தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காவிரி, முல்லைப் பெரியாறு மற்றும் மரபணு மாற்று தொழில்நுட்பம் ஆகிய விவகாரங்கள் முன்னிறுத்தப்பட்டன. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று( ஆக. 26) நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமை வகித்தார். ஆர்பாட்டத்திற்கு பின் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கு...
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏல விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2030-ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடத்துதற்கான ஏல விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான...
புதிய தொழில்நுட்பங்கள் போரின் தன்மையை மாற்றியமைத்துள்ளதால், குறுகிய மற்றும் நீண்ட போர்களுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “வீரர்களின் எண்ணிக்கையும் ஆயுதங்களும் மட்டுமே இனி போதுமானதாக இருக்காது. சைபர் யுத்தம், செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா வான்வழி ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு ஆகியவையே எதிர்காலப் போர்களை...
இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட விரும்புவதாக இண்டியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது: “சமூகம் அதிகளவில் பிரிவினைகளை எதிர்கொண்டு வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும், ஏனென்றால் ஜனநாயக நாட்டில் மிகப்பெரிய அச்சுறுத்தல் அரசாங்கங்களால் மட்டுமே வருவதில்லை, மாறாக மதம், சாதி, மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் சமூகத்தைப் பிரிக்க முயற்சிக்கும்போது, குடிமக்களிடமிருந்துதான் அச்சுறுத்தல்...
தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், நீதிப​தி​கள் சூர்ய காந்த், விக்​ரம் நாத், ஜே.கே.மகேஸ்​வரி, பி.​வி.​நாகரத்னா ஆகிய 5 உறுப்​பினர்​களை கொண்ட உச்ச நீதி​மன்ற கொலீஜி​யம் நேற்று பிற்​பகல் கூடி ஆலோ​சனை நடத்​தி​யது. இதில் நீதிப​தி​கள் ஆலோக் ஆராதே, விபுல் எம்​.பஞ்​சோலி ஆகிய இரு​வரை​யும் உச்ச நீதிமன்ற நீதிப​தி​களாக நியமிக்க மத்​திய அரசுக்கு பரிந்​துரை அளித்​துள்​ளது. இந்​தப் பரிந்​துரைக்கு மத்​திய அரசு ஒப்​புதல் அளித்​தால், குடியரசுத் தலை​வர், இரு​வரை​யும் உச்ச நீதி​மன்ற...
லாபம் பெறு​வதற்​காக பங்குச் சந்​தை​யில் முதலீடு செய்​பவர்​கள் உண்​டு. இதற்​காக அவர்​கள் பல்​வேறு இடங்களிலிருந்​தும் ஆலோ​சனை​ பெறு​வது வழக்​கம். இதைப் பயன்​படுத்தி உ.பி.​யின் வாராணசியி​லிருந்து ஒரு கும்​பல் இலவச ஆலோ​சனை வழங்​கு​வ​தாக அறி​வித்​துள்​ளது. இதற்​காக, அந்த கும்​பல் உ.பி.​யின் வாராணசி​யில் இரண்டு கால்​சென்​டர்​களை​யும் நடத்தி வந்​துள்​ளது. இவர்​கள் காட்​டிய ஆசை வலை​யில் வீழ்ந்​தவர்​கள் தங்​களது வங்கி மற்​றும் டீமேட் கணக்​கு​களின் பாஸ்​வேர்ட் உள்​ளிட்ட அனைத்து விவரங்​களை​யும் கொடுத்துள்​ளனர். இந்​நிலை​யில், ஒரு குறிப்​பிட்ட...
கிரேட்​டர் நொய்டாவில் வரதட்சணை கொடுமையால், ஆறு வயது மகன் கண்முன்னே இளம்பெண் நிக்கி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகு​தி​யைச் சேர்ந்​தவர் விபின். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நிக்கி என்ற பெண்ணை திரு​மணம் செய்து கொண்​டார். இந்த தம்​ப​திக்கு 6 வயதில் மகன் உள்​ளார். விபின் ​ - நிக்கி திரு​மணத்​தின்​போது பெண்​ வீட்​டார்...
 வெளி​நாட்டு வாழ் இந்​தி​யர்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட எம்​பிபிஎஸ் இடங்​களை போலி ஆவணங்​கள் மூலம் மோசடி செய்திருப்​பது அமலாக்​கத் துறை விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. இந்​தி​யா​வில் உள்ள அரசு மருத்​துவ கல்​லூரி​கள் மற்​றும் தனி​யார் மருத்​துவ கல்​லூரி​களில் வெளி​நாட்டு வாழ் இந்​தி​யர்​களுக்கு (என்​ஆர்ஐ) குறிப்​பிட்ட சதவீதம் இடம் ஒதுக்​கப்​படு​கிறது. அதன்​படி ஆண்​டு​தோறும் எம்​பிபிஸ் மாணவர்​கள் சேர்க்கை நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், போலி ஆவணங்​கள் மூலம் என்​ஆர்ஐ ஒதுக்​கீட்டு இடங்​களில் வேறு மாணவர்​களை சேர்த்​திருப்​பது அமலாக்​கத்...
மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வரும், காங்​கிரஸ் மூத்த தலை​வரு​மான ராகுல் காந்தி எக்ஸ் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: எஸ்​எஸ்சி தேர்​வு​களில் முறை​கேடு​கள் நடந்​த​தாக கூறி ராம்​லீலா மைதானத்​தில் அமை​தி​யாக போராட்​டம் நடத்​திய தேர்​வர்​கள் மற்றும் ஆசிரியர்​கள் மீது தடியடி நடத்​தப்​பட்​டது வெட்​கக்​கே​டானது மட்​டுமல்ல, அது ஒரு கோழைத்​தன​மான அரசாங்​கத்​தின் அடை​யாளம். வாக்​கு​களைப் பெறு​வதற்​காக அரசாங்​கம் முதலில் தேர்​தல்​களில் மோசடிகளைச் செய்​தது, பின்​னர் தேர்​வு​களில் முறை​கேடு​களை அனு​ம​தித்​தது, அதைத் தொடர்ந்து வேலைகளை வழங்​கு​வ​தில் தோல்​வியடைந்​தது,...
தெற்கு டெல்லி, மைதான் கார்கி பகுதியை சேர்ந்தவர் பிரேம் சிங். இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் வீட்டை போலீஸார் நேற்று முன்தினம் சோதனையிட்டனர். இதில் நடுத்தர வயதுடைய பிரேம் சிங், அவரது மனைவி ரஜினி, 24 வயது மகன் ஹர்திக் ஆகிய மூவரும் கழுத்து அறுத்து கொல்லப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயங்களை சேகரித்து விசாரணை...