கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மேற்குவங்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக தன்னார்வலரான சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த கொடுமைக்கு பின்னணியில் பலர் இருப்பதாக...
பெங்களூருவை சேர்ந்த முதியவருக்கு இலவசமாக செல்போன் அனுப்பி, அதன் மூலம் ரூ.2.8 கோடியை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டை சேர்ந்தவர் ஜே.எம்.ராய் (61). ஐடி நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு கடந்த நவம்பரில் தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, ஒருவர் செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கு பண பரிவர்த்தனையின் அடிப்படையில், இலவச கிரெடிட் கார்ட் மற்றும் ரூ.10 ஆயிரம்...
திருப்பதி ஏழுமலையான் கோயி லுக்கு வரும் பக்தர்களுக்கு அரசர் காலம் முதலே அன்ன தானம் வழங்கப்பட்டு வருகிறது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில் வரும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கியதோடு, அவர் கள் வீடு திரும்பும் வரை பூந்தி, வடை போன்றவற்றையும் கோயில் சார்பில் வழங்கி வந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 1983-ம் ஆண்டு என்.டி.ராமா ராவ் முதல்வரான பின்னர், பக்தர்கள் உண்டியலில்...
சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்தியவர் நதியில் நீந்தி இந்தியாவுக்குள் ஊடுருவினார்: மும்பை போலீஸார் தகவல்
admin - 0
நடிகர் சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்திய ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் வங்கதேசத்தில் இருந்து நதியை நீந்தி கடந்து இந்தியாவின் மிசோரம் மாநிலத்துக்குள் ஊடுருவி உள்ளார் என்று மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15-ம் தேதி இரவு மும்பையில் உள்ள நடிகர் சயீப் அலிகான் வீட்டுக்குள் மர்ம நபர் புகுந்தார். அந்த நபர், நடிகர் சயீபை கத்தியால் பலமுறை குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். கடந்த 19-ம் தேதி மகாராஷ்டிராவின் தானே பகுதியில்...
சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதத்தை அழிக்க மாநில காவல் துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டில் மாவட்ட ரிசர்வ் கார்டு (டிஆர்ஜி) என்ற சிறப்பு படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த படையில் 3,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். சத்தீஸ்கர் காவல் துறையின் டிஆர்ஜி படை மற்றும் மத்திய அரசின் சிஆர்பிஎப் படையை சேர்ந்த 1,000 வீரர்கள் கடந்த சில மாதங்களாக சத்தீஸ்கர் வனப்பகுதிகளில் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனப்பகுதிகளில் தீவிரவாதிகளின்...
வாரிசு பட தயாரிப்பாளர் தில்ராஜுவின் வீடு மற்றும் அலுவலகங்கள் என மொத்தம் 8 இடங்களில் 55 வருமான வரித் துறை அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் விஜய் நடித்த வாரிசு, ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர், நடிகர் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி ஆகியோர் இணைந்து நடித்த ‘சங்கராந்திக்கு ஒஸ்தானு' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரும், தெலங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத் தலைவருமான தில்ராஜுவின் வீடு...
மகா கும்பமேளாவில் 2 சாமியார்கள் 11 கிலோ தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து கொண்டு பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. இதில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலுமிருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். இதில் பஞ்சதஷனம் ஆவஹன் அகாடாவின் மகாமண்டலேஷ்வர் அருண் கிரி, ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட...
அசாம் அரிசியை பயன்படுத்தி அடுப்பு இல்லாமல் வெறும் 15 நிமிடத்தில் இனி சோறாக்கி சாப்பிடலாம். தினந்தோறும் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவோருக்கு இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இந்தியாவின் மிக முக்கியமான உணவு அரிசி. குறிப்பாக, தென்னிந்தியாவில் இதன் பயன்பாடு அதிகம். ஆனால், இதனை சமைத்து சாப்பிடுவதற்கு குக்கர், அடுப்பு, காஸ் மட்டுமின்றி அதற்கான நேரமும் அதிகம். இதனால் பலர் சோறாக்குவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் கொடுத்த வரமாக வந்துள்ளதுதான் அசாம் மாநிலத்தில்...
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உத்தராகண்ட் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
மத பாகுபாடின்றி பொது மக்கள் அனைவருக்கும் ஒரேவிதமான சட்ட விதிமுறைகளை பின்பற்ற பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என உத்தராகண்ட் பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி இந்த மசோதாவை உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பாஜக அரசு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது. அங்கு பெரும்பான்மை ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு...
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் வங்கதேச மக்கள்: பல்வேறு மாநிலங்களில் 6 கோடி+ பேர் வசிப்பதாக தகவல்
admin - 0
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வங்கதேச மக்கள் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். சுமார் 6 கோடிக்கும் மேற்பட்ட வங்கதேச மக்கள் இந்தியாவில் வசிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலிவுட் நடிகர் சயீப் அலிகானின் மும்பை வீட்டுக்குள் அண்மையில் புகுந்த திருடன், அவரை 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். பல நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு மகாராஷ்டிராவின் தானே பகுதியில் பதுங்கியிருந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்பவரை போலீஸார் கைது...










