Google search engine
 தெலங்கானா மாநிலம் மகபூப்​ நகர் மாவட்​டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒரு​வர் சாலை விபத்​தில் இறந்​துள்​ளார். அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்ய ஜட்​செர்லா அரசு மருத்​து​வ​மனை​யின் பிணவறை​யில் கொண்டு சென்று வைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், காலை​யில் சென்று பார்த்தபோது, அந்த இளைஞரின் உடலை தெரு​ நாய்​கள் கடித்து குதறி இருந்ததை அறிந்த மருத்​து​வர்​கள், உறவினர்​கள் அதிர்ச்சி அடைந்​தனர். இதையடுத்து அந்த இளைஞரின் உறவினர்​கள் உடலை வாங்க மறுத்து ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதுகுறித்து...
அமெரிக்​கா, இஸ்​ரேல் - ஈரான் இடையி​லான போர் மத்​திய கிழக்கு வளை​குடா நாடு​களில் தீவிரமடைந்து வரும் நிலை​யில், ஓமன் சுல்​தான் மற்​றும் குவைத் இளவரசருடன் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொலைபேசி வாயி​லாக ஆலோசனை நடத்​தி​னார். அப்​போது, அங்கு வசிக்​கும் இந்​தி​யர்​களின் பாது​காப்பு குறித்து அவர் தனது கவலை​யைத் தெரி​வித்து அவர்​களின் பாது​காப்பை உறுதி செய்​யு​மாறு அவர் கேட்​டுக்​கொண்​டார். முன்​ன​தாக, திங்​கள்​கிழமை அன்று சவூதி அரேபி​யா, பஹ்ரைன் மற்​றும் ஜோர்டான்...
அணு ஆயுதம் தயாரிக்​கத் தேவை​யான யுரேனியத்தை செறிவூட்டி வரு​வ​தாகக் குற்​றம்​சாட்​டி, ஈரானில் கடந்த சனிக்​கிழமை முதல் அமெரிக்​க- இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இதையடுத்து ஈரானும் பல்​வேறு அமெரிக்க விமான தளங்​களை குறி​வைத்து பதில் தாக்​குதல் தொடுத்து வரு​கிறது. இந்​நிலை​யில் டெஹ்​ரான் நகரிலுள்ள இந்​திய மாணவர்​களை பாது​காப்​பான இடங்​களுக்கு இந்​தி​யத் தூதரகம் நேற்று மாற்​றி​யுள்​ளது. இதற்கான ஏற்​பாடு​களை அங்​குள்ள தூதரக அதி​காரி​கள் செய்துள்ளனர். இதுகுறித்து டெஹ்​ரான் நகரில் செயல்​பட்டு...
கடந்த 2014-ல் பிரதம​ராக மோடி பதவி​யேற்​றது முதல், தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரு​கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டா கிராமில் பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. இதன் மூலம் உலக தலைவர்களில் பிரதமர் சாதனை படைத்தார். இந்​நிலை​யில் யூடியூபில் அதி​கம் பின் ​தொடர்​வோரை கொண்ட தலை​வர்​கள் பட்​டியலில், பிரதமர் மோடி முதலிடம் பிடித்​துள்​ளார். பிரதமர் மோடி​யின் பெயரிலான யூடியூப் சேனல்,...
போர்ப் பதற்றத்துக்கு இடையே துபாயிலிருந்து டெல்லிக்கு நேற்று முதலாவது ஏர் இந்தியா விமானம் வந்து இறங்கியது. ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா ஆகிய நாடுகள் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் விமான சேவைகள் முற்றிலும் முடங்கின. இதனால் பலர் தாய் நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த போர்ப்...
அ​திக போக்​கு​வரத்து உள்ள சென்​னை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்​களை இணைக்க 5, 6-வது ரயில்​ பாதைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்​துள்​ளது. டெல்​லி, ஹவு​ரா, மும்​பை, சென்னை ஆகிய 4 முக்​கிய பெருநகரங்களை இணைக்​கும் அதிக போக்​கு​வரத்து கொண்ட ரயில்​ பாதைகளில்​ (எச்​டிஎன்) 5, 6-வது ரயில் ​பாதைகளை அமைக்கும் திட்​டம் தொடர்​பான ஆலோ​சனையை ரயில்வே அமைச்​சகம் அண்​மை​யில் தொடங்​கி​யுள்​ளது. இவ்​வாறு 5, 6-வது ரயில்​ பாதைகள்...
ஈ​ரான் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி கொல்லப்​பட்​டதைக் கண்​டித்து நேற்று ஜம்மு காஷ்மீர் முழு​வதும் போராட்​டங்​கள் வெடித்​துள்​ளன. ஸ்ரீநகரில் உள்ள ஐக்​கிய நாடு​களின் ராணுவப் பார்​வை​யாளர்​கள் குழு​வின் தலை​மையகம் முன் கருப்பு கொடி ஏந்​தி​யபடி திரண்ட மக்​கள், அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் அதன் நட்பு நாடு​களுக்கு எதி​ராக முழக்​கங்​களை எழுப்​பினர். இது​போல பண்​டி​போரா பகுதி​யிலும் போராட்​டம் நடைபெற்றது. இதனிடையே வேலை நிறுத்த போராட்​டத்​துக்கு நாளை அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, ஸ்ரீநகரில்...
மகா​ராஷ்டிர மாநிலம், கட்​டோல் பகுதி, ரவுல்​கானில் சுரங்க, தொழில்​துறை வெடிபொருள் உற்​பத்தி செய்​யும் எஸ்​பிஎல் எனர்ஜி லிமிடெட் தொழிற்​சாலை இயங்கி வரு​கிறது. இந்த தொழிற்​சாலை​யில் நேற்று காலை திடீரென வெடி​விபத்து ஏற்​பட்​ட​தாக போலீஸார் தெரி​வித்தனர். இந்த சம்​பவத்​தில் 17 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். இது தொடர்​பாக எஸ்​பிஎல் தொழிற்​சாலை அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: இன்று காலை தொழிற்​சாலை வளாகத்​தில் உள்ள டெட்​டனேட்​டர் பேக்​கிங் யூனிட்​டில் காலை 7 மணி முதல் காலை 7.15...
உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் நேற்று முன்தினம் இரவு திரு​மலைக்கு வந்​தார். அவரை திரு​மலை திருப்பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பிஆர் நாயுடு, நிர்​வாக அதி​காரி எம். ரவிச்​சந்​திரா உட்பட பல உயர் அதி​காரி​கள் வரவேற்​றனர். பின்​னர், இரவு திரு​மலை​யில் தங்​கிய தலைமை நீதிபதி சூர்​ய ​காந்த், நேற்று காலை தனது குடும்​பத்​தா​ருடன் ஏழு​மலை​யானை தரிசனம் செய்​தார். தரிசனம் செய்த பின்​னர், ரங்​க ​நாயக மண்டபத்​தில் தலைமை...
ஈ​ரான் ஏவு​கணை தாக்​குதல் காரண​மாக விமானங்கள் ரத்து செய்​யப்​பட்​ட​தால், துபா​யில் சிக்​கி​யுள்ள பாலிவுட் நடிகை சோனல் சவு​கான், நாடு திரும்ப பிரதமர் மோடியின் உதவியை நாடி​யுள்​ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் தாக்​குதல் நடத்​தி​யதை அடுத்​து, ஈரான் பதிலடி தாக்​குதலில் இறங்​கியது. பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்​தார் உட்பட அண்டை நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​கள் மீது ஈரான் ஏவு​கணை தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதனால்...