ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு தர்மேந்திர பிரதான் மறுப்பு; தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை பகிர்ந்தார்
admin - 0
புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக திமுக மற்றும் பாஜக கூட்டணி எம்.பி.க்கள் இடையே கடும் மோதல் எழுந்துள்ளது. இந்த நிலையில், பிஎம்-ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு கல்வி துறை அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் நேற்று பேசியதாவது: பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு ஒப்புதல் அளித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தை நான் தவறாக...
ஹோலி பண்டிகை நாளில் வீட்டிலேயே இருக்குமாறு முஸ்லிம்களை பாஜக எம்எல்ஏ ஒருவர் கேட்டுக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிஹாரின் மதுபானி மாவட்டம் பிஸ்ஃபி தொகுதி எம்எல்ஏ ஹரிபூஷன் தாக்கூர் பச்சோல். பாஜகவை சேர்ந்த இவர் முஸ்லிம்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஆண்டுக்கு 52 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. இதில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஹோலி பண்டிகை வருகிறது. அன்று இந்துக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட முஸ்லிம்கள் அனுமதிக்க வேண்டும். தங்கள்...
மத்திய பிரதேசத்தின் மோவ் நகரில் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியாவின் வெற்றியை கொண்டாடும்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது மோவ். இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஐசிசி சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் வெற்றியை இளைஞர்கள் கொண்டாடினர். இவர்கள் ஜமா மசூதி வழியாக ஊர்வலமாக செல்லும்போது அவர்கள் மீது...
சுரங்க விபத்தில் உயிரிழந்த 8 பேரில்,ஒரு தொழிலாளியின் சடலம் 16 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேரின் சடலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீசைலம் அணையின் இடதுபுற கால்வாயில் இருந்து தெலங்கானா மாநிலம், நல்கொண்டா வரை 14 கி.மீ தொலைவுக்கு சுரங்க கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நாகர் கர்னூல், எஸ்எல்பிசி சுரங்க கால்வாயில் பணிக்கு சென்றவர்கள் மீது மேற்கூரை...
மதுபான கொள்கையில் நடந்ததாத கூறப்படும் ஊழல் தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகெல், அவரது மகன் வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது முதல்வராக பூபேஷ் பாகெல் இருந்தார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கடந்த 2019 முதல் 2023-ம் ஆண்டு வரை மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மதுபானங்களை சட்ட விரோதமாக விற்று சுமார் ரூ.2,161 கோடி அளவுக்கு...
வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடு குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
admin - 0
“நாட்டில் பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் உள்ளது குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்டம் நேற்று தொடங்கியது. மக்களவை காலை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறும்போது, “நாட்டின் பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெரும்...
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது மேடை சரிந்ததால் காங்கிரஸ் நிர்வாகிகள் காயமடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் உள்ள ரங்மஹால் சதுக்கம் பகுதியில், காங்கிரஸ் எம்எல்ஏ ஜெய்வர்தன் சிங் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏறி நின்று, ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
ஆளும் பாஜக அரசின் விவசாய விரோதக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து...
தெலங்கானா சட்டமேலவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகை விஜயசாந்தி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் சட்டமேலவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
தெலங்கானாவில் காலியாக உள்ள 5 எம்எல்சி பதவிகளில் மூன்றில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், ஒன்றில் அதன் தோழமை கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன. எஞ்சிய ஒரு பதவிக்கு எதிர்க்கட்சியான பிஆர்எஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தி...
மகாராஷ்டிராவில் உள்ள முகலாயர் மன்னர் அவுரங்கசீப் சமாதியை அகற்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் ஆதரவு அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டம் குல்தாபாத்தில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதி உள்ளது. 1707 மார்ச் 3-ம் தேதி அவுரங்கசீப் இறந்தபின் அவரது விருப்பத்தின் பெயரில் இங்கு உடல் புதைக்கப்பட்டது. அந்த கல்லறையை பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர். இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னமாக இந்த கல்லறை உள்ளது.
இந்நிலையில், கொடுங்கோல்...
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மக்களவை தொகுதி உறுப்பினர் அப்பல் நாயுடு. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இவர், தனது தொகுதியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியதாவது: எங்கள் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தற்போது ஒவ்வொரு கூட்டத்தில் பேசும்போதும் மக்கள் தொகை பற்றி பேசுகிறார். நம் நாட்டில் 140 கோடி மக்கள் தொகை இருந்தாலும், வடஇந்தியாவைவிட தென்னிந்தியாவில் மக்கள் தொகை விகிதம் குறைவாக உள்ளது. எனவே, இதை...









