Google search engine
கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.500 கோடி ஊழல் செய்திருப்பதாக சமூக செயற்பாட்டாளர் ஒருவர், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் மனு அளித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ராமமூர்த்தி கவுடா. இவர், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் மனுவை அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2015-ம் ஆண்டில் சுரங்கத்துக்காக நிலத்தை குத்தகைக்கு வழங்கியது, புதுப்பித்தது உள்ளிட்டவற்றில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அப்போது முதல்வராக இருந்த‌ சித்தராமையாவுக்கு...
காமன்​வெல்த், ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் பதக்​கம் வென்ற வினேஷ் போகத் கடந்த ஆண்டு நடை​பெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்​டி​யில் பங்​கேற்​றார். ஆனால், அரை இறு​திப் போட்​டி​யின் கூடு​தல் எடை காரணமாக அவர், தகு​திநீக்​கம் செய்​யப்​பட்​டார். இதைத் தொடர்ந்து மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறு​வ​தாக அறிவித்த வினேஷ் போகத், கடந்த ஆண்டு நடை​பெற்ற ஹரி​யானா சட்​டப் பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸ் சார்பில் போட்​டி​யிட்டு வெற்றி கண்​டார். இந்​நிலை​யில், சர்​வ​தேச மல்​யுத்​தப் போட்​டிகளில் சாதனை...
மும்பை 26/11 தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் அமெரிக்க அரசு ஒப்படைத்துள்ளது. அவர், சிறப்பு விமானத்தில் இன்று இந்தியா அழைத்து வரப்படுகிறார். 2008 நவ.26-ம் தேதி மும்பை சத்ரபதி ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புகுந்த 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். சுமார் 60 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் வெளிநாட்டினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்....
சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் தலைக்கு ரூ.26 லட்சம் விலை வைக்கப்பட்ட 4 பேர் உட்பட மொத்தம் 22 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படையினரின் முன்பாக ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர். இதுகுறித்து பீஜப்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார் யாதவ் நேற்று கூறியதாவது: மாநில அரசின் "உங்களது நல்ல கிராமம்" என்ற திட்டமானது பாதுகாப்புப் படை முகாம்கள் அருகிலுள்ள தொலைதூர பகுதிகளில் வளர்ச்சியை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டது. இதன் மூலம் ஏராளமான...
ம.பி.​யின் நர்​ம​தாபுரம் மாவட்​டம், பிபரியா என்ற இடத்​தில் பகத் சிங் அரசு கல்​லூரி உள்​ளது. இக்​கல்​லூரி தேர்வு விடைத்​தாள்​களை கடைநிலை ஊழியர் ஒரு​வர் திருத்​தும் வீடியோ சமூக வலை​தளத்​தில் வெளி​யாகி அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யது. இந்த விவ​காரத்​தில் கல்​லூரி முதல்​வர் ராகேஷ் வர்​மா, விடைத்​தாள் திருத்​தும் பணிக்​கான பொறுப்பு அதி​காரி ராம்​குலம் படேல் ஆகிய இரு​வரும் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ள​தாக அமைச்​சர் விஷ்​வாஸ் சாரங் தெரி​வித்​தார். கல்​லூரி முதல்​வர் ராகேஷ் வர்மா கூறுகை​யில், “விடைத்​தாள்...
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக் பேசும்போது, "இந்துக்கள் திலகம் அணிகின்றனர். ஆனால் எப்போதும் பாவம் செய்கின்றனர்" என்றார். இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து மெஹ்ராஜ் மாலிக் - பாஜக எம்எல்ஏக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவைக் காவலர்கள் மூலம் இவர்கள் வெளியேற்றப்பட்டனர். காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று 3-வது நாளாக அமளி ஏற்பட்டது. வக்பு...
வக்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில் வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். தலைநகர் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஜெயின் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சிறுபான்மையின மக்களையும், அவர்களின் சொத்துக்களையும் நான் பாதுகாப்பேன். வக்பு...
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நவ்கார் மகாமந்திரத்தை பிரதமர் மோடி உள்ளிட்டோர் உச்சரித்தனர். இந்தியா உட்பட 108 நாடுகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். சமண மதத்தின் 24-வது தீர்த்தங்கரரான மகாவீரரின் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ‘நவ்கார் மகாமந்த்ரா திவஸ்’ நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலையில் தொடங்கி வைத்தார். ஜெயின் இண்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் (JITO) சார்பில்...
அயோத்தி ராமர் கோயிலில் மே 23-ல் ராம் தர்பார் திறக்கப்படுகிறது. இதனை ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுகிறது. இதற்கான பணிகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. கடந்த வருடம் ஜனவரி 22-ல் ராமர் கோயில் பிரதமர் நரேந்திர மோடியால் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. எனினும் கோயிலின் முதல் தளத்தில் ராம் தர்பார்...
ஆந்திர தலைநகர் அமராவதி - ஹைதராபாத் இடையே பசுமை வழி விரைவுச் சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டு, நிலுவையில் இருக்கும் அடிப்படை கட்டுமான திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது. இதன் அடிப்படையில் ஆந்திர தலைநகர் அமராவதியில் இருந்து தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்துக்கு பசுமை வழி விரைவுச் சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக்...