Google search engine
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன் என்று பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து 'எக்ஸ்' வலைதளத்தில் அமித் மாளவியா வெளியிட்ட பதிவில், “ராகுல் காந்தி கடந்த வாரம் ரகசிய வெளிநாட்டு பயணத்தில் இருந்தார். இப்போது அவர் மீண்டும் வெளிநாடு சென்று, மற்றொரு வெளிப்படுத்தப்படாத இடத்துக்கு சென்றுள்ளார். அவர் இவ்வாறு அடிக்கடி ரகசியப் பயணம் செல்வது ஏன்? அடிக்கடி...
மிசோராம், கோவாவுக்கு அடுத்தபடியாக 3-வது முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக திரிபுரா உருவாகியுள்ளது. யுனெஸ்கோ விதிமுறைப்படி ஒரு மாநிலத்தில் கல்வியறிவு பெற்றோர் சதவீதம் 95 என்ற இலக்கை தாண்டினால் அந்த மாநிலம் முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக கருதப்படும். கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் திரிபுராவில் கல்வியறிவு பெற்றோர் சதவீதம் 93.7 சதவீதமாக இருந்தது. 23,184 பேர் மட்டுமே கல்வியறிவு பெறாதவர்களாக இருந்தனர். இந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் திரிபுராவின் கல்வியறிவு பெற்றோர்...
அகமதாபாத் விமான விபத்தில் இறந்த கேரள செவிலியரின் உடல் நேற்று அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அதில் பயணித்தவர்கள், மருத்துவ மாணவர்கள், பொதுமக்கள் என 247 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் விமானத்தில் பயணித்த கேரள செவிலியர் ரஞ்சிதா நாயரும் (37) ஒருவர். அவரது உடல் டிஎன்ஏ பரிசோதனை மூலம் 11...
ஏமாற்றிய காதலனை பழிவாங்குவதற்காக அவரது பெயரில் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்தவர் ரேனி ஜோஷில்டா. இவர் பன்னாட்டு நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் திவிஜ் பிரபாகர் என்பவரைக் காதலித்து வந்தார். ஆனால் திவிஜ் பிரபாகர், இவரது காதலை ஏற்காமல் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜோஷில்டா, தனது காதலரை பழிவாங்க முடிவு...
 23 வயதே நிரம்பிய ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் ஜானவி தங்கேட்டி, வரும் 2029-ம் ஆண்டு விண்வெளியில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பாலகொல்லு பகுதியை சேர்ந்தவர் ஜானவி தங்கேட்டி(23). பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர், அமெரிக்காவின் டைடன்ஸ் விண்வெளி பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம் வரும் 2029-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜானவி தங்கேட்டி 5 மணி நேரம் வரை விண்வெளியில்...
பஞ்சாபில் காலியாகும் மாநிலங்களவை எம்.பி. பதவியை ஏற்க ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால் மறுத்துள்ளார். இதனால், அதன் இடைத்தேர்தல் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி சமீபத்தில் காலமானார். இதையடுத்து அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட மாநிலங்களவை எம்.பி. சஞ்சீவ் அரோரா வெற்றி பெற்றுள்ளார். அவர் எம்எல்ஏ பதவியை ஏற்க...
 ‘‘இந்திய விமானப்படைக்கு அடுத்தாண்டில் 6 தேஜஸ் போர் விமானங்களை விநியோகம் செய்வோம்’’ என எச்ஏஎல் நிறுவன தலைவர் டி.கே.சுனில் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையில் உள்ள மிக்-21 போர் விமானங்களுக்கு மாற்றாக எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து 83 தேஜஸ் -1 ஏ போர் விமானங்களை ரூ.48,000 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த 2021-ல் ஒப்பந்தம் செய்தது. ஆனால் இந்திட்டத்தில் மிகவும் தாமதம் ஏற்படுவதாக இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங்...
கர்​நாடக அரசின் வீட்டு வசதித்​துறை சார்​பில் வீடற்ற ஏழை மக்​களுக்கு வீடு, வீட்டு மனை, வீடு கட்​டு​வதற்கு மானியம் ஆகியவை வழங்​கப்​படு​கிறது. இதில் முறை​கேடு நடை​பெறு​வ​தாக புகார் எழுந்​தது. இந்​நிலை​யில் ஆலந்த் தொகு​தி​யின் காங்கிரஸ் எம்​எல்ஏ பி.ஆர்​.​பாட்​டீல் பேசிய ஆடியோவில், ‘‘ராஜீவ் காந்தி வீட்​டு​ வசதி ஆணை​யத்​தில் ஊழல் தலை​விரித்​தாடு​கிறது. அதி​காரி​கள் அத்​தனை பேரும் பணம் வாங்கி கொண்டே வேலை பார்க்​கிறார்​கள். ஏழை மக்​களிடம் லட்​சக்​கணக்​கில் பணம் வாங்கிக் கொண்டே வீட்டு...
ராஜா ரகுவன்சி கொலை வழக்கில் மேலும் 2 பேரை மத்திய பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சிக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரும் அவரது மனைவி சோனமும் தேனிலவுக்கு மேகாலயா மாநிலத்துக்குச் சென்றனர். அங்கு ரகுவன்சி கொல்லப்பட்டார். சோனம் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ரகுவன்சியை கொன்றது தெரியவந்தது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது....
மேற்கு வங்க சட்டபேரவையில் இருந்து தீபக் பர்மன், சங்கர் கோஷ், அக்னிமித்ர பால் மற்றும் மனோஜ் ஓரான் ஆகிய நான்கு பாஜக எம்எல்ஏக்களை எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் பிமன் பானர்ஜி உத்தரவிட்டார். அவையில் முன்பு கூறப்பட்ட சில கருத்துகளை நீக்குவது தொடர்பான விவாதத்தின்போது இந்த எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சபாநாயகர் இந்த முடிவை எடுத்தார். இதுகுறித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் கூறுகையில், “...