Google search engine
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வரும் 19-ம் தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்கவாசல் தரிசனம் நடைபெறுகிறது. இதற்காக ஆன்லைன் மூலம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கெனவே விநியோகம் செய்துவிட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணி முதல் திருப்பதியில் 8 இடங்கள், திருமலையில் ஒரு இடத்தில் இலவச தரிசன...
கேரளாவில் வயநாடு மாவட்ட காங்கிரஸ் பொருளாளராக இருந்த எம்.எம்.விஜயன் (78) தனது மகன் ஜிஜேஷ் (38) உடன் கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். சுல்தான் பத்தேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஐ.சி.பாலகிருஷ்ணன் தொடர்புடையை கூட்டுறவு வங்கி வேலை ஊழல் காரணமான விஜயன் தற்கொலை செய்து கொண்டதாக ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. கூட்டுறவு வங்கிகளில் வேலை வாங்கித் தருவதாக விஜயன் பணம் வசூலித்து எம்எல்ஏ பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம்...
டெல்லியில் வாழும் ஜாட் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக பாஜக அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார். டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2015-ல் டெல்லி ஜாட் சமூகத்தினரின் தலைவர்களை பிரதமர் இல்லத்துக்கு பாஜக அழைத்து பேசியது. அப்போது மத்திய ஓபிசி பட்டியலில் டெல்லி ஜாட் சமூகத்தினர் சேர்க்கப்படுவார்கள் என உறுதி...
மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று முன்தினம் கூறியிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று கூறியதாவது: மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணி கூட்டம் நடைபெறவில்லை. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் கூட்டம் கூட்டப்பட வேண்டும். மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே இண்டியா கூட்டணி என்றால் அதை...
பிரதமர் மோடி மாணவர்களுடன் 8-வது முறையாக பங்கேற்கும் தேர்வு குறித்து ஆலோசிப்போம் நிகழ்ச்சிக்கு, இது வரை 2.79 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். தேர்வு எழுதும் மாணவர்களுடன், தேர்வு குறித்து ஆலோசிக்கும் (பரிக்ஷா பே சர்ச்சா) நிகழ்ச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக பிரதமர் மோடி பங்கேற்று கலந்துரையாடி வருகிறார். இதில் தேர்வு நேரத்தில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு பிரதமர் மோடி...
உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 1915-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி தேசத்தந்தை மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பினார். இதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கடந்த 2003-ம் ஆண்டு முதல்முறையாக வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த...
டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் போராட்ட களத்தில் மேலும் ஒரு விவசாயி நேற்று தற்கொலை செய்து கொண்டார். டெல்லியின் ஷம்பு மற்றும் கன்னவுரி எல்லையில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்க வகை செய்யும் சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் சங்க பிரதிநிதி ஜெகஜித் சிங் தல்லிவால்...
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மத்திய சிறையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் வந்தது எரப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மத்திய சிறை உள்ளது. 151 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இதில் 2,600 பேர் தங்க முடியும். ஆனால், 3,600 பேர் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மிகவும் பாதுகாப்பு மிகுந்த இந்த சிறையின் பி-பிளாக் அருகே ஒரு ட்ரோன் இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து...
டெல்லி வளர்ச்சி தொடர்பான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறக்கூடாது என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி சட்டப் பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பட்ஜெட்டில் டெல்லி யூனியன் பிரதேசத்துக்குரிய அறிவிப்புகள், திட்டங்கள் எதுவும்...
டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் ரூ.25 லட்சத்துக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் நேற்று கூறியதாவது: ராஜஸ்தானில் மருத்துவக் காப்பீட்டுத்...