் வாங்கியதற்காக ராம் கோபால் வர்மா கொடுத்த செக் வங்கியில் பணமில்லாமல் இரண்டு முறை திரும்பி வந்தைதயடுத்து அவர் மீது கடந்த 2018-ம் மீது காசோலை மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நடப்பாண்டு ஜனவரி 21-ம் தேதி அந்தேரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஒய்.பி.புஜாரி முன்பு...
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்திருந்த பப்பர் கல்சா சர்வதேச தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் உ.பி.யில் நேற்று கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை அடுத்த குர்லியான் கிராமத்தைச் சேர்ந்தவர் லஜர் மசி. ஜெர்மனியின் பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு) தலைவர் ஸ்வர்ன் சிங் (எ) ஜீவன் பாவ்ஜியுடன் இணைந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் லஜர் நேரடி தொடர்பு...
உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜ் நகரில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கி 45 நாட்​கள் நடை​பெற்ற மகா கும்​பமேளா​வில் பக்​தர்​கள் தங்​கு​வதற்கு கூடார நகரம் அமைக்​கப்​பட்​டது. இதில் நட்​சத்​திர விடு​தி​களின் வசதி​களை உ.பி. அரசு செய்​திருந்​தது. மாநில சுற்​றுலா கழகத்​தின் திரிவேணி சங்கம கரை காலனி​யில் 2,100 கூடாரங்​கள், 110 தனிக்​குடில்​கள் கட்​டப்​பட்​டிருந்​தன. இவற்​றில் தங்​கு​வதற்கு இந்​தி​யர்​கள் மற்​றும் வெளி​நாட்​டினர் இணை​யதளத்​தில் முன்​ப​திவு செய்​தனர். சர்​வ​தேச தரத்​தில் நவீன வசதி​களு​டன்...
திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் கடந்த 1983-ம் ஆண்டு முதல், அப்​போதைய முதல்​வர் என்​.டி.​ரா​மா​ரா​வின் ஆலோ​சனை​யின் பேரில் திரு​மலை​யில் பக்​தர்​கள் செலுத்​தும் காணிக்கை பணத்தை அரசு வங்​கி​களில் டெபாசிட் செய்​து, அதில் வரும் வட்​டி​யில் பக்​தர்​களுக்கு அன்​ன​தானம் வழங்கி வரு​கிறது. முதலில் தின​மும் 2,000 பக்​தர்​களுக்கு அன்​ன​தானம் வழங்​கப்​பட்​டது. தற்​போது ஒரு லட்​சம் பக்​தர்​களுக்கு அன்​ன​தானம் வழங்​கப்​படு​கிறது. இதற்​காக திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் தின​மும் ரூ.44 லட்​சம் செல​விடு​கிறது. இந்த அன்னதானத்தை...
பெங்​களூரு பாஜக எம்​.பி.​யும், பாஜக இளைஞர் அணி தலை​வரு​மான தேஜஸ்வி சூர்யா தமிழகத்தை சேர்ந்த கர்​னாடக சங்​கீத பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிர​சாத்தை நேற்று திரு​மணம் செய்​து​கொண்​டார். பெங்​களூரு​வில் நடந்த இந்த திரு​மணத்​தில் பாஜக மூத்த தலை​வர் பி.எல்​.சந்​தோஷ், தமிழக தலை​வர் கே.அண்​ணா​மலை உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். பெங்​களூருவை சேர்ந்த வழக்​கறிஞ​ரான தேஜஸ்வி சூர்யா பாஜக இளைஞர் அணி​யில் தீவிர​மாக செயல்​பட்​டார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்​கள​வைத் தேர்​தலில்...
மகா கும்பமேளாவில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவம் ஒன்றுகூட நிகழவில்லை என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதுகுறித்து உ.பி. சட்டப்பேரவையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பேசியதாவது: பிரயாக்ராஜில் 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவுக்கு நாடு மற்றும் உலகம் முழுவதிலும்...
ஒடிசாவில் மூளைச்சாவு அடைந்த 16 மாதக் குழந்தையின் உடல் உறுப்புகள் தானத்தால் 2 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி 16 மாதக் குழந்தையான ஜன்மேஷ் லேன்கா சேர்க்கப்பட்டார். தவறுதலாக அந்த குழந்தை, வாய் வழியாக விழுங்கிய பொருள் ஒன்று மூச்சுக்குழாயை அடைத்தது. இதனால் மூச்சுத்திணறலுடன் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி...
ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் திட்டத்திற்காக எஸ்எல்பிசி சுரங்கம் தோண்டப்பட்டது. ஸ்ரீ சைலம் முதல் நல்கொண்டா வரை செயல்படுத்தப்படும் இக்கால்வாய் திட்டத்தில் 14 கி.மீ சுரங்கம் தோண்டப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன் சுரங்கத்தில் உள்ள மேற்கூரை திடீரென சரிந்ததால் 8 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கி கொண்டனர். இவர்களை மீட்க இந்திய ராணுவப்படை, பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு படையினர் மற்றும் போலீஸார் என இரவும், பகலுமாக தீவிர மீட்பு...
ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவதை குடும்பத்தினர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரியை கற்களால் தாக்கி கொலை செய்தார். ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டம், ஜெயபடா சேத்தி சாகி பகுதியை சேர்ந்த பிரசாந்த் சேத்தி என்கிற காளியா (65), அவரது மனைவி கனகலதா (62), மகள் ரோசலின் (25) ஆகிய மூவரும் நேற்று காலையில் தங்கள் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். கிராம மக்கள் அளித்த தகவலின்...
மகா கும்பமேளா பற்றி விமர்சனம் செய்த ஆசியாநெட் டி.வி. சேனலின் உயர் அதிகாரிக்கு, ‘ஒவ்வொரு இந்துவுக்கும் நம்பிக்கை முக்கியம்’ என்பதை உரிமையாளர் ராஜீவ் சந்திர சேகர் நினைவு படுத்தியுள்ளார். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது. கோடிக்கணக்கான மக்கள் இதில் புனித நீராடினர். இந்நிலையில் ஆசியாநெட் நியூஸ் என்ற மலையாள செய்தி சேனலில் கடந்த 1-ம் தேதி ‘கவர் ஸ்டோரி’ என்ற தலைப்பில் வெளியான...